Untitled Document
Untitled Document
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமும் எதிர்பார்க்கும் இலக்கும்......வவுனியா நகரசபையில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடுவோரின் விருப்பு இலக்கங்கள்- (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு) அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும் ...தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேசங்களின் தலையீடு ஏன்?..............சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும...சுதந்திரபுரத்தில் அப்பாவி மக்களை இலக்குவைத்த புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு சிறீ ரெலோ வன்மையாகக் கண்டித்துள்ளது...

Untitled Document

 

 

 

 

 

 

 

 

 
சுதந்திரபுரத்தில் அப்பாவி மக்களை இலக்குவைத்த புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு சிறீ ரெலோ வன்மையாகக் கண்டித்துள்ளது
 
எமது இனிய தமிழ் மக்களே!
பாசிசப்புலிகள் தமது சுய நலத்துக்காக மீண்டும் மக்களை படுகொலை செய்து, அரசியல் லாபம் தேடும் படுபாதகச் செயலை சுந்தரபுரத்து இடைத்தங்கல் முகாமிலே அரங்கேற்றியிருக்கிறார்கள். இந்தக் கொடூரச் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். மனிதாபிமானமற்ற இச்செயலை, நாகாரிகமுள்ள அனைவரும் கண்டிக்க வேண்டுகிறோம். தங்களின் பாதுகாப்பிற்காக அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தும் பயங்கரவாதத்தோடு மட்டும் நின்றுவிடாமல், தமது பிடியில் இருந்து தப்பிச்செல்லும் மக்களையும் படுகொலை செய்யும் கேவலமான இவர்களா தமிழ் மக்களை காப்பாற்றப் போகிறார்கள்? இவர்களா தமிழ் மக்களின் பிரதிநிதிகள்?
சுந்தரபுரத்திலே, உயிரை மட்டும் கைகளில் பிடித்துக்கொண்டு அரசாங்கத்தின் முகாமிலே தங்கியிருந்த அப்பாவி மக்களையும், அவர்களைப் பாதுகாத்து நின்ற இராணுவத்தினரையும் குறி வைத்து நடத்தப் பட்ட இந்த தற்கொலை தாக்குதலை மனித நேயமுள்ள யாருமே மன்னிக்க மாட்டார்கள். இதை நியாப்படுத்த முயற்சிக்கும் அனைவரும் மனிதாபிமானம் அற்றவர்கள். மக்கள் யாரோடு இருப்பது, யாரைத் தலைவராக்குவது என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, ஆயுதம் தாங்கிய ஒரே காரணத்துக்காக ஆயுததாரிகள் தீர்மானிக்க முடியாது. ஆனால் துரதிஷ்ட வசமாக, தமிழ் மக்கள் யாரை நம்பினார்களோ, அவர்களே அந்த மக்களை அடிமைகளை விடக் கேவலமாக நடத்துகின்ற வரலாற்றைக் கண்டும், வாய் மூடி மௌனமாக இருக்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், அந்தக் கொடியவர்களின் பிரச்சாரங்களுக்கு துணைபோவதுடன், அவர்களின் அழிவு முயர்சிகளுக்கு நிதியுதவி வழங்குவதும், இதை தட்டிக் கேட்பவரை துரோகிகளாக வர்ணிப்பதும் மனவேதனை அளிக்கும் செயல்களாகும்.
-அன்று போராட்டதிற்கு புது வடிவம் கொடுத்த எமது தோழர்களையும் தலைவரையும் புலிகள் வாகனத்தோடு வைத்தும், டயர் போட்டும், உயிரோடும் கொளுத்தி நூற்றுக் கணக்கில் கொடூரமாகப் படுகொலை செய்தார்கள். அதை நியாப்படுத்தினார்கள். மக்கள் தட்டிக் கேட்கவில்லை...!
-மற்ற இயக்கங்களைப் படுகொலை செய்தார்கள்-நியாப்படுத்தினார்கள். மக்கள் தட்டிக் கேட்கவில்லை..!!
எமக்கு ஆதரவாக வந்த இந்திய அரசை எக்காரணமும் இன்றிப் பகைத்தார்கள்-நியாப்படுத்தினார்கள். மக்கள் தட்டிக் கேட்கவில்லை...!!!
பின்னர் மக்களையே அடிமகைளாக்கினார்கள்- பணயம் வைத்தர்கள், சுட்டுக் கொலை செய்தர்கள், கப்பம் வசூலித்தார்கள், கட்டாயமாக சிறுவர்களையும், இளைஞர்களையும் தம்மோடு இணைத்தார்கள், பலிக்கடாக்கள் ஆக்கினார்கள்- நியாப்படுத்தினார்கள். மக்கள் தட்டிக் கேட்கவே இல்லை...!!!!
மேலாக, புலிகள் இயக்கத்தில்நியாத்தை தட்டிக் கேட்ட தமது உறுப்பினர்களை காலத்துக்குக் காலம் நூற்றுக் கணக்கில் படுகொலை செய்தார்கள். துரோகிகள் என்றார்கள். மக்கள் தட்டிக் கேட்கவே இல்லை...!!!!!
மக்களால் தெரிவு செய்யப் பட்ட அரசியல் தலைவர்களயும் கொலை செய்தார்கள். மக்கள் தட்டிக் கேட்கவும் இல்லை. புலிகள் காரணம் கூறவும் இல்லை.
இன்று வன்னி மக்களை கேடயமாக்கினார்கள். எவரும் கேட்கவில்லை. அதை விடக்கொடுமை புலம் பெயர் மக்கள் இதை ஆதாரித்ததுதான்.
ஆனால் தமது மக்களையே தற்கொலை குண்டுதாரியால் கொலை செய்யத் தொடங்கியுள்ளார்கள்.
மக்களே இனிமேலும்மெளனிகளாக  இருக்காதீர்கள்.
உங்களையும் உறவுகளையும் கொலை செய்யும் உரிமையை யார் இவர்களுக்கு கொடுத்தது?
எம்மக்களின் தலைவிதியை இந்த நயவஞ்சகர்களிடம் ஓப்படைக்கதீர்கள்.
தம்மைத் தாமே தமிழ் மக்களின் பிரதிநிதியாகக் கூறிக்கொண்டு, தமக்கு தாமே  தேசியத் தலைவர் போன்ற பட்டங்களையும் வழங்கிக் கொண்டிருக்கும் இவர்கள் ஒரு மன நோயாளிகள்.
இவர்களுக்கு இனிமேலும் வக்காலத்து வாங்கும் அனைவருமே தமிழினத்தின் துரோகிகள்தான். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக்கொடூரச்செயலை நியாப்படுத்தியதோடு நிற்காமல், கண்டனம் தொரிவித்தவர்களையும் விமர்சித்திருப்பது மிகக் கேவலமான பச்சோந்தித்தனம். துரோகத்தின் உச்சக்கட்டம்.
மக்களே..!  இப்படியான துரோகிகளை இனம் கண்டு ஒதுக்குங்கள். எம்து மக்களை இவ்வளவு காலமும் அழிவுப் பாதையில் இட்டுச்சென்ற புலிகள், இன்று எம்மினத்தை அழிப்பதை தட்டிக் கேளுங்கள். இவர்களிடம் நியாயம் பேசுவது சாத்தானிடம் வேதம் ஓதுவது போன்றதே. நியாயத்திற்கான எமது அரசியல் முயற்சிகளுக்கும், வேலைத்திட்டங்களுக்கும் ஆதரவு தாருங்கள். எம்மோடு அணி திரளுங்கள் என்று அறை கூவல் விடுக்கிறோம்.

சிறீரெலோ ஊடகப்பிரிவு


 
Updated 13-02-09   <<Feed Back >>   <<Tell Your Friend >>  
 
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.