Untitled Document
Untitled Document
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமும் எதிர்பார்க்கும் இலக்கும்......வவுனியா நகரசபையில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடுவோரின் விருப்பு இலக்கங்கள்- (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு) அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும் ...தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேசங்களின் தலையீடு ஏன்?..............சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும...சுதந்திரபுரத்தில் அப்பாவி மக்களை இலக்குவைத்த புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு சிறீ ரெலோ வன்மையாகக் கண்டித்துள்ளது...

Untitled Document

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 
சுதந்திர கிழக்கு நோக்கி முதல் 41 நாட்கள்
எழுதியவர்-பேராசிரியர் அறுமக்குட்டி போடி
 

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே கிழக்கிலங்கை தனது ப10ர்வீக குடிகளை கொண்டிருக்கிறது. இங்கு இன்றுவரை காணப்படும் புராண இதிகாசங்களில் விபரிக்கப்படுகின்ற இராவணனாட்சியின் தடயங்கள் அதற்கு சான்று பகர்கின்றன. இராவணனது இரு முக்கிய வணக்கஸ்தலங்களான உகந்தமலையிலும், திருகோணமலையிலும் உள்ள ஆலயங்கள் இக்கிழக்கு மாகாணத்தின் இரு முனைகளிலும் காணப்படுபவை. இராவணன் கோட்டையின் இடிபாடுகளை கொண்ட எச்சங்கள்கூட திருக்கோயிலை அண்டியுள்ள வங்க கடலினுள் காணப்படுகிறது.உலகின் எப்பகுதியாய் இருந்தபோதிலும் நதிக்கரையோரங்களே மனித இனம் தோன்றி வளர்வதற்கு வாய்ப்பான இடங்களாகவும், நாகரிகங்களின் தோற்றுவாய் ஆகவும் இருந்து வந்துள்ளது. இலங்கையை பொறுத்தவரை கதம்மைநதி, களனிகங்கை, மாணிக்ககங்கை போன்றவையே ஆதிக்குடிகளின் முக்கிய தோற்றுவாய்களாகும்.

எழுத்துருவில் நாம் காணக்கிடைக்கின்ற இலங்கையின் வரலாறு கூறும் முதன்மை நு}ல் மகாவம்சம் ஆகும். பாளியை மூலமொழியாக கொண்ட இந்நு}ல் கி.பி. 5ம் நு}ற்றாண்டில் தான் எழுதப்பட்டுள்ளது. இது கூறும் வரலாறு கூட கி.மு.543ம் ஆண்டு விஜயனின் வருகையுடனே ஆரம்பிக்கின்றது. அவனது வருகையின்போது இலங்கையில் இயக்கர் நாகர் எனும் இருவகை பழங்குடிகள் இருந்ததாகவும் அதில் இயக்க குலதலைவியான குவேனியை விஜயன் மணந்ததாகவும் மகாவம்சம் கூறுகின்றது. இந்த மணவாழ்வின் பரம்பரையினர்தான் இன்றைய சிங்களவர்களாகும். நாகர்களின் வழித்தோன்றல்களே தமிழர்களாகவும் அறிகின்றோம். ஆனாலும் இரவணனாட்சி ஆரிய ராமனின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட பின்பு இராவணனின் தம்பி விபீடணன் இலங்கையை ஆண்டபோதும் அதன்பின்பான நீண்டதொரு காலத்தின் வரலாறு குறித்த புராணங்களோ இதிகாசங்களோ எம்மிடமில்லை. சிலவேளை “கடல்கொண்ட லெமூரியா”எனும் பேரழிவின் அனத்தம் அதிலிருந்து கடல்கொள்ளாது தப்பிக்கிடந்த இலங்கைத் தீவினை வரலாறு அற்ற வெற்றுத்தரையாய் மாற்றியிருக்கலாம். ஏனெனில் இன்று நமக்கு கிடைக்கும் வரலாறுகள் எல்லாம் சொல்லும் இலங்கையின் ஆதிகுடிகளான இயக்கர் நாகர் என்போரும் இந்தியாவிலிருந்து தான் வந்ததான ஒருபாடல் மட்டக்களப்பு மான்;மீக கல்வெட்டில் கீழ்வருமாறு காணப்படுகின்றது.

‘அன்னிய நாகர் கூடி அத்தி நாடதனால் மீண்டு வன்றிற விலங்கை சேர்ந்து வாழ்ந்தனர் கலி எண்ணு}றில்’கலியாண்டு 800 என்பது கிட்டத்தட்ட கி.மு. 2389 ஆகும். இதன்பிறகு “நாகரே ஆயிரத்து நானு}று ஆண்டு மட்டும் பாகமா யிலங்கையாள பரு நேர்குலச்துச் சிங்க வாகுவிதவத் தாயீன்ற மகவெனும் விசயன் தந்தை வேகமேகண்டு நொந்து விறல் நகர் மறைந் தொழித்தான்’ என விஜயன் வரவுவரை நாகர் ஆட்சியை விபரிக்கிறது மட்டக்களப்பு மான்மீகம் எனும் பழம்பெரும் நு}ல். அதேபோன்று திமிலர் எனப்படும் இயக்கர்களைப் பற்றி கூட கீழ்வருமாறு அந்நு}லில் அறியமுடிகிறது. “ஆதியிலேயே தென் இந்தியாவில் திமிலர் எனும் ஒரு சாதியினர் வாழ்ந்து வந்தனர்.

அவர்தம் தொழில் மீன்பிடித்தலாகும். அவர் இலங்கையில் குடியேறி மட்டக்களப்பை அடைந்த போது அஃது தம் தொழிலுக்கு வாய்ப்புடையதெனக் கண்டு அரண்செய்து தம் தொழிலை செவ்வனே புரிந்து வந்தனர்.” என்கிறார் மூதறிஞர் எவ்.எக்ஸ்.நடராஜா அவர்கள். இந்த இயக்க குலப் பரம்பரையில் வந்த குவேனியையே விஜயன் மணம் புரிந்தான்.

குவேனிக்கு அடுத்ததாக தனது இரண்டாவது மனைவியை பாண்டி நாட்டிலிருந்து அழைத்து கொண்ட விஜயன் தனது 700 தோழர்களுக்குமான மணப்பெண்களையும் அங்கிருந்தே தருவித்திருக்கின்றான். இந்த பாண்டியர்குல பெண்களையெல்லாம் இந்த கிழக்கு பகுதியிலேயே குடியேற்றியதாக மகாவம்சம் கூறுகிறது. அதாவது பாண்டிநாட்டிலிருந்து விஜயன் தனது குடிகளை இலங்கையிலுள்ள ‘கதிரகல’ மலைச்சரிவில் குடியேற்றினான் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. இக்குடியேற்றம் கிறிஸ்துவுக்கு முன் 483ஆம் ஆண்டு நடைபெற்றிருக்கிறது.

இந்த மலைச்சாரல் கதிரகல எனும் பெயருடன் இன்றுவரை மட்டக்களப்பிலிருந்து தென்மேற்கே சுமார் 27 கி.மீ தொலைவில் காணப்படுகின்றமை முக்கிய அம்சமாகும்.இந்த விஜயனின் வாரிசுகள் மேற்கொண்ட தொடர்ச்சியான அரசோற்றும் மையங்களும் கிழக்கிலங்கையை அடிப்படையாகக் கொண்டே இருந்து வந்திருக்கிறது. என்பதற்கான பலமான ஆதாரங்களும் எமது வரலாறுகளில் நிறையவே உண்டு. இவற்றினு}டாக பார்க்கின்ற போது கிழக்கு என்கின்ற வரலாற்று பெருமைமிகு தேசம் சுமார் 2550 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது என்பது நிரூபணமாகின்றது. இதை யாரும் மறுக்க முடியாதவாறு எமக்கு எழுத்துரு வரலாறுகள் இன்றும் காணக்கிடைக்கின்றது.

ஈ) துட்டகைமுணு - எல்லாள யுத்தம்

இலங்கையின் வரலாற்றின் துட்டகைமுணு - எல்லாள யுத்தம் என்பது ஒரு பெரிய இனமுரண்பாட்டு யுத்தமாகவே நமக்கு கற்றுத்தரப்பட்டிருந்தது. இன்றைய நிலையிலும் சிறிலங்கா இராணுவத் தரப்பில் கெமுணு படைப்பிரிவு ஒன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பில் எல்லாளன்படை என்கின்ற ஒரு பிரிவுமாக பெயரிடப்பட்டிருப்பதன் ரிஷிமூலம் இந்த வரலாறேயாகும். ஆகவே இந்த வரலாற்றின் உண்மைத் தன்மையையிட்டு நாம் கவனம் கொள்ளுதல் அவசியமாகும்.

இலங்கையின் மிக பழமையான வரலாற்றுத் தடயங்களை கொண்ட இராசதானி ‘தீகவாவி’ ஆகும். இதுவும் கிழக்கிலங்கையில்தான் அமைந்துள்ளதென்பது கிழக்கின் வரலாற்று பெருமையை மேலும் உறுதி செய்கிறது. இந்த தீகவாவியானது கிழக்கினது பழம் பெரும் வரலாற்றிலிருந்து பிரிக்கப்பட முடியாதது ஆகும். தமிழர்கள் இதனை மகாகந்த குளம் என்கின்றனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைபற்றுக்கு மேற்கே 22 கி.மீ து}ரத்தில் உள்ள கல்லோயா பள்ளதாக்கில் காணப்படுகிறது இந்த மாகாகந்தகுளம்.கிழக்கிலங்கையின் ஆட்சியதிகாரம் முன்னெடுங்காலத்தில் இந்த தீகவாவியினையே மையமாகக் கொண்டு செயற்பட்டு வந்திருக்கிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்க கங்கையின் கரையோர நகரான “மாகம” எனுமிடத்திலிருந்து உருகுணை ராச்சியத்தை காவந்ததீசன் (துட்டகைமுணுவின் தந்தை) என்பவன் ஆண்டிருக்கிறான்.

இந்த உருகுணை ராச்சியம் என்பதன் வடபுலம்தான் கிழக்கிலங்கை ஆகும். இந்த காவந்த தீசனின் வாரிசான சதாதீசன் தனது தலைநகராக தீகவாவியை கொண்டிருந்திருக்கின்றான். இவனது சகோதரனே இலங்கை வரலாறுகளில் அதிகம் உச்சரிக்கப்படும் துட்டகைமுணு ஆகும். கேளதம புத்தரும் தனது இலங்கை தரிசனங்களின் போது இந்த தீகவாவிக்கு வருகை தந்துள்ளதாக கூறுகின்றது மகாவம்சம்.

கி.மு.145 ல் இலங்கைமீது படையெடுத்து இந்தியாவிலிருந்து வந்த எல்லாளன் என்பவன் பெரும் சேனையோடு திருகோணமலையில் வந்திறங்கி இலங்கையின் பல பகுதிகளை கைப்பற்றினான். தனது தலைநகராக அனுராதபுரத்தை ஆக்கிக் கொண்ட இவன் சுமார் 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். இவ்வேளை உருகுணரட்டையின் பல பகுதிகளும் எல்லாம் இவனது ஆளுகைக்குட்பட்டிருந்தன. அவன் இலங்கையின் முக்கியமானவிடங்களிலெல்லாம் 32 கோட்டைகளை கட்டினான். யாழ்பாணமென்றொரு ராச்சியம் அக்காலை இருந்திருக்கவில்லை. அப்பிரதேசம் மானிடமில்லா வெறும் மணற்றிடராயிருந்தது.

“மணற்றி என்பது அதன் ப10ர்வ நாமம் பின்னாளில் அது மணற்றிடல் எனவும் வழங்கிற்று” என்று யாழ்ப்பாண சரித்திரத்தை 1915இல் எழுதிய ஆ.முத்துதம்பிபிள்ளை என்பார் குறிப்பிடுகிறார் (பக்-01).

யாருமில்லா வெறும்தரையாய் உப்பு கரித்துகிடந்தமையாற்றான் யாழ்பாடிய பாணனுக்கு அது பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது போலும் இந்த பரிசளித்தவன் தான் மேற்கூறிய எல்லாளன்.

இதனை முத்துதம்பிபிள்ளை இப்படிக்கூறுகிறார். ‘யாழில் வல்ல ஒரு பாணனுக்கு பரிசாக கொடுக்கப்பட்டமையின் யாழ்பாணமாயிற்று’ அதன் பின்புதான் இந்த பாணன் தன் ப10ர்வீகமான தொண்டைநாடு திரும்பி அங்கிருந்து மக்களை குடியேற்றியதே வரலாறு. இலங்கையை தனது ஆளுகைக்குட்படுத்தி இருந்த எல்லாளன் தன் சொந்த நாட்டிலிருந்து வந்த யாழ்பாடி குருடனுக்கும் தனக்கு வேண்டப்படாத பகுதியேயாயினும் அதை பரிசாக கொடுத்து தானும் சுமார் 44 ஆண்டுகள் கோலோச்சினான். இந்த எல்லாளனது ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்டியவன்தான் நமது துட்டகைமுணு. கி.மு.101ல் அவன் எல்லாளனை கொன்று இலங்கையை மீட்டான். அனுராதபுரத்தில் இருந்து அரசோற்றிய எல்லாளனுடன் பொருத மாகமயிலிருந்து துட்டகைமுணு திட்டம் தீட்டினான். அப்போது அம்பாறையின் (தீகவாவி) உறுகுணை ராச்சியத்தின் மன்னராக விளங்கிய சதாதீசனது தம்பியாகவும் படைத்தளபதியாகவும் செயற்பட்டவனே இந்த துட்டகைமுணு. பெரும்பாலும் இவனது படைகளில் மட்டக்களப்பு தமிழர்களே நிரம்பி காணப்பட்டிருக்கின்றனர்.

இவன் தமிழனாய் இருந்தபோதும் அன்னியனாகவும் ஒரு ஆக்கிரமிப்பாளனாகவுமே சுதேச மக்களால் எல்லாளன் உணரப்பட்டான். எனவேதான் தமிழ், சிங்கள வேறுபாடுகளின்றி துட்டகைமுணு படைநகர்த்த மாகம தொடங்கி மையங்கனை ஊடாக மட்டக்களப்புவரை சிங்கள தமிழ் மக்கள் ஒன்று திரண்டு எதிரியை துரத்தியடித்தனர். இதனை மட்டக்களப்பு தமிழகம் எனும் நு}லை 1964ல் எழுதிய வீ.சி.கந்தையா பின்வருமாறு குறிப்பிடுகிறார். “ஒரு தமிழனாகவே இருந்தபோதிலும் ஈழநாட்டை கைப்பற்ற வந்த ஒரு அன்னியனேன்றே கொண்டு அவனை எதிர்த்து துரத்துவதே முறையானது. என்ற தாய்நாட்டு பற்றோடு சதாதீசனது ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களும் கைமுணுவின் படையில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதை கைமுணுவின் படைவீரரில் தமிழரும் பலர் இருந்தார்கள் என்ற வரலாற்று குறிப்பு உறுதிப்படுத்துகிறது.”

மாகமம் எனுமிடத்திலிருந்து எல்லாளனுக்கெதிராக கைமுணுவின் தலைமையில் புறப்பட்ட பெரும்படை வடக்கு நோக்கி மகாவலி கங்கையின் கிழக்குகரை வழியே சென்றது” என்கிறார் இந்த வரலாற்றாய்வாளர்.

அதாவது இன்று நாம் வெருகல் ஆறு என்றழைக்கும் மகாவலி கங்கையின் கிளைக்குரிய உண்மைப் பெயர் பேரிகையாறு ஆகும். காரணம் கிழக்கு படைகள் அன்னியனுக்கு எதிராக பாசறை கொண்டு போர் பேரிகை முழக்கிய இடம் என்பதனால் அன்றிலிருந்து வெருகலாறு பேரிகையாறு எனும் காரணப்பெயர் பெற்றது. இங்கேதான் தனிசமரில் கைமுணுவிடம் எல்லாளன் வீழ்ந்தான். வடக்கேயிருந்து வந்த அன்னியனாகிய எல்லாளன் படை இலங்கையை விட்டு ஓட கிழக்கு ராச்சியம் விடுதலை பெற்றது. அது மட்டுமல்ல முழு இலங்கையும் விடுதலையானது.

அந்தக் காலத்தில் கிழக்கில் நிலவிய சாதாரணமான சுதேச மக்களின் இயல்பான உணர்வுகள் மறைக்கப்பட்டு சிங்கள வரலாற்றாளர்கள் துட்டகைமுணுவின் படைகளிலிருந்து அவனை மட்டுமே தனித்தெடுத்து தேசிய வீரனாக்கி இறுதியில் சிங்களக் குறியீடாகவும் ஆக்கிக் கொண்டனர்.

போதாகுறைக்கு தமிழ் இனவரலாற்றாளர்களும் துட்டகைமுணுவிற்கு எதிராக எங்கிருந்தோ வந்த ஆக்கிரமிப்பாளனான அன்னியனை தமிழ் மன்னனாகவும் தமிழ் முது அடையாளமாகவும் உருவகித்தனர். இப்படி சிங்கள வரலாற்றாளர்களுடன் தமிழ் வரலாற்றாளர்களும் சேர்ந்து இலங்கை மக்களின் வரலாற்றை எழுதுவதை விடுத்து சிங்கள வரலாறு என்றும் தமிழ் வரலாறு என்றும் எழுதினர். இனங்களின் வரலாறாக, இனப்பெருமைகளின் வரலாறாக, இன இழிவுபடுத்தல்களின் வரலாறாக எழுதிவிட்டமையே இன்று ஈழம் சிவந்து கிடப்பதற்கான ஆதார ஊற்றாகும்.

உ) முஸ்லிம்களும், முற்குகர்களும்

மட்டக்களப்பில் இன்றுள்ள தமிழர்களில் பெருபான்மையாக இருப்பவர்கள் முற்குகர்களேயாகும். இவர்கள் கூட மட்டக்களப்பின் முற்குடிகள் அல்ல. அதற்குமுன்பே இங்கே வாழ்ந்திருக்கக் கூடிய திமிலர்கள் எனும் மீன்பிடியை தொழிலாக கொண்டவர்கள் துரத்தியடித்த பின்னே இவர்கள் இங்கு குடியேறியுள்ளனர். இலங்கையின் ப10ர்வீக குடிகளில் ஒன்றான இயக்கர்களும் மீன்பிடித்தலையே தொழிலாக கொண்டிருந்தனர் என்பதுவும் இங்கே நோக்கற்பாலது.

எனவே காலப்போக்கில் இந்த இயக்கர்களே திமிலர் என அடையாளப்பட்டிருந்தல் கூடும். திமிலதீவு, வலையிறவு போன்ற மட்டக்களப்பு வாவியின் கரையோர கிராமங்கள் இந்த திமிலர்களின் அடையாளங்கள் ஆகும். இவர்களுடன் அடிக்கடி புதிதாக குடியேறிய முற்குகர்கள் கொண்ட சண்டையானது இறுதியில் அவ்வேளை வியாபார நிமித்தம் ஆப்கானிஸ்தான், துருக்கி போன்றவற்றிருந்து இங்கு வந்து சென்ற பட்டாணிகள் உதவியுடனேயே முடிவுக்கு வந்துள்ளது.

திமிலர்களால் முற்குகர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இவர்களே தடுத்து நிறுத்தியுள்ளனர்.மட்டக்களப்பின் வடக்கே அமைந்துள்ள ‘ஏறாவ10ர்’ எனுமிடம் திமிலர்கள் ஊருக்குள் நுழையாமல் ஏற்படுத்தப்பட்ட தடை குடியிருப்பு ஆகும். அதாவது முக்குகர்கள் தமது சகோதரிகளை பட்டாணிகளுக்கு மணம் முடித்து கொடுத்து காவல் காப்பதற்காக ஏறாவ10ரில் இருத்தினராம். இதைதாண்டி திமிலர்கள் உள்நுழைய கூடாது என்பதற்காக ‘ஏறாவ10ர்’ என அழைக்கப்படலாயிற்று என விபரிக்கிறது மட்டக்களப்பு மான்மீக கல்வெட்டுபாடல்.

இங்கு முக்குகர்களின் குடியேற்றம் என்று ஆரம்பித்ததோ அன்றே மட்டக்களப்பு பட்டாணியர்களின் (இன்றைய முஸ்லிம்களின் மூதாதையர்) வரவும் ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் மட்டக்களப்பின் காவர்களாக தமது உதிரத்தை சிந்திய மண் இது. ழூதிமிலரை துரத்தி சென்று திரும்பிவரும்போது பலரும் சந்தித்த வெளி சந்திவெளி எனவும், எதிரியை கொன்ற இடம் சத்துருகொன்றான் எனவும், சண்டையின் பின் வந்தேறிய (ஆறிய) இடம் வந்தாறுமூலை எனவும் மட்டக்களப்பில் முற்குகர்களும் பட்டாணியர்களும் நிலைகொண்டு வாழ்வதற்காக நடத்தியபோரின் வரலாற்றுத் தடயங்கள் கிராமங்களின் பெயர்களாகி இன்றும் காணப்படுகிறது.

அதுமட்டுமன்றி இந்த பட்டாணியர்கள் மணமுடித்துகொண்ட முற்குல பெண்களினு}டு காவப்பட்டு வரும் குடிப்பெயர்கள் இன்று வரை மட்டக்களப்பு முஸ்லிம்களிடையேயும் காணப்படுவதும் மட்டக்களப்பு தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே தாயின் பிள்ளைகள் என்பதை சொல்லி நிற்கிறது.

மட்டக்களப்பானது தமிழர்களுக்கு தன்னோடுள்ள பாத்தியதைக்கு என்ன எல்லையை கொண்டுள்ளதோ அந்த எல்லைவரை இன்றைய முஸ்லிம்களுக்கு மட்டக்களப்பு ீதுள்ள பாத்தியதையும் செல்லும் என்பதை இங்கே நாம் காண தவற கூடாது.இன்றைய உலகில் உள்ள மிக தொன்மையான ப10கோள வரை படங்களுள் முக்கியமானதொன்று தொலமி வரைந்த படமாகும். இதில் இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளதோடு கி.மு.147 வரையப்பட்ட இப்படத்தில் கல்முனை உள்ள இடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்முனை துறைமுகத்தை அன்றைய கடலோடி வியாபாரிகள் தரிசித்துள்ளனர் என்பதற்கான மிகத் தொன்மையான ஆதாரமாகும். அப்போது வந்த பாரசீக வியாபாரிகளே இலங்கைக்கு இந்த முகவரியை தேடி தந்தவர்கள். இவர்களது வரவில் இருந்து கல்முனையின் வரலாறு தொடங்குகிறது.

இப்படி பலவகையிலும் கிறிஸ்துவிற்கு முன்பே தொடங்கிய கிழக்கின் அரசியல் வரலாறு உருகுணை ராச்சியத்துடன் ஒட்டியும் இணைந்தும் சுமார் 8ம் நு}ற்றாண்டுவரை அதாவது 1000 ஆண்டுகாலம் நீடித்திருக்கின்றது. உருகுணையின் அரசர்கள் சிங்கள மன்னர்களாக இருந்தபோதிலும் அதன் வடபுலமான கிழக்கிலங்கையில் பெரும்பாலும் தமிழ் மக்களே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.

ஏழுவகை குறுநில இராசதானிகளாக உருகுணையின் கீழ் தமிழ் பிரதானிகளும் சிற்றரசர்களும் சுயராச்சிய பிரிப்புகளை ஆண்டு வந்திருக்கிறார்கள். இவற்றை காரைதீவு, தம்பிலுவில், வீரமுனை போன்ற கண்ணகியம்மன் ஆலயங்களிலும் திருக்கோயில், கொக்கட்டிசோலை எனுமிடங்களிலுள்ள கோயில்களிலும் காணப்படுகின்ற கல்வெட்டுக்கள், பட்டயங்கள் போன்றவற்றினு}டு அறியலாம். கிறிஸ்துவிற்கு பின் 8ம் நு}ற்றாண்டில் பலமடைந்த இராசரட்டை ஆட்சியாளர்கள் தீகவாவியை கைப்பற்றியதினு}டாக உருகுணை ராச்சியத்தின் வடபுலமான கிழக்கிலங்கை அனுராதபுர ஆட்சியின் கீழ் வந்தது. 10ம் நு}ற்றாண்டில் சோழரது படையெடுப்பு நிகழும்வரை சுமார் இரண்டு நு}ற்றாண்டுகள் இந்நிலை நீடித்தது.

1017 ல் இலங்கையில் ஏற்பட்ட சோழராட்சி இராஜராஜசோழனின் மகனாகிய இராஜேந்திர சோழனால் ஏற்படுத்தப்பட்டது. 1070 வரை கிழக்கிலங்கையும் இந்த சோழராட்சிக்குட்பட வேண்டியிருந்தது இயல்பே. இவ்வேளை கதிர்சுதன் என்பான் சோழப்பேரரசின் சிற்றரசனாக கொண்டு கிழக்கு ஆளப்பட்டிருக்கிறது. ஆனபோதும் அனுராதபுரத்தை கைப்பற்றிய இராஜேந்திர சோழன் (ஆதமுனை) திருக்கோயிலிருந்த சேகு அசனாபள்ளி எனும் வணக்கஸ்தலத்தை (கரவாகு) கல்முனையிலிருந்த முகைதீன் பள்ளிவாசல் என்பவற்றையெல்லாம் அழித்தொழித்துள்ளான். இக்கூற்று இற்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கின் கடலோர பட்டினங்களை முஸ்லிம்களின் வாழ்விடங்கள் தங்கள் வணக்கஸ்தலங்களுடன் சேர்ந்து மிகபலமானதொரு சமூக அமைப்பையும் கொண்டிருந்திருக்கிறது என்பதை புலப்படுத்துகிறது. இதுபற்றி கரவாகு பரணி கல்வெட்டு விபரமாக கூறுகிறது.

தொடர்ந்து வந்த காலங்களில் மீண்டும் இராசரட்டையின் ஆட்புல எல்லைக்குள் கிழக்கிலங்கையை விஜயபாகு, பராக்கிரமபாகு என்பவர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள். தீகவாவிகூட பொலநறுவையியிலிருந்து ஆண்ட பராக்கிரமபாகுவின் ஆட்சியின்கீழ் வீழ்ந்திருக்கிறது. இவனது ஆட்சிக்காலம் இலங்கையில் தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கிய திட்டங்களுக்கு பெயர்போனது 11, 12 ம் நு}ற்றாண்டுகளில் கிராமிய பொருளாதாரத்தை முன்னோக்கி குளங்கள் கட்டப்பட்டு மழைநீரை சேகரித்து ஓர் தன்னிறைவு விவசாய முன்னெடுப்புகள் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளன.

13 ம் நு}ற்றாண்டு இலங்கை மீது படையெடுத்த மாகோன் என்பான் கிழக்கிலங்கை தனது கட்டுபாட்டிலிருத்தியிருக்கின்றான். பழுகாமம் இவனது உபராசதானியாக வீற்றிருந்து காலம் அது. இந்த காலிங்க மாகோனது பேரரசின் கீழ் திஸ்ஸ அலிபோடி என்பவர் கரவாகுபற்றுக்கு பிரதானியாயிருந்துள்ளார். இந்த திஸ்ஸ அலி போடியாரின் மகனது திருமணத்திற்கு மாகோன் எனப்படும் விஜயகாலிங்க சக்கரவர்த்தி தனது அரசிருக்கைகளில் ஒன்றான பழுகாமத்திலிருந்து சென்றிருக்கின்றான். இது குறித்து ‘கலியான செப்பு’ எனும் கரவாகு பகுதியில் இருக்கும் கல்வெட்டு பாடல் விளக்குகிறது.

இந்த மாகோன் இலங்கைக்கு வருகையில் சமணமும், பௌத்தமும், இஸ்லாமும் மக்களின் நம்பிக்கைக்குரிய மதவழிபாடுகளாக இருந்தது. மொழிரீதியாக தமிழ்பேசிய போதும் கிழக்கு வாழ்மக்கள் சமணத்தையும், பௌத்தத்தையும் அதிகமாக வழிபட்டனர். அவ்வேளைதினசிங்கன் எனும் முக்குக ராசன் மட்டக்களப்பை ஆண்டு கொண்டிருந்தான். 1225ல் கலிங்க தேசத்திலிருந்து வந்து இலங்கையை ஆக்கிரமித்த மாகோன் கிழக்கிலங்கையின் வரலாற்றில் பெரும் பாதிப்பனை ஏற்படுத்தினான். இந்த மாகோனது படையெடுப்பு என்னசெய்தது என்பதை யாழ்பாண சரித்திரம் இப்படி சொல்கிறது. (பக்-36) “யுனு1225 ல் மாகன் என்னுந் தமிழரசன் கலிங்க தேசத்திலிருந்து பெரும்படையோடு வந்து போர் செய்து இலங்கை முழுதையுந் தனதாக்கினான். ஈற்றில் யாழ்ப்பாணத்தையுங் கைக்கொண்டு இருபது வருஷம் அரசு செய்து இலங்கைக் குடிகளை வருத்தி அவர்களிடத்துள்ளதெல்லாங் கவர்ந்ததுமன்றிப் பௌத்தாலயங்களையும் விகாரங்களையுமழித்தும் கன்னியர்களை மானபங்கஞ் செய்தும் நிஷ்டுரனானான்” இதுகுறித்து கரவாகு வரலாறு எழுதிய எம்.எம்.காசிம் இப்படி கூறிகிறார்.

“மட்டக்களப்பில் தினசிங்கன் எனும் முக்குக ராசன் ஆண்டான். இவன் சமணசமயத்திற்கு பாதுகாவலனாயிருந்து அச்சமயத்தை வளர்த்தான்” “இலங்கை வந்த மாகோன் இந்த தினசிங்கனை கொன்று சைவத்தை நிலைநிறுத்தினான்” இதைவிட முன்னொரு காலத்தில் குறிப்பாக பராக்கிரமபாகு காலத்தில் கட்டப்பட்ட குளங்கள் அனுராதபுரம், பொலநறுவை போன்ற பகுதிகளை மிகசெழிப்பான ப10மியாக மாற்றியிருந்தது. ஆனால் கலிங்க மாகோனின் படையெடுப்பு இப்பொருளாதார வளங்களையும் அழித்தொழித்த காரணத்தால் இப்பிரதேசங்கள் வரண்ட பகுதியாக மாறியது. இதன் காரணமாக தொடர்ந்து வந்த காலங்களில் இங்கு பசியும் பட்டினியுமே ஏற்பட இலகுவாயிற்று.

இது போன்ற இன்னபிற வரலாற்று குறிப்புகள் மட்டக்களப்பில் மாகோனது வருகையின் போது சமணம் பரவியிருந்ததையும் மாகோனது சமணம் மீதான வெறியாட்டத்திலிருந்து தப்புவதற்காக பலர் இஸ்லாத்தைத் தழுவியிருக்கின்றனர். அக்காலை கரவாகு பிரதேசத்தை ஆண்ட மாக்கான் ரகுமானின் ஆட்சியின் கீழ் பலர் இப்படி இஸ்லாமாயினராம். அதேவேளை பாரசீகத்திலிருந்து வந்த ரகுமானுடன் மாகோன் செய்து கொண்ட வியாபார ஒப்பந்தம் மாகோனுக்கு கீழான இராசபிரதிநிதியாக கரவாகின் ஒரு பகுதியை இவனையும் ஆள அனுமதித்தது. இவ்வேளை பல தமிழ் சமணர்கள் இஸ்லாமாகியதனால்தான் இன்றுவரை சமணச் சொற்களான நோன்பு, பள்ளி, தொழுகை போன்ற அறபு அல்லாத சொற்கள் பல இன்றுவரை முஸ்லிம்களிடையே காணப்படுகின்றது.

கி.பி.1256 ஆம் ஆண்டு இந்த மாகோனது ஆட்சி ஒழிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்பு முன்பு போலவே மீண்டும் கண்டிக்கு கீழ் கிழக்கிலங்கை வந்துள்ளது. பின்பு சில காலங்களில்கோட்டை மன்னனின் அரசின் கீழான சிற்றரசுகளாகவும் மட்டக்களப்பின் பல பாகங்கள் ஆளப்பட்டிருக்கின்றன.

இறுதியாக போர்த்துக்கேயர் வரும்காலை மீண்டும் கிழக்கு கண்டி ராச்சியத்தின் கீழேயே ஆளப்பட்டு வந்தது. காலாகாலமாக கிழக்கு ஈராயிரம் ஆண்டுகால வரலாற்றின் பெரும்பகுதியை உறுகுணை ராச்சியத்தின் கீழும் இடையிடையே சோழ, பாண்டிய ராச்சியத்தின் கீழும் ஆளப்பட்டு வந்தது. இச்செய்திகள் கிழக்கிலங்கையில் ஒரு நிரந்தரமானதும் பலமானதுமான மன்னர் பரம்பரையொன்று இருந்திருக்காமையே எடுத்துக் காட்டுகிறது. சில வேளைகளில் இங்கு பலதரப்பட மதங்களுக்கும், இனங்களுக்கும் இடம்கொடுத்து வந்தாரை வரவேற்றமைதான் இன்றுவரை வாழும் கிழக்கு மக்கள் அனைவரும் சகோதரர்களாக இனப்பெருமையோ, மதப்பெருமையோ கொள்ளதாத சகிப்புத் தன்மை கொண்டவர்களாக வாழ்வதற்கும் காரணமாய் இருக்கலாம்.

இனத்தின் பெயராலோ மொழியின் பெயராலோ பலமானதொரு ஆட்சி அதிகாரம் இங்கு நிலைபெற்றிருந்திருந்தால் இந்த பன்மிய சூழ்நிலையை நாம் பெற்றுக்கொள்ளுதல் சாத்தியமற்றுப் போயிருக்கலாம். ஆனபோதும் இடையே வந்த தமிழீழத்தை அடிப்படையாகக் கொண்ட போராட்டத்தின் வடுக்கள் ஏனைய இனங்களின் மீது ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ள கறைகளை துடைத்து நாம் ஒருமித்து முன்னேறுதல் கிழக்கின் எதிர்கால வரலாற்றை ஒளிமயமானதாக மாற்றும்.

பல்வேறுபட்ட மதங்களையுடைய கிழக்கு மக்களாகிய சிங்களவரும்,சைவர்களும்,முஸ்லிம்களும் எவ்வித வேறுபாடுகளும் கொள்ளாது புட்டும் தேங்காயப் ப10வுமாய் வாழ்ந்த வரலாற்றைக் கொண்டவர்கள். அத்தோடு காலனித்துவ மிசனறிமார் கொண்டுவந்த கிறிஸ்தவ மதப் பிரிவுகளையும் ஏற்றுக்கொண்டே இங்கு எவ்வித வேறுபாடுகளும் இன்றி வாழ்ந்து வந்துள்ளனர்.

இத்தகைய சகிப்புத் தன்மைக்கும் அனைத்தையும் அனுசரித்துச் செல்லும் அகன்ற சமூக மனதினைக் கொண்டிருப்பதற்கும் “சியாத்” எனும் அனேகாந்தத்தைப் பேசும் சமணத்தின் மூல தத்துவத்தினைக் கொண்ட பாரம்பரியம் கூட காரணமாயிருக்கலாம்.கிழக்கிலங்கை சுமார் 2000 ஆண்டுகால வரலாற்றுப் போக்கில் கிழக்கில் பெரும்பான்மையோர் தமிழையே பேசினாலும் இம்மாகாணம் ஒருபோதும் தமிழ் மாகாணம் எனும் அடையாளத்தைக் கொண்டிருக்கவில்லை. போர்த்துக்கேயராகிய அன்னியர் இலங்கைக்கு வரும் வேளையில் யாழ்ப்பாண ராச்சியம் எனும் தனித்தமிழ் இராச்சியம் இருந்துள்ளது. ஆனபோதும் தமிழ் அரசர்களால் ஆளப்பட்ட யாழ்ப்பாணத்துக்கும் கிழக்கிலங்கைக்குமிடையே ஒருபோதும் ஆட்சி அதிகாரத் தொடர்புகள் வரலாற்றில் எந்தச் சந்தப்பத்திலும் இருந்திருக்கவில்லை.

எல்லாளன், மாகோன் என்கின்ற இந்திய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இலங்கையின் ஒருங்கிணைக்கப்பட்ட சந்தர்ப்பங்களைத் தவிர கிழக்கானது எப்போதுமே கண்டிராச்சியத்துக்கு உட்பட்டதாகவே ஆளப்பட்டு வந்துள்ளது. அதேவேளை வன்னிமைகளாகவும், குறுநில பிரிவுகளாகவும், சிற்றரசுகளாக தமிழ், முஸ்லிம் ஆட்சியாளர்கள் மட்டக்களப்பின் தனித்துவத்தை தொடர்ந்து உறுதிப்படுத்தி வந்திருக்கின்றனர்கள் என்பதும் தெளிவானது. மேலும்........

 

 
Updated 01-08-08   <<Feed Back >>   <<Tell Your Friend >>  
   
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.