அபு சுலைமான். பகுதி-1
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை உள்நாட்டு பிரச்சினையின் வடிவில் இருந்து சர்வதேச பிரச்சினையின் வடிவமாக இலங்கை அரசாலும்,தமிழ் இயக்கங்களாலும் மாற்றியமைக்கப்பட்டது.
தேசிய இனப் பிரச்சினையின் முக்கிய மையம் தேசிய இனங்களுக்கு சமத்துவ அந்தஸ்த்து மறுக்கப்பட்டமையாகும்.ஆனால் தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேசங்கள் மூக்கை நுழைப்பதற்கான மையம் இலங்கையின் அமைவிடமும்,திருகோணமலை இயற்கைத் துறைமுகமும்,இயற்கை வளங்களும்,பிரித்தானியா அமைத்த எண்ணெய்க் குதங்களுமேயாகும்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ மேலாதிக்கம் அல்லது சீன,இந்திய இராணுவ விரிவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையியே தேசிய இனப்பிரச்சினை சர்வதேசங்களுக்கு தேவைப்படுகின்றது.சர்வதே சங்களின் தேவையின் அடிப்படையிலேயே அரசும்,புலிகளும்,கட்சிகளும் மாறி,மாறி பயன் படுத்தப்படுகின்றன.இது வரையிலும் தேசிய இனப் பிரச்சினையுடன் தொடர்புபட்;ட சகல விளைவுகளிலும்,சகல குண்டு வெடிப்புகளிலும்,சகல இனப் படு கொலைகளிலும்,சகல இனச் சுத்திகரிப்புகளிலும் இந்திய,அமெரிக்க,சீன,இஸ்ரவேல்,பாகிஸ்தான்,பிரித்தானியா,ஜப்பான்,ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் மறைமுக நிகழ்ச்சி நிரல்,ஆலோசனை,நிதி உதவி,ஆயுத உதவி, பயிற்சி என்பன அடங்கியருக்கின்றன.
1977ல் திறந்த பொருளாதார கொள்கையை ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிமுகப்படுத்தி அமெரிக்க சார்பு நிலையை எடுத்ததுடன் சர்வதேசத்தின் தலையீடு ஆரம்பமாகின்றது.இலங்கையின் அமெரிக்க சார்பை தடுப்பதற்கு அல்லது சமப்படுத்துவதற்கு தமிழ் ஆயுத இயக்கங்களுக்கு இந்திய அரசின் ஆயுத பயிற்சியும்,நிதி உதவியு மென இந்திய தலையீடு ஆரம்பமாகின்றது.இதன் பின்னர் சர்வதேசங்கள் மாறி,மாறி காய்களை நகர்த்த ஆரம்பித்தன.
சர்வதேசத்தின் அதியுயர் தலையீடாக இந்திய-இலங்கை ஒப்பந்தம் அமைந்துள்ளது.இந்திய-இலங்கை ஒப்பந்தம் செயற்படுத்தப்படாமல் தளர்வுற்றிருந்தாலும் கூட அந்த ஒப்பந்தத்தின் ஊடாக சகல நலன்களையும் இந்தியா அடைந்து கொண்டது.தற்போது எஞ்சியிருப்பது இந்தியாவி;ன் ஒரு மாநிலமாக இலங்கையை இணைக்காதிருப்பது மட்டுமேயாகும்.
இலங்கையில் இந்தியா அடைந்து கொண்டிருக்கும் நலன்கள்.
01.திருகோணமலை துறைமுகத்தின் கட்டுப்பாடும்,99 எண்ணெய் குதங்களினதும் 99 வருட குத்தகையும்.
02.இலங்கை முழுவதும் 100க்கு மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விற்பனை உரிமை.
03.மத்திய மலை நாட்டில் 100 க்கு மேற்பட்ட பெருந் தோட்டங்களின் முகாமைத்துவ உரிமை.
04.சம்புர் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம்.
05.மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ்வு ஆராய்ச்சி ஒப்பந்தம்.
06.தலை மன்னார் ஊடான மின்சார வினியோக ஒப்பந்தம்.
07.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்கும் ஒப்பந்தம்.
08.எயார் டெல் தொலைத்தொடர்பு விரிவாக்கம்.
இந்த ஒப்பந்தங்களால் பொருளாதார ரீதியான எந்த நன்மையும் இந்தியாவுக்கு இல்லாது விட்டாலும் கூட ஒரு இறைமையுள்ள நாட்டின் மீதான மேலாதிக்கமும்,இந்து சமுத்திரத்தின் மீதான கட்டுப்பாடும்,ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்துவம் கோருவதற்கான அந்தஸ்த்துமாகும்.
இந்தியா இலங்கையில் அடைந்த நன்மைகளின் ஊடாக அம்பாந்தோட்டை, காலி துறைமுகங்களின் மீதான கட்டுப்பாட்டைத் தவிர மற்ற எல்லா பிரதேசங்களினதும் மீதும் மேலாதிக்கம் கொண்டுள்ளது.அம்பாந்தோட்டை துறைமுகம்மீதான கட்டுப்பாட்டை சீனா கொண்டிருப்பதும்,கிழக்கின் புல் மோட்டையில் உள்ள இல்மனைட் மீதான கட்டுப்பாட்டை ஜப்பான் கொண்டிருப்பதுமே இந்தியாவிற்கு தற்போதுள்ள தலையிடியும்,குறைந்தளவான பின்னடைவுமாகும்.
அடுத்து சீனாவைப் பொறுத்த வரையில் 1972 ம் ஆண்டு அணி சேரா நாடுகளின் கூட்டு மாநாட்டின் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்த காலத்திலேயே தனது இருப்பை பலப்படுத்தும் வேலைத் திட்டங்களை ஆரம்பித்து விட்டது.சீனாவின் மிகப் பெரிய இராணுவ,பொருளாதார விஸ்த்தரிப்பிற்கு தேவையான மசகு எண்ணெய்யை சீனாவிற்கு எடுத்துச் செல்லும்பாதையில் ஒரு கண்காணிப்பு நிலையமே இலங்கையில் உள்ள அதன் தேவையாகும்.அதனை சீனா அடைந்து விட்டது என்றே கூற வேண்டும்.அதற்காக இலங்கைக்கு சீனா கொடுக்கின்ற வெகுமதிகளே ஆயுத தளபாட உதவிகளும்,ஐ.நா.
பாதுகாப்பு சபையில் இலங்கை மீதான பிரேரணைக்கு எதிரான குரலுமாகும்.
(தொடரும்)
|