தமிழீழப் போராட்டம்
நமது நாட்டில் வாழும் சிறுபான்மை இனமான நாம் தமிழர்கள் எனும் வகையில் தனிநாடொன்றுக்கான கோரிக்கையை முன்வைத்து போராடி வந்தோம். இன்று அந்தக் கோரக்கை நம் கண்முன்னேயே பலமிழந்து நிற்கின்றது. அதுமட்டுமன்றி இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு மிக பாரிய அளவிலான படுகொலைகளுக்கும் அழிவுகளுக்கும், பொருளாதார நஸ்டங்களுக்கும் வழிவகுத்ததும் இந்த தமிழீழப் போராட்டமே ஆகும்.
நமது நாட்டினை நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கின்ற இந்த தமிழீழம் எனும் கோரிக்கை எவ்வித சூழ்நிலையில் இருந்து உருவானது என்பதை காய்தல், உவத்தல் இன்றி நாம் அசைபோட வேண்டியுள்ளது. இந்தக் கோரிக்கையானது முன்னொருகாலத்தில் மிதவாத அரசியல் கோரிக்கையாக கருக்கொண்டது.
பின்னரது தீவிரவாத போராட்டமாக வடிவெடுத்தது. இறுதியில் பயங்கரவாதமாக உருமாறி வந்துள்ளதோடு யாருமே எதிர்பார்க்காத சிக்கலொன்றையும் நம்மிடையே ஏற்படுத்திச் சென்றுள்ளது. அதாவது இன்று அது தமிழ் பேசும் மாகாணங்களுக்கிடையேயானதொரு போராக மீள்வடிவம் பெற்றுள்ளது. கடந்த மூன்று வருடகாலமாக சிறிலங்கா அரசுக்கும் தமிழ் தீவீரவாத தரப்பினரான தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையே போர் தணிக்கப்பட்ட நிலையில் கூட தமிழ் பேசும் மாகாணங்களுக்கிடையே ஒரு புதுவித போர் மேகம் களைகட்டி வருகின்றது. சக மாகாணமொன்றின் உரிமைக்குரல்களை காதுகொடுத்து கேட்க முடியாத தமிழீழ விடுதலைப்புலிகளால் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி நிகழ்த்தப்பட்ட படையெடுப்பும், ஆக்கிரமிப்பும் கொலைவெறித்தாண்டவமும் நிலைமைகளை மென்மேலும் சிக்கலாக்கி வருகின்றது.
இன்றைய நிலையில் கிழக்கிலங்கை மக்களிடத்தே தமிழீழத்தை தாண்டிதொரு அரசியல் அபிலாசைகளை பிரதிபலிப்கின்ற புதியகருத்தாக்கங்கள் கவனம் கொள்ளத் தொடங்கியியுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இதுவரை காலமும் தமிழர்களாக தம்மை உணர்ந்திருந்த இஸ்லாமிய மக்கள் மத்தியிலும் கிழக்கு மாகாணத் தமிழர்கள் மத்தியிலும் இன்நிலை கூடிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. காலப்போக்கில் இலங்கை அரசியலில்பாரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் இன்றைய அரசியல் சூழல்கள் பற்றிய காய்நகர்வுகள்தான் இலங்கை மக்களின் எதிர்கால வாழ்வை நிச்சயிக்கப்போகின்றது. ஆகவே தமிழீழ போராட்டத்திற்கு வெளியே வேறு வகையான அரசியல் கோரிக்கைகள் உருவாகிவருவது நிதர்சனமாயுள்ளது. இக்கோட்பாடுகளில் எது சரி எது பிழை என்பதை நோக்கிய எமது பார்வைகளை செலுத்துதல் அவசியமானதாகும்.
குறிப்பாக கிழக்கில் இன்று உருவாகி வருகின்ற பிரதேச அலகை அடிப்படையாகக் கொண்ட அரசியல் யாருக்கான விடுதலையை நோக்காகக் கொண்டு முன்வைக்கப்டுகின்றது.? அந்த மக்களின் விடுதலை தமிழீழக் கோரிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லையா? அப்படி இல்லையாயின் தமிழீழக் கோரிக்கை என்பது யாருக்கான நன்மைகளை கருத்திலே கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தனிநாடு ஒன்றை நோக்கி கிழக்கிலங்கை மக்களை வழிநடத்திய யாழ்ப்பாண அரசியல்வாதிகளின் சுயரூபங்கள் என்ன? அதில் யாழ்ப்பாணத்து நலன்கள் மட்டுமே குறியாய் இருந்ததா? என்பதையிட்டு இன்று எமது கேள்விகள் தொடுக்கப்படவேண்டியுள்ளது. இன்நிலையில்தான் “கடந்தகால தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த 98 சதவீதமான பிரச்சனைகள் வடமாகாணத்துடன் சம்பந்தபப்ட்டவை” (14-மார்ச்-2004 - தினகரன்) என்று பகிரங்கமாக குரலெழுப்பிய கேணல் கருணா அவர்களின் பத்திரிகை செய்தி முக்கியத்துவமாகின்றது.
இந்த குற்றச்சாட்டில் இருந்துதான் ஒரு ஆழமான ஆய்வு நோக்கி நமது கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. தமிழீழத்தின் மறுபெயர் யாழ்ப்பாணம் என்று சொல்லும் அளவிற்கு தமிழீழத்தின் பெயரில் உருவாகும் எல்லாவித அமைப்புகளினதும் பிறப்பிடம்; யாழ்ப்பாணமாகவே இருக்கவேண்டும் என்பதும், அவற்றின் தலைமைகள் அனைத்தும் யாழ்ப்பாணத்திற்குள்ளேயே இருந்து மட்டுமே உருவாக முடியும் என்கின்ற எழுததாத விதிகளும் மேற்படி குற்றச்சாட்டுக்களை மேலும் அர்த்தமுள்ளதாக்குகின்றது.
ஜனநாயக நீரோட்டத்தில் பங்கெடுத்துவந்த தமிழ் அரசியல் கட்சிகளும் சரி ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இயக்கங்களும் சரி இவ்விடயத்தில் கவனமாகவே இருந்திருக்கின்றன என்பது புலனாகின்றது. ஆகவே யாழ்ப்பாண அடிப்படைவாதம் என்பதில் இருந்தே தமிழீழக்கோரிக்கையின் தார்ப்பரியங்களை எடைபோடவேண்டிய தேவை எழுகின்றது. இந்த யாழ்ப்பாண அடிப்படைவாதம் என்பது யாது? என்பதை புரிந்துகொள்ள இந்த யாழ்ப்பாண சமூகம் கொண்டுள்ள கருத்துநிலை யாது என்பதையும் அதை உருவாக்கித் தந்த வரலாற்றுப்புள்ளிகள் யாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.
யாழ்ப்பாணம்
“மணற்றி என்பது அதன் ப10ர்வ நாமம். அது பின்னாளில் மணற்றிடல் எனவும் வழங்கிற்று.” - (யாழ்ப்பாண சரித்திரம் பக்-1) என ஆ.முத்துத்தம்பிபிள்ளை அவர்கள் கூறுவதில் இருந்து மனித சஞ்சாரமற்று வெறும் தரையாய் உப்புக்கரித்துக் கிடந்த இந்த மணற்றிடரைத்தான் இந்தியாவில் இருந்து தேசாந்திரியாய் வந்து சேர்ந்து யாழ்பாடிய குருடனின் தலையில் கட்டி மகிழ்ந்தான் எல்லாளன் என்பதை புரியமுடிகிறது. “யாழில் வல்ல ஒரு பாணனுக்கு பரிசாக கொடுக்கப்பட்டமையின் யாழ்ப்பாணமெனப்படுவதாயிற்று.” (யாழ்ப்பாண சரித்திரம் - பக்-2)
என அவர் மேலும் கூறுவதனு}டாக எல்லாளனிடம் பரிசு பெற்ற பாணன் தன் ப10ர்வீகமான தொண்டை நாடு திரும்பி தொண்டமானின் உதவிபெற்று தனது இனசனங்களை இங்கு குடியேற்றியதில் இருந்தே யாழ்ப்பாணத்தின் வரலாறு தொடங்கியது என்பது தெளிவு.
“அதன் பின்னர் தொண்டமானுடைய மரக்கலங்களும் வந்தன. உப்பேற்றும் பொருட்டு ஒரு கால்வாயும், மரக்கலங்கள் தங்குவதற்கு ஒரு துறையும் அவன் அனுப்பிய சனங்களால் அமைக்கப்பட்டன. அச்சனங்கள் உப்பளத்துக்கு சமீபத்திலேயே குடி கொண்டார்கள். அச்சனங்கள் உப்பெல்லாவற்றையும் திரட்டி காலம் தோறும் அம்மரக்கலங்களில் ஏற்றி அனுப்பி வந்தார்கள். அம்மரக்கலங்கள் மீண்டுவரும் போது நெல், கறிசாம்பாரம், வஸ்திரம் முதலிய கொண்டுவந்து யாழ்ப்பாணத்து தொண்டமான் சனங்களுக்கு பண்டமாற்றி மீளும்.” (யாழ்பாண சரித்திரம் பக் - 13)
கி.மு 145 ஆம் ஆண்டில் இருந்து குடியேறி உப்பை மட்டுமே நம்பிவாழ நிர்ப்பந்திக்கப்பட்ட இந்த யாழ்ப்பாணனின் குடிகள் குடிநீர் பெற்றுக்கொள்ளுதலே பெரும் பாடாய் இருந்தது. சகலவித உணவுப்பண்டங்களும் இந்தியாவில் இருந்தே தருவிக்கப்பட்டிருக்கின்றன.
காலப்போக்கில் உப்புப்பாறைகளை உடைத்து ஆழ்மடுவுகள் தோண்டி தண்ணீர் பெற்றுக்கொண்டனர். இந்த நதிகள் அற்ற யாழ்ப்பாணம் உப்பை விடுத்து காலப்போக்கில் ஆழ்கிணற்று நீரை மூலதனமாக கொள்ளத் தொடங்கியது. கிணற்று நீரூடாக உற்பத்தி செய்யப்படத் தொடங்கிய உப உணவுப்பொருட்கள் யாழ்ப்பாணப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மெல்ல மெல்ல உருக்கொண்டது. இதுவே 15 ம் நு}ற்றாண்டுவரை அதாவது ஐரோப்பியரின் வருகைவரை யாழ்பாணத்தின் யதார்த்தமாகும். இலங்கையின் இந்த யாழ்ப்பாணம் தவிர்ந்த அனேகமாக எல்லாப் பிரதேசங்களும் நதிகளாலும் ஆறுகளால் நீர்வளமும் நிலவளமும் பெற்றிருந்தன. இயற்கையின் வஞ்சனை காரணமாக இவ்வளங்களை ெற்றிருக்காத யாழ்ப்பாணத்து மக்கள் கிடைக்கக் கூடிய எதையும் வாழ்வின் ஆதாரமாக பற்றிக்கொள்ளும் கருசனை வாய்க்கப் பெற்றமை இதன் பொருட்டேயாகும்.
இந்நிலையில்தான் நாடுபிடித்துவந்த அன்னியரின் வருகை எமது நாட்டினுடைய அரசியலில் மட்டுமல்ல சமூக பொருளாதார கட்டமைப்புகளிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. அவையனைத்தும் முழுஅளவிலான இலங்கையருக்கு பாதகமான அம்சங்களையே பெருமளவில் ஏற்படுத்தியிருந்தாலும் யாழ்ப்பாணத்தவருக்கு இந்த அன்னியரின் வருகை பெரும் வரப்பிரசாதமாய் அமைந்தது. காலணித்துவ ஆட்சியாளர்களின் நவீன அரசியல் செயற்பாடுகளும் நீதி, நிர்வாக சேவைகளும் பெருந்தோட்டத் துறையினு}டு விரிவடைந்த போக்குவரத்து, தபால்சேவை போன்றவைகளும் அறிமுகப்படுத்திய உத்தியோகங்கள் யாழ்ப்பாண மக்களை கவர்ந்தது.
அவ்வுத்தியோகங்களினு}டு வந்த ஆங்கிலத்தின் அறிமுகமும் வெள்ளையரை நோக்கி யாழ்ப்பாணத்தை அதிகம் கவர்ந்திழுத்தது. ஆதிக்க மொழி என்கின்ற எவ்வித கூச்சமும் இன்றி ஆங்கிலத்தைக் கற்று அதனு}டு வெள்ளையனுக்கு தேவையாற்ற ஒரு பெருங்கூட்டத்தையே இந்த யாழ்ப்பாணம் மிக விரைவில் உருவாக்கிக் கொடுத்தது. உப்பில் இருந்து உப உணவுக்கு வளர்ச்சியடைந்திருந்த யாழ்ப்பாணம் தன் வாழ்வின் ஜீவாதாரமாக இந்த ஆங்கிலக் கல்வியை இறுகப்பிடித்துக் கொள்ள தவறவில்லை.
பெருந்தோட்டத் துறையின் மேற்பார்வையார்களாகவும் நீதிநிர்வாகத் துறையின் அடிமட்ட உதவியாளர்களாகவும் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு கைகட்டி சேவை புரிந்த இவர்கள் காலப்போக்கில் நிர்வாகத் தேர்ச்சி பெற்ற உத்தியோகத்தர்களாகவும், அரச அதிகாரிகளாகவும், ஆசிரியர்களாகவும் இலங்கை எங்கும் வியாபித்தனர். இந்த போக்கு ஆட்சியாளர்களிடம் சம்பளம் பெறும் கணிசமான ஒரு கூட்டத்தினராக யாழ்ப்பாணத்தவரை அடையாளம் காட்டியது.
இலங்கையின் மூலை முடுக்குகள் எங்கும் இன்னும் சிங்கப்ப10ர், மலேசியா, பர்மா போன்ற நாடுகள் வரையும் கூட இவர்கள் வெள்ளையருக்கான சேவை உழைப்பாளர்களாக பரந்துபட்டு வாழ்ந்தனர். இதன் காரணமாக கிணற்று நீருக்குள் இருந்த இவர்களது பொருளாதாரம் மணியோடர் பொருளாதாரமாக மிளிர்ந்தது. கூடவே வெள்ளை சட்டை உத்Nதியோகஸ்தர்கள் என்கின்ற சமூக அந்தஸ்த்தும் கைவரப்பெற்றது.
இந்த உத்தியோகத்தர்களின் சமூக பரம்பலே யாழ்ப்பாணத்தில் ஒரு மத்தியதர வர்க்கத்தின் தோற்றத்துக்கு வித்திட்டது. வெள்ளை ஆதிக்கத்தின் பாதுகாவலராக தம் வாழ்வைத் தொடங்கிய இவ்வர்க்கத்தினரே படிப்படியாக இலங்கையருக்கான அரசியல் போக்குகளை நிர்ணயிப்பவர்களாகவும் உருவாகினர்.
படிப்பறிவு, பணம், அந்தஸ்து என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இலங்கை மக்களுக்கான அரசியல் கோபுரத்தை வெள்ளயைர் அத்திவாரம் இட்டனர். ஆகவேதான் இந்த அத்திவாரம் ஆனது யாழ்ப்பாணத்திலேயே கட்டப்பட முடிந்தது. அங்கிருந்து உருவான அரசியல்வாதிகளே இலங்கையின் முதல் தலைமுறை அரசியல் தலைவர்களாகவும் இலங்கை அரசியலில் போக்கை தீர்மானிக்கும் சக்தி பெற்றவர்களாகவும் பரிணமித்தனர்.
இலங்கையின் சிங்கள மக்கள் இடத்திலும் இதுபோன்றதொரு மத்தியதரவர்க்கம் உ,ருவாகியிருந்தது. அங்கு ராஜ பரம்பரையினர் என தம்மைச் சொல்லிக்கொள்ளும் கொவிகம எனப்படுகின்ற ஒருவித சமூக அந்தஸ்துகொண்ட பிரிவினரே மேற்படி மத்தியதர வர்க்கமாக உருவாகியிருந்தனர். இவர்கள் சிங்களவராய் இருந்தபோமுதும் கராவ, சாலக என்கின்ற சாதிப்பிரிவினரான சிங்களவரை தம்மிலும் கீழானவர்களாகவே கணித்து வந்தனர்.
இப்போக்கானது இந்தியாவில் இருந்து எண்ணில் அடங்காத சாதிப்பிரிவுகளை யாழ்ப்பாணத்திலும் இறக்குமதி செய்து வைத்திருந்த சமூகத்தினுடைய சூழலுக்கு ஒத்துப்போவதாய் இருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து மத்தியதர வர்க்கமாக பரிணமித்து இருந்தவர்களும் அச்சமூகத்தில் காணப்பட்ட சாதிப்பிரிவில் உயர் குழாத்தினரான வேளாளர்h சமூகத்தினரே என்பதனால் தமிழ் சிங்கள இனவேறுபாடற்று ஒரு உயர் வர்க்கக் கூட்டுக்கு நல்ல வாய்ப்பினை இச்சூழல் ஏற்படுத்தியிருந்தது.
இந்த வகையில் தமிழ் - சிங்கள உயர்வர்க்க கூட்டின் பிரதிநிதியான சேர்.பொன்.இராமநாதன் எனும் யாழ்ப்பாணத்தவர் வெள்ளையரிடையே பெருமதிப்பைப் பெற்றிருந்தார். ஆங்கிலேயருக்கு மிக நெருங்கிய விசுவாசியான இவர் 1911 ம் ஆண்டு படித்த இலங்கையருக்கான முதல் செனட்சபை உறுப்பினர் ஆகும் வாய்ப்பை பெற்றார். கல்வியறிவு பெற்றவர்களுக்கும் சொத்துரிமை கொண்ட தனவந்தர்களுக்கு மட்டுமே அந்நிலையில் வாக்களிக்கும் தகுதி இருந்தது. ஆதலால் மொத்த சனத்தொகையில் சுமார் 4 வீதம்மான மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமே இந்த வாய்ப்பை பெற்றிருந்தனர்.
இவ்வகையில் அரசியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் அதிகாரம் கொண்டவர்கள் தமிழ் - சிங்கள வேறுபாடுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. இனவேறுபாடுகளை தாண்டிய உயர்தட்டு வர்க்க ஒற்றுமையே இந்த இரு சமூகங்களின் பிரதிநிதிகளிடம் காணப்பட்டது.
1911ம்ஆண்டு தேர்வில் சேர்.பொன்.இராமநாதன் தெரிவு செய்யப்பட்டமை பற்றி அவ்வேளை கவனர் ஆக இருந்த சேர்.கியு.கிளிபார்ட் கூறுகையில் “படித்த இலங்கையரை தேர்ந்தெடுப்பதில் தமிழர் சிங்களவர் என்ற இனவேறுபாடு இல்லாமல் தமிழர் உயர் சாதியினரும் சிங்கள உயர்சாதியினரும் சேர்ந்த ஓர் உயர்சாதியினரையே தெரிவுதெய்தார்கள்” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு கைமாறாகவே 1915 ல் கொழும்பில் ஏற்பட்ட சிங்கள முஸ்லிம்கள் கலவரத்தில் பேரினவாதம் செய்யப்பட்டவிதத்தை முழுமையாக மறைத்து லண்டன் வரை சென்று முஸ்லிம்கள் மீது காடைத்தனம் புரிந்த சிங்களவர்களின் விடுதலைக்காக வாதாடினார் சேர்.பொன்.இராமநாதன். அதற்காகவே அவரை தேரில் வைத்து இழுத்து சிங்களவர்கள் குது}கலித்தனர். இவ்விதம் உயர்தட்டு வர்க்க ஒற்றுமையில் சிங்கள தலைமைகளுடன் யாழ்ப்பாண தலைமைகள் விரலும் சதையுமாக இணைந்திருந்தனர்.
1917 ம் ஆண்டு தேர்விலும் இது மேலும் உறுதியானது கரையோர சிங்களவரான மாக்கஸ் பெர்னாண்டோ என்பவரை விடுத்து தமிழராய் ஆனபோதும் வெள்ளாள சமூகத்தை சேர்ந்தவரான சேர்.பொன்.இராமநாதனையே சிங்களவரும் சேர்ந்து தெரிவுசெய்தனர்.
1919 இல் உருவான இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராக யாழ்ப்பாண தமிழரான சேர்.பொன்.அருணாசலம் என்பவர் தெரிவானார். ஆனாலும் இன்னிலையை சுதந்திரத்தை நோக்கிய சீர்திருத்தங்களும், மாற்றங்களும் தொடர்ந்து அனுமதிக்கவில்லை. இலங்கை முழுக்க தமது ஆதிக்கத்தை பேணிவந்த யாழ்ப்பாண மத்தியவர்க்கத்தினரின் எதிர்கால அந்தஸ்தை அரசியல் மாற்றங்கள் கேள்விக்குறியாக்கியது. அதுவரைகாலமும் இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார கட்டுமானங்களில் நிரம்பியிருந்த யாழ்ப்பாணத்தவரின் செல்வாக்குகளை தொடர்ந்துவந்த காலங்களிலும் காப்பாற்றி கொள்ளும் எத்தனிப்போடு அன்றைய அதிகார ருசி கொண்ட தலைமைகள் முன்னெடுத்த நகர்வுகளே யாழ்ப்பாண அடிப்படைவாதத்தின் தோற்றுவாய் ஆகும்.
யாழ்ப்பாண அடிப்படைவாதத்தின் அருமையான கட்டுகதை தமிழீழம்
1920 ம் ஆண்டுவரை அரசியல் அதிகாரம் குறிப்பிட்ட ஒரு சிலரிடையே மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் 1920 ன் பின்னர் ஏற்பட்ட மனிங் சீர்திருத்தம் கொண்டுவந்த மாற்றங்கள் இனவாரியான ஒதுக்கீட்டை மக்கள் பிரதிநிதித்துவத்திற்கு வழங்கியது. அதனு}டாக அரசியல் உரிமைகள் பொதுமக்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்த அரசியல் மாற்றங்களில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் காட்டிவந்த அக்கறைகள் அதிகார அந்தஸ்தில் அதுவரை திளைத்த யாழ்ப்பாணத் தலைமைகளுக்கு உவப்பளிக்கவில்லை என்பதை மேலே கண்டோம்.
ஆகவே அரசியல் விழிப்புணர்வுகள் பரந்துபட்ட மக்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தனர். அதற்காகவே வெள்ளையாட்சியாளர்களின் அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கவும் துணிந்தனர். குறிப்பாக அரசியல் சீர்திருத்தத்திற்கான டொனமூர் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் எல்லா பிரசைகளுக்கும் தமது தலைமைகளை தெரிவுசெய்யும் வாய்ப்பை வழங்கும் “சர்வசனவாக்குரிமை” வழங்கப்படுவதை கடுமையாக எதிர்த்து விளக்கமளித்தனர்.
சர்வனவாக்குரிமை வழங்கப்பட்டால் அது “இந்து மத வாழ்க்கை முறைக்கு பழிகேடு விளைவிக்கும் என்றும் “கும்பலாட்சிக்கு வழிவகுக்கும்” என்றும் வாதிட்டார் சேர்.பொன்.இராமநாதன். அதாவது யாழ்ப்பாணத்திலுள்ள உயர்சாதிப்பிரிவை தவிர மற்றயோரும் கிழக்கிலிருக்கும் முஸ்லிம்கள், முக்குகர்கள், மற்றும் சூத்திரர்கள் அனைவருமே சமூகத்தின் கீழ்நிலையில் இருக்க வேண்டுமென்பதற்காக பகிரங்கமாக கீழ்தரமான கருத்துகளை தெரிவித்தார் இவர். கிழக்கிலங்கை மக்களெல்லோரும் அரசியலுக்கு வந்தால் அதுவே கும்பலாட்சிக்கு வழிவகுக்கும் என்பதே அவரது வாதமாயிருந்தது. ஆனபோதும் வெள்ளையர்களது நிர்வாகம் இவ்விதவாதங்களை கவனத்தில் கொள்ளாது சர்வனவாக்குரிமை வழங்குவதை உறுதிசெய்தது. சர்வசனவாக்குரிமை விரைவில் வழங்கப்படப் போகுதென்ற எதிர்பார்ப்புகள் உறுதியானதும் இதனால் தமது தலைமைகளை காப்பாற்றி கொள்வதற்காக தமிழ்மக்களை ஏமாற்றி தம்வசம் இழுக்கும் சூது விளையாட்டுக்களில் ஈடுபடத்தயாராகினர் யாழ்ப்பாணத் தலைமைகள்.
எதிர்காலங்களில் தமது அரசியல் தலைமைகளுக்கான இருப்புகளையும், அதிகார வாய்ப்புகளையும் உறுதிப்படுத்திக்கொள்வதாயின் பரந்துகிடந்த கிழக்கிலங்கை மக்களினதும், கீழ்தட்டு மக்களினதும் ஆதரவை பெறவேண்டிய நிலையை முன்னுணர்ந்தனர். இனரீதியான பிரதிநித்துவ ஒதுக்கீடும், பரந்துபட்ட மக்கள் எல்லோருக்கும் விரைவில் சர்வசன வாக்குரிமை வழங்கப்படபோகுதென்ற அறிவிப்புகளும் இந்த யாழ்பாண தலைமைகளை உலுப்பிவிட்டது. வயது வந்த எல்லோருக்கும் குறைந்தபட்ச அரசியல் உரிமையான வாக்களிக்கும் உரிமை வழங்கப்படுமானால் தம் அந்தஸ்துகளிற்கு ஆபத்தை கொண்டு வரலாம் என அவர்கள் அஞ்சினர். இவ்வித மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அடித்தள வாழ்வினை ஆதாரமாக கொண்ட கிழக்கிலங்கை பொது ஜனத்திரளின் செல்வாக்குகள் அரசியலில் முக்கியத்துவம் பெறபோகுதென்ற அவர்களின் எதிர்பார்ப்புகள் மிக விரைவாகவே நிகழ ஆரம்பித்தது.
அதேவேளை இனவாரி பிரதிநிதித்துவம் காரணமாக பாமர சிங்கள மக்களும், கராவ, சலாகம போன்ற கீழ்நிலை சாதியினர் என ஒதுக்கப்பட்ட பிரிவினரில் கல்வி கற்ற குழுவினரும் இலங்கை தேசிய காங்கிரசில் அதிகமாக சேர்ந்து செயற்பட ஆரம்பித்தனர். காங்கிரசினுள் ஆங்கில ஆதிக்கத்தை பகிரங்கமாகவே எதிர்த்த அவர்கள் சுதேச மொழி கொள்கைகளுடன் காங்கிரசை ஆக்கிரமித்தனர்.
சிங்கள மகாசனசபா எனும் இயக்கத்தை முழுமையாக இலங்கை தேசிய காங்கிரஸில் இணைத்த அவர்களது வரவு ஆங்கில தகமைகளுடன் காங்கிரசினுள் ஆதிக்கம் செலுத்திவந்த தலைமைகளுக்கு இக்கட்டான நிலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழ் தலைமைகளுக்கு எதிர்காலம் குறித்து பாரிய அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருந்தது. நீண்டகாலமாக அரசியல் அதிகாரங்களை தம்வசம் வைத்திருந்த யாழ்ப்பாணத்தவர்கள் தொடர்ந்தும் தமது இருப்பைப் பேணுவதானால் சிங்கள உயர்தட்டு வர்க்கத்தினருடனான கூட்டை நம்பியிருப்பதில் பலன் ஏதும் இல்லையென்பதை புரிந்துகொண்டனர். இதன் காரணமாக இலங்கை தேசியகாங்கிரசை விடுத்து தமக்கான வேறு ஒரு அரசியல் துருப்புச் சீட்டை உருவாக்குவதற்கான வடக்கு கிழக்கு பொதுசனங்களை நோக்கிவர நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதுவரைகாலமும் தமது இனம் என்றோ, தமது பிரதேசம் என்றோ, ஏழைத் தொழிலாளர், தாழ்த்தப்பட்ட மக்களை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள் அதிலும் கிழக்கிலங்கையின் பக்கமே தம் பாதங்கள் பட்டறியாதவர்கள், தமிழின உணர்வு கொண்டவர்களாக தம்மைக்காட்டத் தலைப்பட்டனர். இதற்காகவே “இலங்கைத் தமிழ் லீக்” எனும் ஒரு அமைப்பை அவசர அவசரமாக உருவாக்கினர். இதுவே இலங்கைத் தமிழர்களின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரசியல் இயக்கமாகும்.
இலங்கைத் தேசியகாங்கிரசில் தமிழருக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுடன் 1921 இல் அந்த அமைப்பை விட்டு வெளியேறினார் சேர்.பொன்.அருணாசலம். 1923 இல் இலங்கைத் தமிழ் லீக் எனும் அமைப்பைத் தொடங்கிய கையோடு தமிழீழம் பெறுவதே அதனது குறிக்கோள் என கடுமையான பிரச்சாரத்தில் இறங்கினார்.
மக்களுக்கான தேவைகளும், விருப்பங்களும் கொண்ட ஓர் அரசியல் வேலைத்திட்டத்தை முன்வைத்து அரசியல் நடத்திப் பழக்கமற்ற இவர்கள் மக்களின் மனதில் இனவாதத்தைக்கிளறி அரசியல் பண்ணத் தொடங்கினர். வெள்ளைக்காறனுக்கு சாமரம் வீசி பெற்றுக்கொண்ட கல்வித் திறமையெனும் ப10ச்சாண்டியை வைத்து சிங்களவரிடத்தில் நடத்தி வந்த பிழைப்பை தொடரமுடியாமல் போன வேளையில் தமிழ் இனவாதத்தைத் து}வி பிழைப்பைத்தொடர துணிந்தனர்.
ஆங்கிலம் அரசோற்றிய கொழும்பு அரசியலை நோக்கி சிங்கள பாமர மக்களுக்கான சுயபாசைக் கோரிக்கைகளுடன் உருவான சிங்கள மகாசனசபா போன்றவை அம்மக்களது பரந்துபட்ட சமூக பொருளாதார வாழ்வுகள் குறித்த திட்டங்களுடன் இலங்கைத் தேசிய காங்கிரசில் இணைவது என்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நிகழ்வு. அதாவது மக்களது அபிலாசைகள் அரசியல் மயப்படுத்தப்படுவதற்கு முன்தள்ளுகின்ற ஒரு நடவடிக்கையாகவே இந்த இணைவுகளை கொள்ளுதல் வேண்டும். ஆனால் அப்படியானதொரு மாற்றத்திற்கு முகம்கொடுக்க முடியாத யாழ்ப்பாணத் தலைமைகள் அதனை சிங்கள இனவாதமாக திரிபுபடுத்திக் கூறினர். தமிழ் மக்கள் சார்பிலும் அப்படியொரு வேலைத்திட்டத்தை முன்வைக்க விருப்பின்றி வேறுவகையில் செயற்படத்துணிந்தனர்.
தமது தலைமை அந்தஸ்துக்களை தமிழர் தரப்பிலாவது காப்பாற்றிக் கொள்ளுதற்குரிய குறுக்குவழிகளை நாடினர். இதன்காரணமாகவே இலங்கைத் தேசியக் காங்கிரசில் இருந்து தமிழ்த் தலைமைகள் வெளியேறி, தமிழ் லீக் எனப்படும் இனவாத அரசியலின் தொடக்கப் புள்ளியை (யாழ்பாணத்தவர்கள்) தொடங்கி வைத்தனர்.
1923 இல் நடந்த இலங்கைத் தமிழ் லீக் கூட்டத்தில் “தமிழீழம் என்ற நம் குறிக்கோளை அடைய வேண்டுமானால் எம்மிடையே ஒற்றுமையை வளர்ப்பதோடு, எமது கொள்கைகளை நாம் என்றும் கடைப்பிடிக்கவேண்டும். எமது பாரம்பரியத்தை நினைவு கூருவதோடு எமது தனித்துவத்தை நாம் பாதுகாக்கவேண்டுமானால் ஒரு பலமுள்ள சமூதாயமாக எம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்” என சேர்.பொன்.அருணாசலம் முழங்கினார்.
தமிழர் ஒற்றுமைக்கோ, தமிழர் பாரம்பரியத்திற்கோ, தமிழர் தனித்துவத்துக்கோ அன்றைய நிலையில் (1920 களில்) சிங்களவர்களால் எந்தவித ஊறும் விளைவிக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக ஆங்கில மமதையில் ஆட்சி அதிகார பீடமாக உயர்ந்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்தத் தலைமைகளே தமிழ்மக்களின் ஒற்றுமை குறித்து அக்கறைப்படாது இருந்தவர்கள். சொந்தமக்களின் உரிமைகளை மறுத்து சிங்கள அதிகார பீடத்துடன் அதிகாரத்தை பங்கிட்டுக்கொண்டிருந்தவர்கள். தமிழர் பாரம்பரியத்தை குழிதோண்டிப்புதைத்து தாய்மொழியை ஈனமொழியாக்கியவர்கள். அப்படியிருக்க அவர்களே இவற்றுக்காக அழுவது என்பது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதற்கு ஒப்பாய் இருந்தது.
இவ்விடத்தில் இருந்துதான் நாம் யாழ்ப்பாணத் தலைமைகள் உச்சரித்த தமிழீழக் கோரிக்கை என்கின்ற ஒரு விசித்திரமான அரசியலின் உருவாக்கம் ஏற்பட்ட காரணங்களை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகளின் அப்பழுக்கற்ற சுயலாபம் கருதிய வெற்று அரசியல் சூதில் இருந்தே இந்தத் தமிழீழம் பிறந்தது என்பதுவே அது. ஆனால் இன்று தமிழீழம் என்கின்ற ஒரு கோரிக்கை நோக்கி தமிழ் மக்களை தள்ளிவிட்ட காரணங்களாக முன்வைக்கப்படுபவை கீழ்வருமாறு.
1) தனிச்சிங்களச் சட்டம் (1956)
2) கல்விதரப்படுத்தல் சட்டம் (1971)
3) தமிழ் மக்கள் மீதான இனக்கலவரங்கள் (1958………)
4) சிங்கள குடியேற்றங்கள்.
மேற்படி காரணங்களே தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை மீண்டும் மீண்டும் ஒப்புவிக்கப்படுபவையாகும். மிக இலகுவாக நோக்கும் இடத்து இக்காரணங்கள் எல்லாம் அப்பட்டமான பொய்யாகும் என்பது புலனாகின்றது. ஏனெனில் இவையனைத்தும் நடந்தேறுவதற்கு முன்பே இந்த தமிழீழம் எனும் பிரச்சாரத்தை யாழ்ப்பாணத் தமிழன் தொடங்கி விட்டான். இக்கோரிக்கையினை பலப்படுத்தும் நோக்குடன் கிழக்குவாழ் மக்களையும் சேர்த்து ஏமாற்ற மேற்படி சம்பவங்கள் அவ்வப்போது துணைபுரிந்தன என்பதுதான் உண்மை. அதுவும் எவ்வளவுது}ரம் அச்சம்பவங்கள் உண்மைநிலையில் இருந்து திரித்துக் கூறப்பட்டது?, உண்மையில் யார் நலங்களைப் பாதித்தது என்பதெல்லாம்கூட கூர்ந்து அவதானிக்கப்படக்கூடியதொன்று.
ஆகவே எந்தவொரு பாரிய அச்சுறுத்தலையும் தமிழ் சமூகம் எதிர்கொள்ளாத வேளையில் வெறும் யாழ்ப்பாணத்து மேல்தட்டினரின் நலங்களுக்கு பலம் சேர்ப்பதற்காகவே இந்த தமிழீழ கோரிக்கை 1923 இல் இருந்தே போலியானதாக எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த எவ்விதத்திலும் அர்த்தபுஷ்டியற்ற ஒரு போலிப் பிரச்சாரத்தினு}டு கிழக்கு மக்களையும் உள்வாங்கி ‘வாக்கு பொறுக்கி’ அரசியல் நடத்துவதற்காகவே இந்த தமிழீழத்தை முன்வைத்தனர் என்பதை இனியாவது தமிழர்களாகிய நாமும் கிழக்கு சமூகங்களும் புரிந்துகொள்ள வேண்டும். வெற்று இனவாதக் கூச்சலாகவும், விசமத்தனமானதொன்றாகவும் யாழ்ப்பாணத் தமிழனால் உருவாக்கப்பட்ட ஒரு நச்சுப்பிரச்சாரமே இந்த தமிழீழம் என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. மேலும்........
|