தமிழரசுக் கட்சி (Fedaral party)
தமிழர் நெஞ்சங்களில் அழியாத இடம்பிடித்த பெருந்தலைவர் தந்தை செல்வா 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஏன் தோற்கடிக்கப்பட்டார்?
இக்கட்சியானது ஆங்கிலத்தில் பெடரல் பாட்டி என பதிவு செய்யப்பட்டிருந்தாலும் (அதாவது சமஸ்டிக்கட்சி எனும் அர்த்தத்தில்) வடகிழக்கு பகுதிகளில் இது “தமிழரசுக்கட்சி”யெனும் பிரச்சார நோக்கிலான பெயர்கொண்டே இக்கட்சியினரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரசை யு.என்.பி. அரசுடன் இணைத்துக் கொண்ட செயலை “ஜீ.ஜீ.பொன்னம்பலம் தமிழர்களுக்குச் செய்த துரோகம்”
என வர்ணித்தார் செல்வநாயகம். அதைத்தொடர்ந்து 1948இல் பத்து இலட்சம் தோட்டத்தொழிலாளர்களது வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கிய யு.என்.பி இற்கு துணைபோன பொன்னலம்பலத்திடம் இருந்து எஸ்ஜே.வி.செல்வநாயகம் கடுமையான முரண்பாடுகளோடு வெளியேறினார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மீதான இந்த குற்றச்சாட்டுகளோடுதான் தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்றது.
இக்கட்சியின் தோற்றுவாயானது பரந்துபட்ட தமிழ் மக்களின் நன்மைகளைக் கருத்தில் கொண்டிருந்தமை வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பகுதிகளில் வாழ்ந்துவந்த தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரத்தக்க ஒரு செய்தியாகவும் இருந்தது. அதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கந்தளாய்ப் பகுதியில் நடைபெற்று வந்த சிங்களக் குடியேற்றத்தையும் கடுமையாக எதிர்த்த தமிழரசுக் கட்சியினுடைய நடவடிக்கை குறிப்பாக கிழக்கு மாகாண மக்களிடத்தில் அக்கட்சி காலு}ன்றுவதற்கு நல்வாய்ப்பினை அளித்தது.
1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் ஆரம்பக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றில் “அரசாங்கத்தின் கந்தளாய் போன்ற நீர்பாசனத் திட்டங்கள் மூலம் சிங்களக் குடியேற்றத் திட்டங்களையும் தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மக்களை பலவந்தமாக குடியேற்றுவதையும் வன்மையாகக் கண்டிக்கின்றது.” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற நேரடியான வேலைத்திட்டங்களில் தமிழரசுக்கட்சியானது முனைப்புக் கொண்டிருந்தமையால் கிழக்கிலங்கை மக்கள் தமக்கான சமூக பாதுகாப்பு அரண்களாக இக்கட்சியினரின் யாழ்பாணத்து தலைமைகளை பற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகரித்தது எனலாம்.
தமிழரசுக்கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பே பிரசாவுரிமைச் சட்டத்தையும் அதை ஆதரித்த தமிழ் காங்கிரஸ் தலைமையையும் விமர்சித்து மலையக மக்களுக்காக குரல்கொடுத்தவர் செல்வநாயகம் ஆவார். யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் 1947 ஆம் ஏப்ரல் மாதத்தில் “இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒரு தேசிய இனம் அவர்களை இலங்கைத் தமிழர்கள் என்றோ, இந்தியத் தமிழர்கள் என்றோ பிரிக்கமுடியாது” என விளக்கினார். எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தினுடைய மேற்படி நடவடிக்கைகள் தமிழ் தலைமைகளின் வரிசையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பது போன்றதொரு தோற்றத்தை அளித்தது.
1915 இல் இருந்த தலைமைகள் முஸ்லிம் மக்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதச் செயற்பாடுகளை அனுமதித்து அதன் பாதிப்புகளை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன.
1931 இல் சர்வசன வாக்குரிமையை எதிர்த்து அதே தலைமைகள் செயற்பட்டன.
1945 இல் பரந்துபட்ட மக்களுக்கான இலவசக்கல்வி அமூலாக்கப்படுவதை எதிர்த்து தமிழ்த் தலைமைகள் கூக்குரலிட்டன.
1948 இல் மலையகத் தமிழர்களின் வாக்குகளைப் பறித்த யு.என்.பி இன் திட்டமிட்ட பேரினவாத, ஏகாதிபத்திய சதிக்கு தமிழ்த் தலைமைகளே துணைபோயின.
இந்த துரோக வரலாற்றுத் தொடர்ச்சியில் இருந்து மாறுபட்டு எழுந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தினுடைய புதிய அரசியலினுடைய உருவாக்கம் தமிழரசுக்கட்சி எனும் பெயரில் அதிகமாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்பட்டது. யாழ்ப்பாணத்து பணக்கார வர்க்கத்தினுடைய ஆசாபாசங்களை மட்டுமே கவனத்;தில் எடுத்து இதுவரை காலமும் செயற்பட்டுவந்த அரசியல்வாதிகளில் இருந்து செல்வநாயகம் வித்தியாசப்பட்டார். “தமிழ்த் தேசியம்” என்கின்ற ஒன்று நோக்கி முஸ்லிம், மலையக, கிழக்குவாழ் தமிழர்களை அணிதிரட்டும் பணியில் அவர் ஈடுபட்டார். மத, பிரதேச எல்லைகளைத் தாண்டிய தமிழ்பேசும் மக்களுக்கான ஒருமித்த “ஆன்மா” ஒன்றினை கட்டியமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார் என இதனைக் கொள்ளலாம். அவரது இந்த முயற்சி யாழ்பாணத்துக்கு வெளியே பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனாலும் யாழ்ப்பாணத்து மக்கள் இந்த தமிழ்த் தேசிய ஒற்றுமைக்கான அவசியம் குறித்து நேர் எதிரான பார்வையையே கொண்டிருந்தனர் என்பதை 1952 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னரே செல்வநாயகம் அவர்களால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
மேற்படி கொள்கைகளைக் கொண்டு தமிழ் பேசும் மக்களுக்காக தேவைகளை முன்னிறுத்தி ஓர் சமஸ்டி அரசுக் கோரிக்கையைக் கொண்டு அவர் பிரச்சாரத்தில் இறங்கினார். இந்த சமஸ்டிக் கோரிக்கையோடு 1952 ஆம் ஆண்டில் முதன் முதலாக தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தல் ஒன்றைச் சந்தித்தது.
பரந்துபட்ட தமிழ் பேசும் மக்களுக்கான சமஸ்டிக் கோட்பாடுகளுடனும் மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான கோரிக்கைகளுடனும் மக்களைச் சந்தித்த தமிழரசுக்கட்சி 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் கடுமையானதொரு தோல்விக்கு முகம்கொடுக்க நேரிட்டது.
யாழ்பாணத்தில் பாரிய தோல்வியைச் சந்தித்தது தமிழரசுக்கட்சி. மலையக மக்களின் வாக்குரிமைப் பிரச்சனைகள் மீதும் கிழக்கிலங்கை மக்களது குடியேற்றப் பிரச்சனை மீதும் எவ்வளவு து}ரத்திற்கு யாழ்ப்பாண சமூகம் அக்கறை காட்டியதென்கின்ற வேதனைக்குரிய செய்தியே இத்தோல்வி மூலம் வெளியானது. அரசியல் விழிப்புணர்வு கொண்ட சமூகமான போதும் தங்களது சுயநலன்களுக்கு அப்பால் வேறு எதனை இட்டும், யாரை இட்டும்? (அவர்கள் தமிழர்களாய் இருந்த போதிலும் கூட) அக்கறை கொள்ள மறுக்கின்ற அலட்சியப் போக்கினையுடைய யாழ்ப்பாணத்தின் சுயரூபம் இத்தேர்தலில் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் போன்ற பெரும்தலைவர்களையே தோற்கடித்த போது அப்பட்டமானது. இத்தேர்தலில் கோப்பாய் தொகுதியில் இருந்து கு.வன்னியசிங்கம் என்ற ஒரேஒரு வேட்பாளரைத் தவிர வடமாகாணத்தில் இருந்து போட்டியிட்ட அனைத்து தமிழரசுக்கட்சி வேட்பாளர்களும் முகத்தில் கரி ப10சப்பட்டனர். இதனை ஆராய்ந்து பார்க்கும் இடத்து இன ஐக்கியம், தமிழ்த் தேசியம், தமிழ் உணர்வு என்கின்ற இன ஒருமைப்பாட்டுக்கான அறைகூவல்களை யாழ்பாண சமூகம் மிக தௌ;ளத் தெளிவான முறையில் நிராகரித்தது என்பது புலனாகின்றது.
தமிழரசுக் கட்சி வடகிழக்கில் பிரசன்னமாக முன்னர் அகில இலங்கை தமிழ்த் தேசியக் காங்கிரஸ் காரணகாரியமின்றி முன்வைத்த தமிழீழம் எனும் வெற்றுக் கோசத்தை ஆதரித்த யாழ்ப்பாண மக்கள் ஏன் கிழக்கிலங்கையினதும், மலையக மக்களினதும் பிரச்சனைகளுடனும் அதற்கான தீர்வுகளுடனும் அரசியல் அரங்குக்கு வந்த தமிழரசுக்கட்சிக்கு தங்கள் ஆதரவை நல்கவில்லை?
பாகிஸ்தான் போன்ற பிரிவினை ஊடாக தமிழீழத்தை பெற்றுத் தருவேன் என்றும், தமிழர்களின் முகமட் ஜின்னா தானே என்றும் பொருத்தமற்ற வெற்றுக் கூச்சல்களை பரப்பிய அதுவரை காலம் இருந்த தலைமைகளை எப்படி வடமாகாண மக்கள் ஆதரித்தார்கள்? அந்த மாயையினு}டு சேர்.பொன்.இராமநாதனும், மகாதேவாவும் ஜீ.ஜீ.பொன்னம்பலமும் நிறைவேற்றி வந்த யாழ்பாணத்து மத்தியதர வர்க்கத்தினரது அபிலாசைகளை மட்டுமே காத்துக் கொள்ளும் அரசியல்தான் அவர்களது விருப்பமாயிருந்ததா? அதற்காக முஸ்லிம்களுக்கும் மலையக மக்களுக்கும், கிழக்கிலங்கை மக்களுக்கும் எதிராக யு.என்.பி போன்ற ஏகாதிபத்திய அருவருடிகளுக்கு துணை போகின்ற அந்த சூழ்ச்சி நிறைந்த அரசியலைத்தானா யாழ்ப்பாண மக்கள் விரும்பினர்? ஆக யாழ்பாண அடிப்படைவாதத்தைத் தக்கவைப்பது தான் 1952ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியை யாழ்ப்பாண சமூகம் தோற்கடித்ததன் உள்நோக்கம் என்பது புலனாகின்றது.
தமிழரசுக்கட்சியினர் தாங்கள் முகம் கொடுத்த முதலாவது தேர்தலிலேயே படுதோல்வி கண்டமையானது அவர்களது கொள்கை கோட்பாடுகள் மாற்றம் காணவேண்டிய நிலைக்கு அல்லது வேறுவடிவம் எடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை உணர்த்தியது. யாழ்ப்பாணத்து நலன்களில் மட்டுமே மையங்கொள்ள வேண்டிய பிரச்சினைகளும் கோரிக்கைகளும் முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டும், அளவுக்கு மிஞ்சிய வகையிலும் தீவிரத் தன்மையுடனும் இனஉணர்வுகளை கிளறிவிடக்கூடிய வெற்றுப்பேச்சுகளும் (பொன்னம்பலம் பாணியில்) தேர்தல் அரசியலுக்கு அவசியமானவை என்கின்ற பாடங்களை 1952இன் தேர்தல் தோல்வியானது தமிழரசுக்கட்சியினருக்கு சொல்லிக் கொடுத்தது.
இந்தப் பாடங்களோடு தான் 1956ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனது இரண்டாவது தேர்தலை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. இதே காலப்பகுதியில் தென்னிலங்கையில் அதுவரை காலமும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்த சிங்கள மக்கள் சார்பான “சிங்கள மகாசபா” எனும் அமைப்பின் வெளியேற்றம் நிகழ்ந்தது. 1951ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த வெளியேற்றம் சிறிலங்கா சுதந்திரக்கட்சியாக அரசியலில் பரிணமித்தது. இந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐ.தே.கட்சி என்கின்ற ஏகாதிபத்திய தரகுக் கட்சியின் துரோகங்களை விமர்சித்து வெளியேறியோரால் உதயமாக்கப்பட்டது. பொன்னம்பலத்தினுடைய துரோகங்களை விமர்சித்து தமிழ் காங்கிரசில் இருந்து வெளியேறிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் போன்றே ஓரளவு வெகுசன மக்கள் சார்ந்த கருத்தியல் ரீதியிலும் தென்னிலங்கையில் புதிய கட்சியான சி.சு.கட்சியின் தோற்றத்தை அடையாளம் காணமுடியும்.
இவ்விரு பிளவுகளிலும் உருவான சி.சு.கட்சியும், தமிழரசுக்கட்சியும் முறையே தம்மிடம் வந்து சேர்ந்த சிங்கள இனவாத, யாழ்ப்பாண அடிப்படைவாத சிந்தனைகளைக் களைந்து ஒருமித்து செயற்படும் வாய்ப்புகள் காணப்பட்ட போதிலும் அவ்வாய்ப்புகள் கைநழுவி விடப்பட்டது. இது மிகப்பெரியதொரு துரதிஸ்டமான நிகழ்வாகும். ஆகவே காலப்போக்கில் யு.என்.பி இற்கு நிகரான அதே இனவாதத்துடன் எப்படி சிறிலங்கா சுதந்திரக்கட்சி நடைபோட்டதோ அதேபோன்றே தமிழரசுக்கட்சியும் தாம் கடந்து வந்த தமிழ் காங்கிரஸ் விட்டுச்சென்ற யாழ் அடிப்படைவாதச் சேற்றில் மீண்டும் காலுன்றியது.
இவ்விரு கட்சிகளின் தோற்றமும் அவற்றின் உருவாக்கத்தில் கொண்டிருந்த நல்ல பல அம்சங்களை சாத்தியப்படுத்த அக்கட்சிகளை வழிநடத்திய பின்புலங்கள் வாய்ப்பளிக்கவில்லை. எந்த பிற்போக்குத் தனங்களை எதிர்த்து, எவற்றில் அதிருப்தியுற்று தமிழரசுக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் உருவாகியிருந்தனவோ அவற்றையே அடிப்படையாகக்கொண்டு அதே பிற்போக்குவாதிகளிடம் மீண்டும் மாட்டுப்பட்டனர். எனவே இவ்விரு கட்சிகளின் தோற்றமும் சிறந்ததொரு மாற்றத்தினை இலங்கை அரசியலில் ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களை தவறவிட்டன என்றே கூறலாம். இதன் காரணமாக சிங்கள மகாசபாவின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றான சுதேசமொழிக் கொள்கை தேய்ந்து தனிச்சிங்களச் சட்டமாக குறுகிப்போனது. அதேபோன்று தமிழரசுக்கட்சியின் தோற்றத்துக்கு காரணமான தமிழ் மக்களினது (மலையகம்) வாக்குரிமைப் பிரச்சனையும், திட்டமிட்ட குடியேற்ற (கிழக்கிலங்கை) எதிர்ப்புவாதமும், தமிழ் மொழியினது அந்தஸ்துக்கான போராட்டமும் தேய்ந்து சிங்கள மக்களுக்கு எதிரான தமிழ் இனவெறியாக எதிர்கால அரசியலில் பரிணமித்தன.
சுயபாஷைகளுக்கான இயக்கம் (சிங்களம், தமிழ்)
ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இலங்கையில் அதிகமான நிர்வாக உத்தியோகங்களை இலங்கையருக்கே கொடுத்த பின்னரும்கூட ஆங்கில அறிவுபெற்ற மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களிடம் மட்டுமே அவ்வுத்தியோகங்கள் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலை தொடரக்காரணம் ஆங்கிலமே அரசகரும மொழியாக தொடர்ந்தும் இருந்து வந்தமையாகும். இந்நிலைமையானது தமிழ்மொழி பேசும் பகுதிகளுக்கும், சிங்கள மொழிபேசும் பகுதிகளுக்கும் பொதுவானதொன்றாகவே காணப்பட்டது. எனவே சுயபாஷைகளான தமிழ், சிங்களம் போன்ற மொழிகளில் கல்விகற்ற மீன்பிடி, விவசாய, கூலித்தொழிலாளர்கள் எனப்படுகின்ற சமூகங்களின் எல்லாவகையான பிரிவினரையும் இவ்வுத்தியோகங்கள் சென்றடையும் வாய்ப்பு கிட்டியிருக்கவில்லை. ஆங்கிலமொழி மூலம் கல்வி கற்கக்கூடிய குடும்பப்பின்னணி கொண்டவர்களிடமே மீண்டும் மீண்டும் இவ்வுத்தியோகங்கள் சென்றடைந்து கொண்டிருந்தது.
இந்நிலைமையை மாற்றி அமைக்க சுயபாஷைகளுக்கு அரச அந்தஸ்து கோருகின்ற குரல்கள் சமூகத்தின் கீழ்தட்டு மக்களிடம் இருந்து ஒலிக்கத்தொடங்கின. “உண்மையில் ஆங்கிலத்தை அரசமொழி ஸ்தானத்தில் இருந்து நீக்கி சிங்கள-தமிழ் மொழிகளை அரசமொழிகளாக மாற்ற வேண்டும் என்கின்ற இயக்கம் 1920ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டது.”
அடிமட்ட மக்களின் தேவைகளில் இருந்து உருவான இக்கோரிக்கையானது சிங்களப் பகுதிகளைப்போன்றே தமிழப்பகுதிகளுக்கும் பொதுவானதாய் இருந்தபோதும் அது தமிழ் மொழி பேசப்படுகின்ற வடகிழக்குப் பகுதிகளில் அதிக கவனம் பெறவில்லை என்பதே உண்மையாகும். காரணம் வடகிழக்கின் அதிகார சக்திகளாக அந்த மக்களின் பெயரில் அரசியல் ஆதிக்கத்தை தக்கவைத்திருந்த கூட்டம் இந்த சுயபாஷை கோரிக்கைகளை ஒரு இயக்கமாக வளர்ப்பதை விரும்பியிருக்கவில்லை. புறநடையாக மட்டக்களப்பு பிரதிநிதிகளாய் இருந்த ஒருசிலரும் யாழ்ப்பாணத்தில் இருந்த இளைஞர் காங்கிரஸ் எனப்பட்ட ஒரு சிறிய அமைப்புமே இந்த சுயபாஷை இயக்கத்தில் அக்கறை கொண்டு செயற்பட்டிருந்தனர். ஆனாலும் அரசியல் அதிகாரம் கொண்ட யாழ்ப்பாணத்தில் இருந்த மேல்தட்டு வர்க்கத்தினர் அதனை அனுமதிக்கவில்லை. இதன் காரணமாகவே சிங்களப் பகுதிகளில் உருவாகி வந்த சுயபாஷைக்குரிய இயக்கத்தினருடன் இணைந்து தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளுக்கான அரச அந்தஸ்துக் கோரும் தேசம் பரந்த ஒருமித்ததொரு திட்டத்தினை முன்வைக்கும் சாத்தியங்கள் அற்றுப்போயின. ஆனபோதும் சிங்களப்பகுதிகளில் மெது மெதுவாக கிளைவிட்ட இந்த சுயபாஷை இயக்கத்தினரின் செயற்பாடுகள் காலப்போக்கில் வளர்ச்சியுற்றன.
அரசசபையில் 1932 இல் ஜீ.கே.டபிள்யு.பெரேரா என்பவர் மூலம் அரசசபை விவாதங்கள் சிங்களம், தமிழ் மொழிகளில் இடம்பெறவேண்டும் எனும் பிரேரணை பலமானதொரு கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. அதேபோன்று அரச அலுவலகங்களிலும் “சுயபாஷைகள்” (சிங்களம் மட்டும் அல்ல என்பதைக் கவனிக்க) உபயோகிக்கப்படவேண்டும் எனும் பிரேரணைகளும் இருவருடங்களின் பின்னர் அவராலேயே கொண்டுவரப்பட்டது. இந்த சுயபாஷைகளுக்கான இயக்கத்தின் அவசியத்தையும் அதனு}டாக இருஇனங்களிடையே பரஸ்பர ஒற்றுமையை வளர்க்கும் நோக்கிலும் மட்டக்களப்பு அங்கத்தவராய் இருந்த எஸ்.ஓ.கனகரெட்னம் அவர்கள் 1937 ஆம் ஆண்டில் “தமிழ் பாடசாலைகளில் சிங்களமும், சிங்களப் பாடசாலைகளில் தமிழும் கட்டாய பாடங்களாக கற்பிக்கப்பட வேண்டும்” என்கின்ற ஆலோசனையை முன்வைக்கும் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தார். இதனை யாழ்ப்பாண இளைஞர் சங்கமும், ஆசிரியர் சங்கமும் ஆதரவளித்து வரவேற்றன. ஆனால் கிறிஸ்தவப் பாதிரியான பீற்றர்பிள்ளை கடுமையாக இத்திட்டத்தை எதிர்த்து விளக்கமளித்தார். இதன்காரணமாக கனகரெட்ணம் அவர்களின் மொழிகளுக்கிடையே பரஸ்பர உறவைப் பேணும் நன்நோக்கம் கொண்ட இத்திட்டம் கைகூடாமல் போயிற்று.
1943ஆம் ஆண்டு அவ்வேளை புதிய அங்கத்தவராய் அரச சபைக்குள் நுழைந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் கூட இந்த சுயபாஷை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். அதன்காரணமாக “சிங்களம்” அரச கருமமொழியாக இருக்க வேண்டும் எனும் பிரேரணையை அரசசபையில் அவர் கொண்டு வந்தார். ஆனால் மட்டக்களப்பு பிரதிநிதியாய் இருந்த வி.நல்லையா “தமிழ்” குறித்த திருத்தத்தினை அவருக்கு சுட்டிக்காட்டினார். அதனை மிகச் சாதணமான சுயவிமர்சனத்துடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஏற்றுக்கொண்டார் என்பதையும் அதன்பின்னர் சிங்களம் மட்டும் என்று இல்லாமல் தமிழும் என பிரேரணை திருத்தப்பட்டது என்பதையும் நம்மில் பலர் கவனிக்கத்தவறிவந்துள்ளோம். வி.நல்லையாவுக்கு துணையாக எஸ.டபிள்யு.ஆர்.பண்டார நாயக்கா குரலெழுப்பினார். “சிங்களம் மட்டும் அரசகருமமொழியாய் இருக்கவேண்டும் என்பதன் நோக்கம் என்ன?” என்று ஜெயவர்த்தனாவை நோக்கி கேள்வி எழுப்பினார் பண்டாரநாயக்கா. தொடர்ந்து சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகளாக இருக்கவேண்டுமு; என்பதற்கு பல நியாயங்களை அவர் எடுத்துச் சொன்னார். இந்த செய்திகள் கூட தமிழ் மக்களிடையே மிகக் கவனமாக இருட்டடிப்புச் செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் முழுமையாக எதிர்த்து யாழ்ப்பாண அடிப்படைவாதத்தின் பிரதிநிதியான ஜீ.ஜீ.பொன்னம்பலம் அரசசபையில் உரையாற்றினார் என்பதுதான் மிகக்கேவலமானது. “ஆங்கில மொழியையே இருசமூகங்களுக்கும் பொதுமொழியாக கொள்ளவேண்டும்” என தன்னலங்கருத்திய கோரிக்கையை முன்வைத்து அவர் வாதிட்டார்.
இந்த சுயபாஷைகளை அரசகரும மொழியாக்குவதில் தடையாக இருந்தவர்கள் யாரென்பதை இனவாத கூச்சல்களில் இருந்து வெளியேவந்து இனியாவது எமது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஜீ.கே.டபிள்யு.பெரேரா, ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்கா போன்ற தலைவர் முன்வைத்த சுதேசமொழிக் கொள்கைகளுக்கு மேலும் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். மட்டக்களப்பு நல்லையா, டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா. தஹாநாயக்கா, டி.பி.ஜாயா, மட்டக்களப்பு எஸ்.ஓ.கனகரெட்னம் போன்ற மூவினத்தைச் சேர்ந்த தலைவர்களும் சுயபாசைகளை அரசகரும மொழியாக்குவதில் அக்கறை காட்டி உரையாற்றினர். இவர்கள் எல்லாம் ஒருமித்து ஆதரவு தருகையில் பெருந்தலைவர், தமிழ்காங்கிரஸ், தமிழீழம் என்று புரளிகளைக் கிளப்பி தமிழ் மக்களின் தலைவனாக வலம் வந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆங்கிலத்தைக் காப்பதற்காக சுயபாஷைகளை எதிர்த்தமை எப்படிப்பட்ட துரோகம்? இந்த துரோகத்தின் பின்னால் மறைந்திருந்த சக்திகள் யார்? யாழ்ப்பாண உயர்வர்க்கத்தினுடைய ஆங்கில ஆதிக்கம் இலங்கை எங்கும் தக்கவைக்கப்படுவதற்கேற்ப “ஆங்கிலம் மட்டும்” என்கின்ற மொழிக்கொள்கையில் விடாபிடியாய் நின்ற ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்றவர்கள் எப்படி அடிமட்ட மக்களினதும், கிழக்கு மாகாண மக்களினதும் தலைவர்களாய் இருக்கமுடியும்?
இதுபோன்ற ஆங்கில பிடியில் இருந்து மாறவிரும்பாத தமிழ்காங்கிரஸ் போன்ற கட்சிகளின் வெகுஜன விரோதப் போக்குகளே காலப்போக்கில் தென்னிலங்கையில் சுடர்விட்ட சுயபாஷைகளுக்கான இயக்கத்தை தமிழை விடுத்து தனிச்சிங்களத்துக்கான இயக்கமாக குறுக்கிவிடும் வாய்ப்புகளை வழங்கியது.
1946 ஆம் ஆண்டு பண்டாரநாயக்காவினுடைய சிங்கள மகாசபா முன்வைத்த தீர்மானங்கள் பின்வருமாறு அமைந்திருந்தன.
“கல்வி, சுகாதாரம், வீடு, தொழில் ஆகிய துறைகளில் தீர்திருத்தம் கொண்டுவரப்படவேண்டும்”
“நாட்டில் இரு தேசியமொழிகளுக்கும் அரச அந்தஸ்து அளிக்கப்படவேண்டும்.”
மேற்படி தீhமனங்களினு}டு சிங்கள மகாசபா மக்களின் நலனிலும் இரு மொழிகளின் தேவையிலும் இனவாதமற்ற மிகத்தெளிவான நோக்கினைக் கொண்டிருந்தமை புலப்படுகின்றது. இனவாதமற்ற பண்டார நாயக்கா போன்ற தேசியத் தலைமைகள் காலப்போக்கில் 1956ஆம் ஆண்டு சிங்களத்தை மட்டும் அரசகரும மொழியாக்கி நிறைவேற்ற முன்வந்தமைக்கு பொன்னபலம் போன்ற யாழ்ப்பாண அடிப்படைவாதிகளின் அன்னிய மொழி மீதான விசுவாசமும் தமிழ் குறித்த அக்கறையின்மையுமே காரணமாயிருந்தது. இவர்களது வஞ்சகத்தனமான ஆங்கிலத்தைக் காப்பாற்றும் மொழிக்கொள்கை சுதேச இனங்களிடையே உருவாகிவந்த இனமுரண்பாடுகளை ஊக்குவித்தது. அதேபோன்று 1952ஆண்டு தேர்தலில் படுதோல்வியடைந்த தமிழரசுக் கட்சியினரின் அர்த்தமற்றவகையிலான மொழிஉணர்வை; கிளறிவிடும் சிங்கள எதிர்ப்புப் பிரச்சாரங்கள் நிலைமைகளை இன்னும் மோசமாக்கின. தென்னிலங்கையிலும் பௌhத்த சிங்கள உணர்வு மேலோங்கிய சமூகசக்திகள் மெதுமெதுவாக சிறிலங்கை சுதந்திரக்கட்சியை ஆக்கிரமித்து அதன் சுயரூபத்தை அழிக்கத்தொடங்கின. இவை அனைத்தும் சேர்ந்தே சுயபாஷைகளுக்கான போராட்டத்தினை தனிச்சிங்கள மொழிக்கானதாக குறிகிய நோக்கில் சீரழித்துவிடும் வாய்ப்புகளை வழங்கின. இதுபோன்ற புறச்சூழ்நிலைகளுடன் ஒரு தேர்தல் நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய யு.என்.பி யுடனான அதிகாரப் போட்டி என்பனவும் சேர்ந்து எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்காவை சிங்களம் மட்டும் என குரல் எழுப்பும் நிலைக்கு இட்டுச்சென்றன. மேலும்........
|