Untitled Document
Untitled Document
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமும் எதிர்பார்க்கும் இலக்கும்......வவுனியா நகரசபையில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடுவோரின் விருப்பு இலக்கங்கள்- (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு) அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும் ...தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேசங்களின் தலையீடு ஏன்?..............சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும...சுதந்திரபுரத்தில் அப்பாவி மக்களை இலக்குவைத்த புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு சிறீ ரெலோ வன்மையாகக் கண்டித்துள்ளது...

Untitled Document

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 
சுதந்திர கிழக்கு நோக்கி முதல் 41 நாட்கள்
எழுதியவர்-பேராசிரியர் அறுமக்குட்டி போடி
 

முன்னுரை
இலங்கையின் ஒன்பது மாகாண நிர்வாக பிரிப்புகளில் ஒன்றே கிழக்கு மாகாணம் ஆகும். இங்கு மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை பிரதேசங்களை மையமாக இருத்தி உருவாகியுள்ள கிளர்ச்சியானது விரிவடைந்து வருகிறது. இது 1948 இல் இருந்து சுதந்திர இலங்கையின் பெயரிலும் கடந்த சுமார் (30)முப்பது வருடகாலமாகதமிழீழத்தின் பெயரிலும் கிழக்கிலங்கை மக்கள் இழந்து வந்திருக்கும் அடிப்படை மானிட உரிமைகளையும், ஜனநாயக சகவாழ்வையும் மீட்டெடுப்பதற்கான ஒரு வலுவான கோரிக்கையை அடிப்படையாக கொண்டது. ஆகவே இன மேலாதிக்க அரசிடமிருந்தும் பிரதேச மேலாதிக்க தமிழ்த் தலைமைகளிடமிருந்தும் ஜனநாயகத்தை மீட்பதற்கான ஒரு போராட்டமான இக்கிளர்ச்சியை நாம் ஒரு முகப்பட்டு வரவேற்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும், பங்களிக்க வேண்டும் ஒவ்வொரு மனிதனும் தனது பிரசவத்திலிருந்தே இவ்வுலகில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரித்துடையவன்.

இந்த வாழும் சுதந்திரத்தை நிலைநாட்டி கொள்வதற்காகவே கிழக்கு வாழ் பிரசைகள் இன்றைய சூழலில் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுளளார்கள். கிழக்கினது ப10ரண சுயாதிபத்தியத்தை கோரும் வகையில் விரிவடைய வேண்டிய நமது இந்த போராட்டம் எல்லா விடுதலை வேள்விகளையும் போலவே கரடு முரடான முள் பாதைகளினு}டு பயணிக்க வேண்டியுள்ளது.

எனவே இப்படியானதொரு நெருக்கடியான சூழலில் நமது மாகாணத்தின் குடிமக்களாகிய நாம் நமது ப10ர்வீக மூதாதையர் கொண்டிருந்த சமூக நல்லிணக்கம், இன மத வேறுபாட களை கடந்த உழைக்கும் மக்களின் உறவுகள், போன்ற பாரம்பரிய முதுசொம்களை தேடி கண்டு பிடிக்க வேண்டும். அவற்றை து}சுதட்டி, புழுதிவிலக்கி, புதுசாக்கி, செப்பனிட்டு நமது கையகப்படுத்தி கொள்ள வேண்டும். இனவாத சேற்றில் மூழ்கி சிங்களவனென்றும், தமிழனென்றும், முஸ்லிமென்றும் கடந்த நு}ற்றாண்டில் நாம் கொண்ட காழ்ப்புகளை தாண்டி இந்த நு}ற்றாண்டில் புது மனிதர்களாக உருமாற வேண்டும். கடந்துவந்த அனுபவங்களை மறவாமலும் கிழக்கினது பல்லினங்கள் வாழும் சமூக யதார்த்தத்தை கணக்கிலெடுத்தும் நாம் எல்லோரும் ஒப்புரவாக வாழும் வண்ணம் நமது கிழக்கிற்கான ஒரு பலமான அரசியலை நிதானமாக திட்டமிட்டு, ஒழுங்கமைத்து முன்னெடுக்க வேண்டும்.

இந்த நமது சுயாதிபத்தியம் கோரும் அரசியலை நோக்கி மார்ச் - 2 - 2004 அன்று நமது கிழக்கு மாகாணம் ஏற்கனவே தனது முதல் காலடியை எடுத்து வைத்துவிட்டது.

அதேவேளை உடனடியாகவே தொடர்ந்து நாம் முன்னேற முடியாமல் காலம் நம்மை கைவிட்டுவிட்டது. ஆனால் அன்று விழித்துக் கொண்ட கிழக்கின் ஒவ்வொரு மனிதனும் நிமிர்ந்து நின்ற அந்த 41 நாட்களும் எழுதப்படபோகும் எதிர்கால சுதந்திரகிழக்கின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். இந்த 41 நாட்களிலும் நடந்தவை என்ன? நடந்திருக்க கூடாதவை என்ன? இனிமேல் நடக்க வேண்டியவை என்ன? என்கின்ற சம்பவங்களினதும் சிந்தனைகளினதும் தொகுப்போடு வரலாற்றுப் பின்புலத்தினை ஒப்பிட்டு எழுதப்படுவதே இந்தக் கட்டுரைத் தொடராகும்…..

1) அறிமுகம்

அரசியல் சூழல் பற்றிய பொதுநோக்கு பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் வாழ்வதற்காகவே பிறக்கின்றான். ஆனால் இவ்வுலகில் எந்த ஒரு மனிதனும் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாகவும் வாழமுடிகிறதா? வாழுகின்ற ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்வதற்கான போராட்டங்களிலேயே அவனது காலம் கழிகின்றதே? அதனால்தான் இந்த மனித குலத்தின் வரலாறு என்பதே போராட்டங்களின் வரலாறாக……. புரட்சிகளின் வரலாறாக…… நிரம்பிக் கிடக்கிறது.

உலகின் வரலாற்றினுடைய ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு புரட்சியும் தமக்கான சுதந்திரத்தை கொண்டுவரும் என்று எல்லா மனிதர்களும் காலம் காலமாக நம்பிக்கிடக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏமாற்றப்படுவது மட்டுமே நடந்துவருகிறது.

அதேவேளை விடுதலையை கொண்டுவருவதாக வீறு கொண்டு எழுபவர்கள் அதிகாரங்கள் தம்மிடம் வந்ததும் அவரவர்களே புதிய எசமானர்களாகவும் வலம் வரத் தொடங்குகிறார்கள். ஆனாலும் அவர்களின் புதிய அரியாசனங்களும் மக்களின் கோபகனலிலிருந்து தப்பமுடியாது போகும் என்பதையும் வரலாறுகள் நமக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கின்றன.

நமது நாட்டின் கடந்த நு}ற்றாண்டின் இறுதிதசாப்தங்கள் மிக மோசமான முறையில் இனவாதம் கோலோச்சும் நாடாக இலங்கையை அடையாளப்படுத்தி வந்திருக்கின்றன.

இலங்கை அரசினது பேரினவாத போக்கும் தமிழர்தம் தேசியவாத போக்கும் ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைப்பதில் ஒன்றிலிருந்து ஒன்று சளைத்தவை அல்ல என்பதை நிரூபித்திருக்கின்றன.பெரும்பான்மை சிங்கள அரசு சிறுபான்மைத் தமிழர்களை ஓரவஞ்சகமாக நடத்துகிறது என்பதற்காக உரிமைக்குரல் எழுப்பிய தமிழர்தம் தேசியவாதம் ஆயுதபோராட்டத்தை முன்மொழிந்தது. தமிழ்பேசும் இருவேறு மாகாணங்களாய் இருந்த வடக்கும் கிழக்கும் இணைந்து இந்த ஆயுதபோராட்டத்தை நடாத்தியும் வந்தன. இந்த ஆயுத போராட்டத்தின் களபலிகளின் தொடக்கமாக கருதக்கூடியது 1974.06.05எனும் நாள். இலங்கை அரச படைகளிடம் பிடிபடகூடாது என்பதற்காக உரும்பிராய் பொன்.சிவகுமாரன் எனும் இளைஞன் தானே தன்னுயிரை மாய்த்துக்கொண்ட அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

அன்று ஆரம்பித்த இழப்பு ஆனது ஏறக்குறைய போராளிகளாக 27000 இளம் உயிர்களையும் பொதுமக்கள் 70000 பேருமாக தமிழர் தரப்பில் மட்டும் மொத்தம் ஒரு இலட்சத்திற்கு அதிகமானோரை பலிகொண்டுள்ளது.கிட்டத்தட்ட 30 ஆண்டுகால ஆயுத போராட்டத்தில் மிக முக்கியமான இராணுவ பலம் வாய்ந்த அமைப்புத்தான் தமிழீழ விடுதலை புலிகள்.

இந்த இயக்கத்தினது இராணுவ தந்திரோபாயங்களின் முதுகெலும்பாகவும், அமைப்பின் இரண்டாம் தலைமையாகவும் இருபத்தியொரு வருடகாலம் களத்தில் நின்றவர் தான் கேர்ணல் கருணா அம்;மான் என அழைக்கப்படும் முரளிதரன் ஆகும்.இவர் 2004.03.02 ம் திகதி எடுத்த பாரிய முடிவானது முழுமொத்த போராட்டத்தையே ஒரு உலுப்பு உலுக்கியது.

அசைக்க முடியாத தலைமை எனப்பட்ட பிரபாகரனைப் பற்றிய பிரமைமையை ஒரு மூலைக்கு து}க்கி வீசியது. பிரபாகரனை சுற்றியிருந்த மேதகு, தேசியதலைவர், ஏகபிரதிநிதி என்கின்ற ஒளி வட்டங்களையெல்லாம் எங்கோ கடாசியது.

தமிழீழம், தமிழர் தம் தேசியம் எனும் பெயர்களில் நாம் தொடர்ந்து ஏமாற முடியாது என்று யாழ்ப்பாண ஆதிக்கத்திடமும் அதன் பிரதிநிதியான பிரபாகரனிடமும் கிழக்கு மக்களை உரத்து சொல்ல வைத்தார் கருணா அம்மான்.

ஐம்பது வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த “வட-கிழக்கு இணைந்த தாயகம்” என்கின்ற தமிழ் அரசியலின் உயிர் மூச்சு கோஷம் தகர்த்தெறியப்பட்டது. இதுவே எதிர்கால இலங்கையின் அரசியல் போக்கிலும் பென்னம் பெரிய மாறுதல் ஒன்றிற்கு வழிகோலியுள்ளது.மட்டக்களப்பு-அம்பாறை பிரதேசங்கள் இனிமேல் வடக்கு தலைமைக்கு கட்டுப்படாது என்று அதுவரை தன்மூச்சையே தமிழீழத்திற்கு அர்ப்பணித்து வாழ்நாள் முழுக்க உழைத்த ஒரு மூத்ததளபதி, விசுவாசமான தளபதி அறிவிப்பதென்பது பலருக்கும் அதிர்ச்சியானதொன்று தான்.

அதேநேரம் கிழக்குவாழ் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அது அதிர்ச்சியுடன் மகிழ்ச்சியையும்சேர்த்தே கொடுத்திருந்ததென்பதும் நாம் கண்ணால் கண்டதே.ஏன் இப்படி நடந்தது? இது சரியானதா? எப்படி இப்படியொரு வெடிப்புக்கான நியாயங்கள் கவனிக்கப்படாமல் போனது? வெடிப்பின் பின் இதை எப்படி அணுகியிருக்க வேண்டும்? இதன் தொடர்ச்சி எங்கேபோய் முடியும்? என்கின்ற கேள்விகள் நம் ஒவ்வொருவர் மனதுள்ளும் மட்டுமல்ல இந்த அரசியலின் போக்கில் அகப்பட்டு தவிக்கின்ற பலரது மனதிலும் எழுந்துள்ள கேள்விகள் தான்.

ஆனால் இதுபோன்ற அரசியல் மாற்றங்களால் விரும்பியோ விரும்பாமலோ பாதிக்கப்படுகின்ற சாதாரண வட, கிழக்கு பிரசைகளிடம் இவற்றுக்கான பதில்கள் கதைகதையாய் உள்ளன. ஆனால் அதற்காக வாய் திறத்தல்கள் என்பது எழுதாத சட்டங்களாக தடைசெய்யப்பட்டுள்ளன.

இப்படி ஒரு சமூகத்தினது அரசியல் நரம்புகள் நலமடிக்கப்பட்டிருப்பது துப்பாக்கிகளுக்கும் வெடிகுண்டுகளுக்கும் மட்டுமேயன்றி வேறுயாருக்குமே அனுகூலம் தரப்போவதொன றல்ல.

என்பதனால் மக்களின் நலன்களை முன்னிட்டும் கிழக்கு மக்களிடையே இன்று ஏற்பட்டுள்ள சுதந்திர வாஞ்சை கொண்ட முணுமுணுப்புகளுக்கு பகிரங்க அந்தஸ்து வழங்கும் ஒரு முன்முயற்சியாகவுமே இக்கட்டுரை என்னால் எழுதப்படுகின்றது.

2) கிழக்கு மாகாணம் அ) புவியியல் அமைப்பு

இலங்கையின் கிழக்கு கரையோரமாக அமைந்துள்ளது இந்த மாகாணம். மத்திய மலைப்பகுதியில் ஆரம்பித்து வங்க கடலில் பாயும் இலங்கையின் மிகப்பெரும் நதியான மகாவலி கங்கை இம்மாகாணத்தை இரு பகுதிகளாக கூறாக்கி கடலில் கலக்கிறது. அதாவது இந்த கங்கை கடலில் பாயும் வெருகல் பகுதிக்கு தெற்கே மட்டக்களப்பு ஆகவும், வடக்கே திருகோணமலை ஆகவும் இரு பெரும் பரப்புகள் இம்மாகாணத்தற்குரியன.

மட்டக்களப்பு பரப்பு ஆனது ஏறக்குறைய 200 கி.மீ நீளமானதாக மகாவலி கங்கைக்கும் இக்கிழக்கு மாகாணத்தின் தெற்கு எல்லையான குமுக்கன் ஆறுக்கும் இடையே விரிந்து கிடக்கிறது.

இதுவே 1960 ஆண்டு முதல் இரண்டாக கூறு போடப்பட்டு இலங்கை அரசினால் புதியதொரு அம்பாறை எனும் மாவட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இம்மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை எனும் மூன்று நிர்வாக பிரிப்புகளாக (மாவட்டங்களாக) அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது.

இலங்கையின் மத்திய மலைநாட்டில் இருந்து கிழக்கு நோக்கிப் பாயும் மகாவலி கங்கை மட்டும் அன்றி பதுளைக்குண்றுகளில் இருந்து ஓடிவரும் மதுறுஓயா, முந்தனையாறு, மகிளவெட்டுவான்ஆறு, கல்லோயாஆறு (பட்டிப்பளை ஆறு), ஹெடஓயா, வில்லோயா என்று குமுக்கன் ஆறுவரை எண்ணெற்ற நீரோடைகள் இக்கிழக்கு மாகாணத்துக்கு வளம் சேர்ப்பவை ஆகும்.

இக்கிழக்கு மாகாணத்தின் கிழக்கு எல்லையாக வங்க கடலும் மேற்கு எல்லையாக இயற்கையாய் அமைந்த மலையடிவாரங்களும் காணப்படுகின்றது. இந்த கிழக்கு கடலை அண்டிய பிரதேசங்களான நெய்தல் நிலம் எழுவான்கரை ஆகவும் மேற்கு மலையடிவாரங்களில் அமைந்துள்ள நெல் வயல்கள் நிரம்பிய மருதநிலம் படுவான்கரையாகவும் சூரியன் எழுவதையும் படுவதையும் கொண்டமைந்த காரணப்பெயர் பெற்றன.

மட்டக்களப்பில் அமைந்துள்ள சுமார் 45கி.மீ நீளமான நீண்டதொரு வாவியே இந்த எழுவான் கரையையும் படுவான்கரையையும் இயற்கையாக பிரித்து நிற்பதில் முக்கிய பங்கெடுக்கின்றது. இங்குதான் மீன்கள் பாடும் அதிசயம் நிகழ்வதாக ஐதீகம்.

ஆ) சமூக பொருளாதார வாழ்வியல் நோக்குஎழுவான் கரையைப் பொறுத்தவரை திருமலையிலிருந்து தெற்குநோக்கி செல்லும் பிரதான வீதி மூது}ர், வெருகல், வாழைச்சேனை, ஏறாவ10ர், மட்டக்களப்பு, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, கல்முனை, அக்கரைப்பற்று, திருக்கோயில் போன்ற பட்டினங்களை ஊடறுத்து பாணமை, பொத்துவில், குமணை வரை நீண்டு செல்கிறது. இதன் காரணமாக ஓரளவு நவீன உலகுடன் தொடர்புடையதாக இந்த எழுவான்கரை காணப்படுகிறது.

கல்லு}ரிகள் பஸ்நிலையங்கள், தபால்அலுவலகங்கள், வைத்தியசாலைகள், வங்கிகள், மற்றும் நீதிமன்றங்கள், பொலிஸ்நிலையங்கள் போன்றவையும் இப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. மக்கள்தொகை பரம்பலிலும் செறிவான கிராமங்களை இந்த எழுவான்கரையே கொண்டுள்ளது. மேற்படி நாளாந்த வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகளை கொண்டமைந்தவையால் உயர்கல்வி வாய்ப்புகளிலும் இப்பகுதியே முக்கியத்துவமுடையதாயுள்ளது. இதன்கரணமாக அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் கிடைக்கும் உத்தியோகங்களிலும் இந்த எழுவாங்கரை பிரசைகளே அதிகம் இடம்பெற்று வருகின்றனர்.

நீண்ட கடலையும் அதையொட்டிய மணல் மண்தரையையும் இயற்கைவளங்களாக கொண்டமைந்ததால் பொருளாதார வருமானத்தைப் பொறுத்தவரை கடல் மீன்பிடியும் தென்னை, மரமுந்திரிகை, காய்கறித் தோட்டங்களும் அதுசார்ந்த வணிகமும் அதிகளவில் இப்பகுதி மக்களின் தொழில்களாக உள்ளன.

இதுதவிர திருகோணமலையில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகம் சார்ந்த தொழில் வாய்ப்புகளும் பொருளாதார ரீதியாக கிழக்கிலங்கைக்கு மிக முக்கியமாதொன்றாகும். எழுவான்கரை பிரதேசத்தின் அதிக பகுதிகள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசமாக யுத்த காலங்களில் இனங்காணப்பட்டிருந்தது.

படுவான்கரையை பொறுத்தவரை பிரமாண்டமான நெல், தானிய விளைநிலங்களை கொண்டுள்ளது. அகன்று விரிந்த பிரமாண்டமான நிலப்பரப்பை கொண்டது இப்பிரதேசம். சனத்தொகைப் பரம்பல் மிக குறைவானதாகக் காணப்படுகிறது.

இன்றுவரை நவீன வசதிகள் எதனையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பின்றி பிற்படுத்தப்பட்ட பகுதிகளாகவே உள்ளன. ஏழை, உழைக்கும் மக்கள் வாழும் நிலங்கள் கொண்டமைந்த படுவான்கரை வயற்பரப்புகளில் அதிகமானவை போடிமார் என்றழைக்கப்படும் நிலபிரபுக்கள் வசமே உள்ளன.

பெரும்பட்டிகள் என்றழைக்கப்படும் கால் நடை வளர்ப்புகளினதும் உரித்துடையவர்களாக இப்போடிமாரே காணப்படுகின்றனர். இந்த வண்டல் மண்ணின் புதல்வர்களான ஏழை விவசாயிகளின் குழந்தைகள்தான் 1990ற்கு பின் தமிழீழ விடுதலை புலிகளின் ஆளணி தொகுதிகளை நிரப்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு பிளவுக்கு முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகள் இந்த படுவான்கரை பகுதியேயாகும். முன்னொரு காலத்தில் வன்னிமைகளாகவும் குறுநிலபிரதானிகளின் அரசிருக்கைகளாகவும் செயற்பட்ட பழம்பெரும் ராசதானிகள் சர்வசாதாரண கிராமங்களாக இந்த படுவாங்கரையிலேயே உறங்கிக் கிடக்கின்றன. அவ்வகையில் போரதீவு, வீரமுனை, பழுகாமம், மண்முனை என்பன ஒருகாலத்தில் அரசோற்றிய இடங்களாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த பின்னர் கிழக்கு பிளவுவரையான காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அலுவலகங்கள் கொக்கட்டிசோலை பழுகாமம் போன்ற இடங்களிலும் கரடியனாறு குடும்பிமலை பகுதிகளையொட்டி தேனகம், மீனகம் என்கின்ற பென்னம்பெரிய பயிற்சி முகாம்களும் இந்த படுவான்கரை பகுதிகளிலேயே இருந்தன. மேலும்........

 
Updated 01-08-08   <<Feed Back >>   <<Tell Your Friend >>  
   
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.