Untitled Document
Untitled Document
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமும் எதிர்பார்க்கும் இலக்கும்......வவுனியா நகரசபையில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடுவோரின் விருப்பு இலக்கங்கள்- (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு) அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும் ...தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேசங்களின் தலையீடு ஏன்?..............சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும...சுதந்திரபுரத்தில் அப்பாவி மக்களை இலக்குவைத்த புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு சிறீ ரெலோ வன்மையாகக் கண்டித்துள்ளது...

Untitled Document

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 
சுதந்திர கிழக்கு நோக்கி முதல் 41 நாட்கள்
எழுதியவர்-பேராசிரியர் அறுமக்குட்டி போடி
 

அல்பிரட் துரையப்பாவின் படுகொலையும் வட்டுக்கோட்டைத் தீர்மானமும்.

1975ஆம் ஆண்டு யூலை மாதம் 27ஆம் திகதி பொன்னாலை என்னும் ஊரின் வரதராஜப் பெருமாள் கோயில் வாசலின் முன்னால் வைத்து துரையப்பா மீதான படுகொலை நிகழ்த்தப்பட்டது. அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் தயாரித்துக் கொடுத்த திட்டமொன்றின்படியே பிரபாகரன் இப்படுகொலையை நிறைவேற்றியிருந்தார். பொலிசாரின் கெடுபிடிகளில் இருந்து தப்ப கொலையாளி பிரபாகரனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களின் (அமிர்தலிங்கம், தர்மலிங்கம்) மனைவிமார் நகைகளைக் கழட்டிக் கொடுத்து உதவி செய்தும் இருந்தனர். (‘ஈழப்போராட்டத்தின் எனது சாட்சியம்’ பக்:160) இந்த நிகழ்வுகள் தான் “தமிழ்” அரசியலில் துரோகிகள் என்று யாரையும் சுட்டுக் கொல்லலாம் என்னும் வரலாற்றை தொடங்கி வைத்தது. இந்த சித்தாந்தம் எந்த மூளையில் இருந்து பிறந்ததோ அந்த மூளைக்குரிய மனிதன் அதே சிந்தாந்தத்துக்கு பின்னாளில் பலியாகிப் போனதையும் தவிர்க்க முடியவில்லை.

இவ்வேளைகளில் கண்டி ராச்சியத்தின் கிழக்கு கரையோரங்களிலிருந்த துறைமுகங்களையாவது தம்வசப்படுத்தும் முயற்சியில் போத்துகேயர் இடையறாது ஈடுபட்டனர். அவ்வேளை திருகோணமலை மட்டக்களப்பு என்பன போத்துகேயரின் ஆளுகைக்குட்பட்டனவாம். 1622ல் மட்டக்களப்பை போத்துகீசர் கைப்பற்றியுள்ளனர்.

11தமக்கான கொள்கைகளோ மக்களுக்கான சேவைகளோ முக்கியமின்றி வீரவசனங்கள் மூலம் மட்டுமே தலைவராக வரமுயன்றவர் அமிர்தலிங்கம். இவர் போன்றோருக்கு அல்பிரட் துரையப்பாவின் “அரசியல் இருப்பு” சந்தோசம் தராததொன்றாகும் என்பதை முன்னர் கண்டோம். 1975ஆம் ஆண்டு ய10லை மாதம் 27ஆம் திகதி பொன்னாலை என்னும் ஊரின் வரதராஜப் பெருமாள் கோயில் வாசலின் முன்னால் வைத்து துரையப்பா மீதான படுகொலை நிகழ்த்தப்பட்டது. அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் தயாரித்துக் கொடுத்த திட்டமொன்றின்படியே பிரபாகரன் இப்படுகொலையை நிறைவேற்றியிருந்தார்.

பொலிசாரின் கெடுபிடிகளில் இருந்து தப்ப கொலையாளி பிரபாகரனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களின் (அமிர்தலிங்கம், தர்மலிங்கம்) மனைவிமார் நகைகளைக் கழட்டிக் கொடுத்து உதவி செய்தும் இருந்தனர். (‘ஈழப்போராட்டத்தின் எனது சாட்சியம்’ பக்:160)

இந்த நிகழ்வுகள்தான் “தமிழ்” அரசியலில் துரோகிகள் என்று யாரையும் சுட்டுக் கொல்லலாம் என்னும் வரலாற்றை தொடங்கி வைத்தது. இந்த சித்தாந்தம் எந்த மூளையில் இருந்து பிறந்ததோ அந்த மூளைக்குரிய மனிதன் அதே சிந்தாந்தத்துக்கு பின்னாளில் பலியாகிப் போனதையும் தவிர்க்க முடியவில்லை. இவற்றையெல்லாம் முன்னுணர முடியாமல் அமிர்தலிங்கம் போன்றவர்கள் தமது தலைமைப் போட்டிகளுக்காக கண்மூடித்தனமாக இளைஞர்களை வெறியூட்டி வளர்த்தார்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த அரசியலுக்கு வெளியே எந்தவிதமான கட்சிகளினதும் செயற்பாடுகள் இருக்கக்கூடாது எனும் நோக்கில் அவையனைத்தையுமே துரோகம் எனும் சமூகரீதியான ஒரு உளவியல் மனப்பாங்கை உருவாக்கும் பணியில் கூட்டணியின் பேச்சாளர்கள் முக்கிய பங்காற்றினர். த.வி.கூட்டணி தவிர்ந்த வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிடுவதோ, அவற்றோடு இணைந்து செயற்படுவதோ, அவற்றுக்கு ஆதரவளிப்பதோ கூட மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்கின்ற எச்சரிக்கையுடனான செய்தியையே துரையாப்பாவின் கொலை எங்கும் பரப்பியது.

ஆகவே வடக்கு கிழக்கு மக்கள் விரும்பியோ விரும்பாமலோ புரிந்தோ புரியாமலோ இந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் அலைக்குள் அமிழ்த்தப்பட்டார்கள். 1977ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நேரம் தமிழர்விடுதலைக் கூட்டணி யாழ்;ப்பாணம் வட்டுக்கோட்டையில் தனது முதலாவது மாநாட்டைக் கூட்டியது. அந்த மாநாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் விருப்பம் என்பது சுதந்திர தமிழீழத்தை அடைவதே என்ற பிரகடனத்தை நிறைவேற்றினர். 14-05-1976 இல் நிறைவேற்றப்பட்ட இந்த பிரகடனமே இன்றுவரை “வரலாற்று புகழ்மிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானம்” என புகழப்படுகிறது. இதன்படி தமிழீழம் பெறுவதே ஒரே வழி என்கின்ற கொள்கையை தமிழ் மக்கள் அனைவரினதும் ஏக கொள்கையாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பிரச்சாரம் செய்தனர்.

இந்த நேரத்தில் கூட்டணியினரால் தூண்டி விடப்பட்ட இளைஞர் குழாத்தினர் கொலை, கொள்ளை, குண்டுவைப்பு என்று வன்முறையின் உச்சிக்கே போய்கொண்டிருந்தனர். தீவிரவாத நடவடிக்கைகள் மூலம் மக்களின் கவனத்தை இந்த இளைஞர் குழுக்கள் அதிகமாக ஈர்த்தன. இதன் காரணமாக மிதவாதிகளாக இருந்த கூட்டணியினரின் மீதான அபிமானம் திசைதிரும்பத் தொடங்கியது. இன்னிலைமையை சமாளிக்கும் முகமாகவே வட்டுக்கோட்டைத் தீhமானத்தினை நிறைவேற்றி கூட்டணியினர் ஹீரோக்களாயினர்.

ஆனால் தமிழீழம் தமிழீழம் எனச் சொல்லிக் கொண்டு அடுத்து வரவிருந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதையே நோக்காகக் கொண்டு செயற்பட்டனர். தாம் தேர்தலில் போட்டியிடுவது பாராளுமன்றக் கதிரைகளைக் கைப்பற்றிக் கொள்வதற்கே என்ற பகிரங்கமான அசிங்கத்தை மூடி மறைத்துக் கொண்டு தமிழீழத்துக்கான ஆணை கோரியே தேர்தலில் போட்டியிடுவதாக மக்களிடம் கூட்டணியினர் பிரச்சாரம் செய்தனர்.

பாராளுமன்றக் கதிரைகளை கைப்பற்றுவதற்காக போட்டியிடுகின்ற இவர்கள் தமிழீழத்துக்கான ஆணையை மக்களிடம் எதிர் பார்ப்பதாக சொல்லிக் கொண்டு கொழும்பில் போய் எப்படி தமிழீழத்தைப் பெறப்போகிறார்கள் என்கின்ற கேள்விகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து அப்போது எழும்பவில்லை.

இந்தத் தேர்தல் நடைபெறுவதற்கு சிலமாத இடைவெளிகளுக்கு முன்பு தான் மு.திருச்செல்வம் (1976-நவம்பர்), ஜீ.ஜீ.பொன்னம்பலம் (1977-பெப்ரவரி), செல்வநாயகம் (1977-ஏப்ரல்) போன்ற பெருந்தலைவர்களினுடைய இயற்கை மரணங்கள் சம்பவித்தன. இச்சோக நிகழ்வுகள் வடகிழக்கு மக்கள் எல்லோரையும் ஒருவித அனுதாப அலையினூடாக ஒன்று சேர்த்தது. இந்த ஒவ்வொரு மரணங்களின் போதும் தன்னையே அடுத்த தலைமையாக திட்டமிட்டு முன்னிறுத்தி வருவதில் அமிர்தலிங்கம் மிகக்கவனமாகவும், வெற்றிகரமாகவும் காய்களை நகர்த்திக் கொண்டே வந்திருந்திருந்தார்.

நன்றி - தமிழ் அலை

 
Updated 01-08-08   <<Feed Back >>   <<Tell Your Friend >>  
   
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.