தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பு தமது இராணுவ பிரிவை கலைத்து நேற்று (07.03.2009) அரச தரப்பினரிடம் ஆயுதங்களை ஒப்படைப்பதாக செய்திகளும், படங்களும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் அமைப்பினர் முழுமையாக தாங்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைத்தர்களா அல்லது இல்லையா என்பதை அரச தரப்பினர்தான் உறுதிப்படுத்தவேண்டும்.எது எப்படியானாலும் எனிவரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பில் கொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் வாங்குதல் போன்றசெயல்கள் முற்றாக ஓழிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் சுதந்திர புருசர்களாக வாழவேண்டும் என்பதே கிழக்கு மாகாண மக்களின் அபிலாசைகளாகும்.
இதேநேரம் விடுதலை புலிகள் அமைப்பினர் முற்று முழுதாக இன்னும் ஓழிக்கப்படாத அல்லது அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை முழுமையாக களையப்படாத நிலையில் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் முழுமையாக ஆயுதங்களை கையளிப்பதானது, 2002ஆம் ஆண்டு கைசாத்திடப்பட்ட (ரணில்-பிரபா) புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் விடுதலை புலிகள் மாற்று இயக்கத்தினரிடமிருந்து ஆயுதங்களை களைந்துவிட்டு ரணில் தலமையிலான சிங்கள பேரினவாத அரசின் அருசனையுடன் யாழ்பாண குடாநாட்டிலிருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாற்று இயக்க நிராயுதபாணிகளையும், புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஓத்துப்போகாத பொதுமக்களையும் வகைதொகையின்றி விடுதலைப் புலிகள் கொன்று குவித்தனர் என்பதை கவனத்தில் எடுத்து கொள்ளுதல் வேண்டும்.
இதேபோன்றதொரு நிலமை கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலியுறுப்பினர்களுக்கு நேராது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. தமிழ் மக்கள் விடுதலைபுலிகளின் முக்கிய தலைவர்கள் வேனுமானால் அரச பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பில் தங்களின் பாதுகாப்பை உறுதிகொண்டிருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருக்கும் அடிமட்ட இயக்க உறுப்பினர்களின் கதி என்ன என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
சமாதான காலத்தில் யாழ்குடா நாட்டுக்குள் ஆயுதங்களுடன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அங்கு நிராயுத பாணிகளாகப்பட்ட அனைத்து ஈ.பி.டி.பி உறுப்பினர்களையும் தேடித்தேடி சுட்டவர்கள் என்பது அந்த பிள்ளைகளை பெற்ற தாய்மார்களிடம் போய்கேட்டால் தெளிவாக தெரிந்துகொள்ளலாம். அந்த நேரத்தில் ஈ.பி.டி.பி தலைவர் டக்லஸ் தேவானந்தா, அரசாங்க படையினரின் பாதுகாப்பில் கொழும்பிலிருந்து கொண்டு தன்னை மட்டும் பாதுகாத்துக்கொண்டாரே ஒழிய, தனது இயக்க உறுப்பினர்கள் விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்படும் பொழுது கண்டும் காணாமலிருந்தார். தனது கட்சியிலிருந்த உறுப்பினர்களை பாதுகாப்பதற்கு அவர் எந்த நடவடிக்கையையும் அந்த நேரத்தில் அவர் மேற்கொண்டிருக்கவில்லை.
அதுநேரம் ரணில் அரசாங்கத்தினரும் விடுதலை புலிகளால் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் பொழுது கண்டும் காணாமலிருந்தார்கள் அல்லது அதை ஊக்கிவித்தார்கள் என்பதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பானது முதலில் தனியமைப்பாக கருணா தலமையில் இயங்கியது என்பதும் பின்பு அந்த அமைப்பானது இரண்டாக பிரிந்து பிள்ளையான் குழுவாக ஒருபகுதியினரும், கருணா குழுவாக ஒரு பகுதியினரும் செயல்பட்டார்கள் என்பதும், இரு பகுதியினருக்குமிடையிலான பகமை உணர்வு காரணமாக அந்த அமைப்பிலிருந்த அப்பாவி இளைஞர்கள் பலர் படுகொலை செய்யபட்டார்கள் என்பது யாவரும் அறிந்ததே.
இந்த கொலைகள் தொடர்பாக யாருமே இதுவரை அரச படையினரால் கைதுசெய்யபடவில்லை என்பதும், யார், யாரை கொலை செய்தார்கள் என்கின்ற விபரங்களைகூட அரசதரப்பினரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை அல்லது தெரிந்தும் தமிழர்கள்தானே சாகிறார்கள் என்கின்ற ரீதியில் கிழக்கு மாகாணத்தில் நடக்கும் படுகொலைகளை அரச தரப்பினர் வேண்டுமென்றே ஊக்கிவித்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
அரச தரப்பினரே கிழக்கு மாகாணத்தில் பல தமிழர்களை படுகொலை செய்துவிட்டு அனைவரும் விடுதலைபுலிகள் (பயங்கரவாதிகள்) என்கின்ற தோறணையில் கிழக்கு மாகாணத்தில் நடக்கும் படுகொலைகளை மூடிமறைத்தார்கள். அரச படையினரால் கிழக்கு மாகாணத்தில் எந்தனையோ அப்பாவி இளைஞர்கள், பொதுமக்கள் படுகொலை செய்யபட்டார்கள், கடத்தப்பட்டு காணாமல் போயிருக்கிறார்கள். இது இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்த சம்பவங்களையிட்டு அரசதரப்பினரால் யாரும் கைதுசெய்யபடவில்லை இதுவரை இந்த சம்பவங்களையிட்டு எந்தவித நீதி விசாரனையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும்.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டகளப்பில் ஆண், பெண் என்று பாராமல் பலபேர்; நாளும் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்கின்ற செய்திகள் ஊடகங்களில் (பத்திரிகைகளில், இணைய தளங்களில்) நாளாந்த செய்தியாக வெளிவந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலமையில் பிள்ளையான் தலமையில் இயங்கும் தமிழ் மக்கள்.விடுதலை புலிகளிகள் இயக்க உறுப்பினர்கள் (சும்மா பெயருக்கு கொஞ்ச ஆயுதங்களை) அரசாங்கத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள். மற்றைய கருணா தலமையில் இயங்கும் தமிழ் மக்கள் விடுதலை புலியுறுப்பினர்கள் அரசாங்கத்திடம் ஆயுதங்களை ஒப்படைப்பதாக எந்தவித தகவல்களும் அரசாங்க தரப்பிலிருந்தோ அல்லது கருணா தரப்பிலிருந்தோ வெளிவரவில்லை என்பது குறிப்பிட தக்கதாகும்.
கடைசியாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கருணா தலமையில் இயங்கும் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் தாங்கள் தற்போதைக்கு ஆயுதங்களை கையளிக்க போவதில்லை என அறிவித்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், அச்சுறுத்தல்கள் இருக்கும் போது ஆயுதங்களை கையளிக்க முடியாதுள்ளது. கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் செயல்படும் சில குழுக்களினால் இன்னும் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. இதன் காரணமாகவே தற்போதைக்கு ஆயுதங்களை கழையக் கூடிய சூழ்நிலை இல்லை அவர்களைச் சார்ந்த பேச்சாளரான தட்சணாமூர்த்தி கமலநாதன் தெரிவித்துள்ளார். இவர்கள் இப்படி கூறும்போது பொழுது பிள்ளையான் தலமையில் இயங்கும் தமிழ் .மக்கள் விடுதலை புலிகளுக்கு மட்டும் கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்களால் அச்சுறுத்தல்கள் கிடையாதா? எது எப்படியோ சிங்கள பேரினவாத சக்திகள் கிழக்கு மாகாணத்தில் தாம் சாதிக்க நினைத்ததை சாதித்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு கருணாவும், பிள்ளையானும் துணைபோயிருக்கிறார்கள்.
யாதார்த நிலமையை பொறுத்தவரை விடுதலை புலிகள் முழுமையாக பூண்டோடு அழியும் வரையும் அல்லது அவர்களிடமிருந்து முழுமையாக ஆயுதங்களை களையும்வரை, அதேநேரம் கிழக்கு மாகாணத்திற்கான பொலிஸ் நிர்வாக அதிகாரங்களை கிழக்கு மாகாணசபையே முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்வரை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ஆயுதங்களை கையளிப்பது என்பது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் தங்களை தாங்களாகவே அழித்து கொள்ளுவதும் தங்களின் சுயயாதிபத்தை மகிந்த அரசிடம் ஒப்படைகின்ற ஒரு செயல்பாடாகும்.
நன்றி-இலக்கியா இன்போ.
|