Untitled Document
Untitled Document
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமும் எதிர்பார்க்கும் இலக்கும்......வவுனியா நகரசபையில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடுவோரின் விருப்பு இலக்கங்கள்- (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு) அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும் ...தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேசங்களின் தலையீடு ஏன்?..............சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும...சுதந்திரபுரத்தில் அப்பாவி மக்களை இலக்குவைத்த புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு சிறீ ரெலோ வன்மையாகக் கண்டித்துள்ளது...

Untitled Document

 

 

 

 

 
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சரத் பொன்சேகாவா?
 

சுவிஸில் இருந்து ஏ.யூ.எல்.எம்.உறாரிஸ்.

இலங்கையில் புலிகளுடனான யுத்தத்தை வெற்றி கொண்ட இரண்டு உறீரோக்கள் உள்ளனர். ஒருவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.இன்று இலங்கையின் 70 வீதமான சிங்கள மக்களின் கதாநாயகர்களாக இவர்கள் இருவருமே காணப்படுகின்றனர். ஆனால் இவர்களில் ஜனாதிபதியே யுத்தத்தின் வெற்றிக்கு 100 வீத காரணம் என்பதாக சிங்கள தேசத்தில் கதைகள் புனையப்படுகின்றன.அரச ஊடகங்கள் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன.யுத்தத்தை வெற்றி கொண்ட ஜனாதிபதி மீண்டும் தேர்தல் இன்றி தெரிவு செய்யப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.மகிந்த சிங்கள தேசத்து மன்னர் போலவும் அவரது சகோதரர்கள் இளவரசர்கள் போலவும் கட்டமைக்கப்படுகின்றனர்.

ஜனாதிபதியினதும்,சகோதரர்களினதும் செயற்பாடுகள் அனைத்தும் தேர்தலை மையப்படுத்தியதாகவே காணப்படுகின்றது.நாட்டிலும் எந்த தேர்தல் முதலில் என்பது பற்றியதான பேச்சுக்களாகவே காணப்படுகின்றது.எந்த தேர்தலை முதலில் நடாத்துவது தனக்கும்,தனது குடும்பத் துக்கும் நன்மையானது என்பதை கணக்கிட்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ஸ, யுத்த வெற்றியில் பங்கெடுத்த இரண்டாவது உறீரோ சரத்பொன்சேகாவை களத்தில் இருந்து அகற்றுவதற்காக புதிய பதவி ஒன்றை உருவாக்கி அதில் அவரை உட்காரவைத்து சப்தமில்லாமல் ஒதுக்க ஆரம்பித்திருக்கின்றார்.இந்த சப்தமில்லா சதியை புரிந்து கொண்ட சரத் பொன்சேகா யுத்த வெற்றி இராணுவத்திற்கே உரியது என பேசத் தொடங்கியிருக்கிறார்.

சரத் பொன்சேகாவின் மன மாற்றத்திற்கு பின்னால் எதிரணி அரசியல் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க,மங்கள சமரவீர,சோமவங்ஸ அமரசிங்க ஆகியோரும் இந்தியா சீனா தவிர்ந்த சர்வதேச நாடுகளின் ராஜதந்திர, உளவுப் பிரிவுகளின் அதிகாரிகளும் செயற்படுகின்றனர்.
இந்த பின்னணியை அரசாங்கம் புரிந்து கொண்டதன் வெளிப்பாடே,அரசை கவிழ்ப்பதற்கு சர்வதேச,உள்நாட்டு சதி நடைபெறுவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறுவதன் அர்த்தமாகும்.

யுத்த வெற்றிக்கு இராணுவ திட்டமிடலே முக்கிய காரணம் என்பதை சிங்கள மக்களுக்குள் கொண்டு செல்வதற்கான பிரச்சாரத்தை ஏற்கனவே ஜே.வி.பி ஆரம்பித்துவிட்டது.சர்வதேசத்தின் காய் நகர்த்தல்களை புரிந்து கொண்டதன் காரணமாகவும்,சரத் கொன்சேகாவின் உரைகள் காரணமாவும்,ஜே.வி.பி.யின் பிரச்சாரத்தின் தாக்கம் காரணமாகவும் ஜனாதிபதி தேர்தல் பற்றி உரத்து சப்தமிட்ட அரசாங்கம் இரு வார காலமாக அடக்கிவாசிக்க தொடங்கியிருக்கிறது

சரத் பொன்சேகா மட்டுமல்ல பல உயர்மட்ட தளபதிகளும் அடிப்படையில் யூ.என்.பி கட்சி சார்புடையவர்களே.யூ.என்.பி. அமெரிக்க ஐரோப்பியசார்புடையது என்பதும்,சரத் பொன்சேகா அமெரிக்க வதிவிட விஸா பெற்றவர் என்பதும் இரகசியமானதல்ல.இந்த அமெரிக்க ஐரோப்பிய சார்பு பின்னணியிலேயே சரத் பொன்சேகாவின் மனமாற்றம் நடைபெற்றிருக்கின்றது.

நடந்து முடிந்த யுத்தத்தில் அமெரிக்க ஐரோப்பிய நலன்களும் ஆலோசனைகளும் பின் தள்ளப்பட்டு,சீன,இந்திய நலன்களும்,ஆலோசனைகளும் மகிந்த ராஜபக்ஸ சகோதரர்களால் முன்னெடுக்கப்பட்டது.பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபேண்ட் நேரத்தை வீணடித்து விட்டார் என்று கோத்தாபய ராஜபக்ஸ கூறுமளவுக்கு அமெரிக்க,ஐரோப்பிய நலன்கள் அவமானப்படுத்தப்பட்டது.இந்த அவமானத்தை தாங்கிக் கொண்டு இலங்கையில் சகல தளங்களையும் இழந்துள்ள அமெரிக்க ஐரோப்பிய அரச ராஜதந்திரிகள் இலங்கையில் அரசாங்கத்தை மாற்றுவதன் ஊடாக மீண்டும் பலமாக கால் பதிப்பதற்கான நகர்வுகளில் படு தீவிரமாக களமிறங்கியிருக்கிறார்கள்.யூ.என்.பி கூட்டமைப்பை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு
வருவதன் மூலம் மட்டுமே இந்திய சீன தளங்களைப் பலவீனப்படுத்தி அமெரிக்க ஐரோப்பிய தளங்களைப் பலப்படுத்த முடியும் என்ற அடிப்படையி
லேயே மேற்குலகு விழித்திருந்து செயற்படுகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை ஜனாதிபதியாக்க மேற்குலகு விரும்பியது.இந்த செயற்பாட்டு;க்கு பிரபாகரன் கடைசி வரைக்கும் ஒத்துழைக்கவில்லை.யாழ் ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம்,மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆகியோர் மக்கள் வாக்களிக்க இடமளிக்கப்பட வேண்டும் என பிரபாகரனிடம் நேரடியாக கேட்டும் பிரபாகரன் அசைந்து கொடுக்காததன் காரணமாக ரணில் தோல்வியடைந்ததால் மேற்குலகு பெரும் பின்னடைவை
இலங்கையில் சந்தித்தது.இந்த தோல்வியின் தாக்கமே பிரபாகரன் கடைசியில் கைவிடப்படுவதற்கும் ஒரு காரணமாக அமைந்தது.

யுத்தத்தில் பிரபாகரனும் பயங்கரவாதமும் தோற்கடிக்கப்படுவதற்காக மேற்குலகின் ஆசிர்வாதம் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவிற்கு யூ.என்.பியால் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.இந்திய சீன ஆசீர்வாதம் மட்டுமே மகிந்த சகோதரர்களுக்கு கிடைத்தது.யுத்தம் முடிவடைந்து பிரபாகரனின் தலையிடியும்,தலையீடும் இல்லாத தற்போதய நிலையில்,பிரபாகரனால் மேற்குலகு இழந்;த இலங்கையின் புவியியல்,அரசியல் தளத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கான தற்போதய துரும்பு சீட்டாக சரத் பொன்சேகாவையே மேற்குலகு அடையாளம் காணுகின்றது.யுத்த வெற்றி எழுச்சியை அரைவாசியாக குறைப்பதற்காக இலங்கைக்கு நிதியளிக்கும் சகல வழிகளையும் மேற்குலகு மூடி வருகின்றது.யுத்த வெற்றி எழுச்சியை இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் கொண்டு செல்ல முடியாத அளவிற்கு நிதிப் பிரச்சினை இலங்கை அரசை வாட்டி வதைக்கப் போகின்றது.இலங்கையின் நிதித் தேவையை பூர்த்தி செய்யக் கூடியளவிற்கு சீனாவும்,இந்தியாவும் உதவாது என்ற கடந்த கால அனுபவத்தை மேற்குலகு தற்போது பாவிக்க தொடங்கியுள்ளது.நிதிப் பிரச்சினை மேலெழும் போது யுத்த வெற்றி எழுச்சி குறைய ஆரம்பிக்கும்.இந்த சூழலில் வரும் தேர்தலில் யுத்த வெற்றியின் உறீரோக்களில் ஒருவரான சரத் பொன்சேகாவை யூ.என்.பி,மங்கள சமரவீர ,சந்திரிகா பண்டாரநாயக்கா,முஸ்லிம் காங்கிரஸ்,மனோ கணேசன் கட்சி,ஜே.வி.பி போன்ற மெகா கூட்டணியின் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கான ஒரு ஏற்பாடு தற்போது மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த பொது வேட்பாளருக்கு சிங்கள வாக்காளர்களில் 53 வீதமானவர்களும், தமிழ் மக்களில் 55-60 வீதமானவர்களும், முஸ்லிம் மக்களில் 70 வீதமானவர்களும்,மலையக தமிழ் மக்களில் 55 வீதமானவர்களும் வாக்களிக்க சந்தர்ப்பம் உள்ளதாக கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.இந்த ஏற்பாடுகளுக்காகவும்,திட்டமிடலுக்காகவும் ரணில் விக்கிரமசிங்க தனது நேரத்தை ஐரோப்பிய நாடுகளிலேயே செலவிட்டுக் கொண்டிருக்கின்றார்.சரத் பொன்சேகாவில் மன மாற்றத்தை கொண்டு வருவதற்காக கிங் மேக்கர் மங்கள சமரவீரவும்,ஜே.வி.பியும் சர்வதேசத்தில் சரத் பொன்சேகாவின் நெருங்கிய நண்பரும்பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியுமான பர்வேஸ் முஸாரப் அவர்களும் களமிறக்கப்பட்டு;ள்ளனர்.

இலங்கையில் மேற்குலகிற்கும் இந்திய சீனா நாடுகளுக்கிடையிலான பனிப்போரில் மேற்குலகு தேர்;ந்தெடுக்கும் துரும்பு சீட்டான சரத் பொன்சேகா தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படும் போது அவருக்கான வெற்றி வாய்ப்பு 55-60 வீதமாக காணப்படுவதாக கணிப்பிட்டுள்ளார்கள்.இந்த தகவல்கள் மகிந்த சகோதரர்களின் எதிர்கால கனவை கேள்விக்குள்ளாக்கியுள்ளதோடு எந்த தேர்தலை முதலில் நடாத்துவது என்பதை தீர்மானிப்பதிலும் பெரும் சிக்கலை எதிர் கொண்டுள்ளனர்.

 


 
Updated 20-07-09   <<Feed Back >>   <<Tell Your Friend >>  
 
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.