1956ஆம் ஆண்டு சிங்கள அரசகரும மொழிச்சட்டம்.
1920களில் இருந்து இலங்கையில் உருவான சுயபாஷைகளுக்கான இயக்கம் காலப்போக்கில் ஏற்பட்ட சமூக, மத, பொருளாதார, கலாச்சார நெருக்கடிகளினாலும், தேர்தல் அரசியலை நோக்கிய தமிழ் - சிங்கள அரசியல்வாதிகளின் குறுகிய நலன்களினாலும் உருமாறி சிங்கள அரசகருமமொழிச்சட்டம் ஆக குறுக்கப்பட்டு இறுதியில் (1956இல்) நிறைவேற்றப்பட்டது. இதனையே தனிச்சிங்களச்சட்டம் என திரிவுபடுத்தி சிங்கள பேரினவாதத்தின் செயற்பாடாக தமிழ் தலைமைகள் இன்றுவரை வர்ணித்து வருகின்றன. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டமையை தமிழர்கள் எதிர்கொண்ட விதம் தொடர்ந்துவந்த இலங்கை அரசியலில் பாரிய விளைவுகளுக்கும் மாற்றங்களுக்கும் இட்டுச்சென்றது.
ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஒருசில சிறிய அமைப்புகள் அதாவது வடமாகாண ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் போன்றவை சிங்களப் பகுதியில் இருந்து வெளிப்பட்ட சுயபாஷைகளுக்கான இயக்கத்தினருடன் சேர்ந்து செயற்பட்டனர். மட்டக்களப்பின் அரசியல் பிரதிநிதிகளும்கூட இந்த இரண்டு மொழிகளையும் கொண்ட கோரிக்கைகளை வலுப்படுத்த தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். சிங்களப் பகுதியில் எல்லாவிதமான பாராளுமன்ற அரசியல் பிரதிநிதிகளும் இந்த இரட்டை தேசியமொழிக்கொள்கையினை ஏககாலத்தில் அங்கீகரிக்கும் நிலையும் காணப்பட்டது. முஸ்லிம் தலைவர்கள்கூட இந்த இருமொழிக்கொள்கையை வரவேற்றிருந்தனர். ஆனாலும் ஆங்கிலத்தில் பிடியை விட்டுவிடக்கூடாது என்பதற்காக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாணத்தின் தமிழ் பெருந்தலைவர்களே. தமிழும் அரசகருமமொழியாக 1956 ஆம் ஆண்டுச் சட்டத்தில் நிறைவேற்றப்பட முடியாமல்போனமைக்கு அவ்வேளை கோலோச்சிய தமிழ் தலைமைகளே பொறுப்பேற்க வேண்டும்.
இறுதியில் இந்த சுயபாஷைகளுக்கான இயக்கம் (தமிழ் தலைவர்களை ஏகாதிபத்தியத்தின் அருவருடிகள் என்கின்ற முடிவுகளோடு) தமிழை விடுத்து சிங்;களத்தை அரசகருமமொழியாக்கும் செயற்பாடுகளில் இறங்கியது. யு.என்.பி அரசின் ஏகாதிபத்திய ஆதரவு போக்குடன் உடன்படாத எஸ்.டபிள்யு.ஆர்.டி. தலைமையிலான பிரிவினர் யு.என்.பி.யில் இருந்து வெளியேறினர். (இந்த பிரிவினரைக்கொண்ட சிங்கள மகாசபாவே 1951 ல் சிறிலங்கா சுதந்திரக்கட்சியாக வடிவம் பெறுகிறது). அதே வேளை ஏகாதிபத்திய அருவருடித் தனம் கொண்ட தமிழ் தலைமைகள் யு.என்.பி. யுடன் இணைந்து செயற்படத்தொடங்கினர். இதன்பின்னர் யு.என்.பி.யையும், தமிழ் தலைமைகளையும் ஒருமித்து எதிர்க்கும் செயற்பாடுகளில் சிங்கள மகாசபாவினரும், பௌத்த தேசிய வாதிகளும் ஒருமித்தனர்.
இந்த நிலைமைகளுடன் சேர்த்து அக்காலகட்டத்தில் இலங்கை அரசியல் சூழல் எதிர்கொண்ட சிக்கல் நிறைந்த பொருளாதாரப் பிரச்சனைகளின் பின்னணிகளை சற்றுப் பார்ப்போம். 1953 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மாபெரும் (அரிசிபோராட்டம்) ஹர்த்தால் ஏகாதிபத்திய யு.என்.பி. ஆட்சியை விலக்கி “மக்கள் ஆட்சி” ஒன்றை கொண்டுவரவேண்டும் எனும் நிலைக்கு சிங்கள சமூகம் சார்ந்த கட்சிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் எல்லோரையும் ஓரணியில் திரட்டியது.
நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க முடியாமல் டட்லியின் யு.என்.பி. அரசு திண்டாடியது. மாணவர்களுக்கான மதியபோசனம் நிறுத்தப்பட்டது, ரெயில்வே, தபால் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது, ஏழைமக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்களான சீனியினதும் அரிசியினதும் விலை உயர்த்தப்பட்டது. அதிலும் அரிசிவிலை இறாத்தல் 25 சதமாயிருந்து 70 சதமாக உயர்த்தப்பட்டது.
அரசாங்கத்தினுடைய இச்செய்கை பாமர மக்களை கடும் கோபத்துக்குள்ளாக்கியது. இதன்காரணமாக ஏற்பட்ட ஏழை மக்களின் எதிர்ப்புணர்வுகள் அரிசிப்போராட்டமாக மாபெரும் ஹர்த்தாலாக வெடித்தது. இந்த எழிச்சியினை அடக்க டட்லி ஆட்சி காவல்துறையினை ஏவிவிட்டது. இந்த அடக்கு முறையில் இருந்து தப்பிக்க பொலிசாரையும் பொலிஸ் நிலையங்களையும் தாக்குமளவிற்கு மக்கள் சென்றதனால் டட்லிசேனநாயக்கா தனது அமைச்சரவை கூட்டத்தை துறைமுகத்துக்குள் தரித்துநின்ற கப்பலொன்றில் வைத்து நடத்துமளவிற்கு நெருக்கடிக்குள்ளானார். பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யுமளவிற்கு தள்ளப்பட்டார். இந்த மக்கள் எழிச்சியை நடத்துவதில் முன்நின்றவர்கள் இடதுசாரிகளேயாகும்.
டட்லி சேனநாயக்காவின் ராஜினாமாவைத் தொடர்ந்து 1953இல் பிரதமர் பதவியை ஏற்ற சேர்.ஜோன்.கொத்தலாவல அரச எதிர்ப்பு நடவடிக்கைகளில் முன்னின்ற கொமினிஸ்ட்டுகளை அடக்கி அழிப்பதில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டார். கொம்ய10னிச நு}ல்களுக்கு அவரால் தடைஉத்தரவுகளும் போடப்பட்டன. இந்தத் தடை உத்தரவுகள் இடதுசாரிகள் சார்ந்திருந்த உள் நாட்டின் மரபார்ந்த அமைப்புகளையும் பாதித்தது. ஜோன்.கொத்தலாவல அவரது தனிப்பட்ட வாழ்வுமுறையிலும் ஐரோப்பிய கலாசாரத்தில் மூழ்கி இருந்தகாரணத்தினால் தென்னிலங்கையில் மரபுசார்ந்த காப்பாளர்களாகத் திகழ்ந்த சுதேச அமைப்பினர் இவர் மீது இரட்டைக்கோபம் கொண்டனர். இலங்கையின் பாரம்பரிய பழக்கவழக்கத்தில் ஊறியிருந்த பொளத்த பீடங்களும் அதன் வழிபாட்டாளர்களும் இவருக்கெதிராக கிளர்ந்தெழத் தொடங்கினர்.
இதுபோன்ற பலவகைகளிலும் பௌத்தம் குறித்தும் சிங்கள மொழி குறித்தும் தீவிரமாக செயற்பட்டுவந்த தேசிய மரபுசார்ந்த பலதரப்பட்டோரின் ஒன்றிணைப்பில் “லங்கா ஜாதிக குருசங்கமய” எனும் மதவாதிகளின் அமைப்பு களத்தில் இறங்கியது. சிங்கள ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள், ஆயுள்வேத வைத்தியர்கள், பௌத்த பிக்குகள் போன்ற பலதரப்பட்ட சமூகப் பிரிவனரையும் ஒன்றிணைத்து 1954 ஆம் ஆண்டு செப்ரம்பர் 4 ம் திகதி “பஞ்ச மகா பலமண்டலய” எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டில் புத்தபகவானுடைய 2500 ஆவது வருட பிறந்தநாள் கொண்டாட்டங்களில் நிகழ்த்தப்பட்ட பேச்சுகளும், வெளியிடப்பட்ட நு}ல்களும் ஒரு மிகப்பெரிய பௌத்த எழுச்சியை சிங்கள மக்களிடையே தோற்றுவித்திருந்தது. இவ்வாறான பௌத்தம் குறித்த தீவிரமான உந்துசக்தியை சிங்களமக்களிடம் அது ஏற்படுத்தியது.
இதன் காரணமாக இவர்களது சிங்கள மொழியினதும் சிங்கள மக்களினதும், பௌத்த மதத்தினதும் உயர்வுக்கான கோரிக்கைகள் மென்மேலும் அதிகரித்த வண்ணம் இருந்தன. ஆனால் இவற்றையெல்லாம் அசட்டைசெய்த அன்றைய பிரதமர் ஜோன்.கொத்தலாவல பிரச்சனைகளை ப10தாகாரமாக மாற்றினார். இந்த நிலையில் சிங்களப் புத்திஜீவிகளான ஆனந்தா கல்லு}ரி அதிபரான எல்.எச்.மெத்தானந்தா, லேக்கவுஸ் உரிமையாளர் டி.ஆர்.விஜயவர்த்தனா (ரணில் விக்கிரமசிங்காவின் பாட்டனார்.) போன்றவர்கள் மேலும் தமது எழுத்துகளிலும் பேச்சுகளிலும் இனவாத எண்ணை ஊற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இத்தகைய சூழ்நிலைகள் அனைத்தினதும் திரட்சியே இலங்கைத் தேசியம் என்கின்ற ஒருமிப்பு சிங்களத் தேசியமாக உருமாற வழிசமைத்தன என்பதை நாம் கண்டுகொள்ளத் தவறக்கூடாது.
இத்தகைய சிங்கள தேசியத்தின் எழுச்சியொன்றிற்கு தலைமையேற்கவேண்டிய வரலாற்றுக்கடமை ஒன்றை அவ்வேளைதான் உருவாகியிருந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி சரியாகப் புரிந்துகொண்டு தனது முதலாவது தேர்தலை சந்திக்கத் தயாரானது. அதுமட்டுமன்றி 1945 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலவசக்கல்வியினு}டாக பெரும்திரளாக ஆரம்பக்கல்விக்குள் நுழைந்த சிங்கள மாணவர்கள் பத்து வருடங்கள் கடந்த நிலையில் (1955 ஆண்டு) படித்த இளைஞர் குழாமாக பாடசாலைகளில் இருந்து வெளியேறி வேலைவாய்;ப்புகளுக்காகக் காத்திருந்தனர். 1945 ஆம் ஆண்டு சுமார் 21336 ஆக இருந்த வேலையில்லாதோர் தொகை இலவசக் கல்வியின் பலனாக 10 வருட இடைவேளையில் 71010 ஆக உயர்ந்தது. கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு உயர்வை எட்டியிருந்த வேலையற்றோர் தொகை அதீத வளர்ச்சியின் அறிகுறியாகும். இந்த இளைஞர் சக்திகளை தம்வசம் இழுப்பதற்காக அவர்களுக்கான எதிர்கால நம்பிக்கையைத் தரக்கூடிய பெரும்தலைவராகவும் சிங்களத் தேசியத்தின் காப்பாளராகவும் எஸ்.டபிள்யு.பண்டாரநாயக்கா தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ள முயன்றார். இந்நிலைமைகள் அனைத்தினதும் பின்னணியில்தான் (அவர் எதிர்கொண்டிருந்த) 1956 ஆம் ஆண்டுத் தேர்தலை ஒட்டிய அவரது நகர்வுகள் அமைந்திருந்தன. வெற்றிவாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அவர் கையாண்ட குறுகிய நோக்கங்களில் ஒன்றாகவே சிங்களத்தை மட்டும் அரசகரும மொழியாக்கும் பிரகடனத்தை அவர் வெளியிட நேர்ந்தது என்பதே உண்மை.
இவ்வனைத்து நிலைமைகளும் சிங்களப் பகுதியில் அதுவரை காலமும் உருவாகி வந்த இலங்கைத் தேசியம் எனும் மனப்பாங்கை பின்னடித்து பௌத்த சிங்களத் தேசியமாக உருவாக்குவதில் போய் நின்றது. இன்னிலைமைக்கு சிங்களத் தலைமைகளை மட்டும் குற்றம் கூற முடியாது என்பதையும் யாழ்ப்பாணத்து அடிப்படைவாதிகளின் ஏகாதிபத்திய ஆங்கில அருவருடித்தனமும் சிங்கள மக்களை சிங்களத்தேசியம் நோக்கி கொண்டுசென்றதில் மிகப்பெரிய பங்குவகித்தது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வேளையிலும் கூட இடதுசாரி கட்சிகளான லங்கா சமசமாச கட்சி, கம்யுனிஸ்ட் கட்சி போன்றவை இருமொழிகளுக்காகக் குரல்கொடுத்தன. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்திற்கு முன்னோடியாக 1955 செப்ரம்பரில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மொழிபிரகடனமானது தமிழ் குறித்து அக்கறை கொண்டிருந்தமையும் சிங்களவெறி அதில் காணப்படாமையையும் நமது தமிழ்த் தலைமைகள் வசதியாக மறைத்துவிட்டன. 1956 ஆண்டு பெப்ரவரியில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் அடுத்த தேர்தலை களனியில் கூடிய ஐ.தே.கட்சி மகாநாடு “தனிச்சிங்களம்” அரசகருமமொழியாக்கப்படவேண்டும் என்கின்ற தீர்மானத்தை எடுத்தது. அதுமட்டுமன்றி அக்கட்சியில் இருந்து தமிழ் உறுப்பினர்களின் “மனித உரிமைகள்” சட்ட யாப்பில் இடம்பெறவேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியைவிட இன்னுமொருபடி மேலே போய் யு.என்.பி. ஆனது இனவாதத்தினை கக்கிய நிகழ்வாகவே இது இருந்தது.
தேர்தலுக்காக இரு பெரும் கட்சிகளும் இனவாதச் சேற்றில் மூழ்கினர். 1956 ஆண்டு நடந்த தேர்தலில் சிங்களக் கட்சிகள் மட்டுமன்றி தமிழ் கட்சிகளும் மொழிவெறியையே பரப்பினர் என்பதை நாம் காணத்தவறக்கூடாது. 1952 இல் யாழ்ப்பாணத்துக்கு சம்பந்தம் இல்லாத கிழக்கு மாகாணத்தில் அமைந்திருந்த கல்லோயா குடியேற்றத்திட்டத்தையும், மலையக மக்களின் வாக்குரிமைப் பிரச்சனையையும் படுதோல்வியடைந்த செல்வநாயகம் இத்தேர்தலில் மொழியுணர்வை தனது பிரச்சாரங்களில் முன்னிறுத்தினார். “மொழியுணர்வை முன்னிறுத்தினார்” என்பதைவிட மொழியுணர்சிகளை கிளறிவிட்டார் என்பதே பொருத்தமானதாய் இருக்கும் ஏனெனில் பாராளுமன்ற விவாதங்களில் ஆங்கிலத்தை தக்க வைப்பதற்காகவே குரல் எழுப்புவதை கடமையாகக் கொண்டிருந்த இவர்கள் தமிழ் மொழி குறித்து கிஞ்சித்தும் அக்கறை கொண்டிருக்கவில்லை. இலங்கையின் ஆட்சி அதிகாரங்களில் ஆங்கிலம் தனது இடத்தை இழந்துவிடக்கூடாது என்பதற்காக சுயபாசைகளின் வரவை ஒட்டுமொத்தமாக எதிர்த்தவர்கள் இவர்கள். காலப்போக்கில் சுயபாசைகள் என்பது சிங்களம் மட்டுமாகவே சுருங்கிப் போனபோது அதை தாம் எதிர்ப்பதானது தமிழ் மொழிக்கான சம அந்தஸ்தை கோரியே என்கின்ற வகையில் தமது பிரச்சாரத்தை கட்டவிழ்த்து வி;ட்டனர். இதில் தமிழ் மொழியைக் காப்பதற்காகவும் தமிழ் மொழியின் உரிமைக்காகவும் தமது போராட்டங்கள் அமைவதாக மேலோட்டமாக இவர்கள் காட்டிக்கொண்டாலும் உண்மையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கைளின் உள்நோக்கம் அதுவன்று. சிங்களம் அரசகரும மொழி ஆகக் கூடாது என்பதோடு இதன் மறுபக்கம் ஆங்கிலம் அரசகருமமொழி அந்தஸ்தை இழந்துவிடக்கூடாது என்பதாகவே இருக்கிறது. கடந்தகால மொழி விவாதங்களில் ஆங்கிலம் அகற்றப்பட்டுவிடக்கூடாது என்பதில் யாழ்ப்பாணத் தலைமைகள் கொண்டிருந்த குள்ளநோக்கத்தின் தொடர்சியே இந்த தமிழ்மொழிக்காக போராடுவதாக சொல்லிக்கொண்ட வேளைகளிலும் உள்ளோட்டமாக தொடர்ந்தது. இதனை அவ்வேளை கிழக்கிலங்கைவாழ் மக்கள் புரிந்துகொண்டிருக்கவில்லை. தமிழ்மொழிக்கான போராட்டத்தையே யாழ்ப்பாணத் தலைமைகள் மேற்கொள்வதாக இவர்கள் நம்பினர். தாமும் தமிழர்கள், தமது மொழியும் தமிழ் என்பதால் கிழக்கிலங்கைவாழ் முஸ்லிம் தமிழ் சமூகங்கள் இந்தப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டனர். அவ்வேளைகளில் மட்டக்களப்பு பிரதிநிதிகளாய் இருந்தவர்கள் கூட இத்தகைய யாழ்ப்பாணத் தலைமைகளின் வழிநடத்தல்களின் பின்னே கிழக்கிலங்கை மக்களை அணிதிரட்டியது இதற்கு காரணமாகும். இதனு}டாக யாழ்ப்பாணத்தின் நரித்தனமான அரசியல் பிரச்சாரங்களின் கிழக்கிலங்கை மக்கள் ஏமாறத் துணைநின்ற வரலாற்றுத் தவறை இவர்கள் தமது மக்களுக்கு இழைத்திருந்தனர்.
முழு இலங்கையிலும் மொழிப்பிரச்சனையை அடிப்படையாகக் கொண்ட பிரச்சாரங்களே 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் முன்நிலை வகித்தது. இதன்காரணமாக சிங்கள மொழி உணர்வின் அடிப்படையில் அணிதிரட்டப்பட்ட மக்களையும் சிங்களத்தை அரசகரும மொழியாக்குதல் என்பதை நோக்காகக் கொண்டே உருவாகிச் செயற்பட்டு வந்த புரட்சிகர சமாசமாச கட்சி, பாஷா பெரமுனை போன்றவற்றுடன் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கூட்டுச்சேர்ந்திருந்தது. இந்தக் கூட்டணி பொதுஜன ஐக்கிய முன்னணி என அழைக்கப்பட்டது. அதேபோல் தமிழ் பகுதிகளில் செயற்பட்ட ஜீ.ஜ.Pபொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் யு.என்.பி. யுடன் இணைந்து போட்டியிட்டது. காங்கிரசில் இருந்து பிரிந்து இயங்கிய தமிழரசுக் கட்சி இந்தத் தேர்தலில் சமஸ்டிச் திட்டத்தினை முன்வைத்து போட்டியிட்டது. வகை வகையான சிங்கள எதிர்ப்பு வடிவங்களுடன் தமது பிரச்சாரத்தை முன்னெடுத்தவர்களுக்கே வடகிழக்கு பகுதிகளில் பெருவெற்றிவாய்ப்பு கிட்டியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் தேசிய அளவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட அரசாங்கமானது ஆங்கிலத்தை அகற்றி சுயபாசைகளில் ஒன்றான சிங்களத்தை அரச அந்தஸ்துக்கு உயர்த்தியது. அதேவேளை சிறுபான்மை மொழியான தமிழுக்கு அது அதிகம் பேசப்படுகின்ற வடகிழக்குப் பகுதிகளில் “பிராந்திய அந்தஸ்து” என்பதையும் வழங்கியது. இதையே தனிச்சிங்களச் சட்டம் என தமக்கு வசதியான மொழிபெயர்ப்பை இட்டு தமிழரசுக் கட்சியினர் எதிர்த்தனர். இந்த சட்டமூலத்தின் முழுவடிவங்களை மறைத்து சிங்கள எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னிறுத்தினர்.
இந்தச் சட்டத்தினு}டு இலங்கையின் அரசகரும மொழியாக சிங்களம் பிரகடனப்படுத்தப்பட்டது உண்மைதான். அது காலணித்துவ மொழியான ஆங்கிலத்தை அகற்றும் ஒரு செயற்பாட்டின் இறுதிக்கட்டம் எனும் வகையில் சாதகமான ஒன்றாகவும் சிறுபான்மைமொழியான தமிழையும் அதே தரத்துடன் அரசகரும மொழியாக்கத் தவறியது எனும் வகையில் பெருந்தன்மையற்ற ஒன்றாகவும் மட்டுமே பார்க்கப்பட்டிருக்க வேண்டும்;. தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் தமிழுக்கும் சம அந்தஸ்து கேட்டு போராட முன்வந்தது நியாயமானதொன்று. ஆனால் தமிழ் பேசும் பகுதிகளில் இந்தப் போராட்டம் நியாயமான வடிவங்களில் முன்னெடுக்கப்படவில்லை. “தனிச்சிங்களச் சட்டம்” என்று திரும்பத் திரும்ப பிரச்சாரப்படுத்தியதன் மூலம் இச்சட்டமானது தமிழ்மொழியை அழித்து சிங்களத்தை மட்டும் இலங்கைவாழ் மக்கள் எல்லோர்மீதும் திணிக்கும் ஒரு சட்டமாக உருவகிக்கப்பட்டது. இந்த உருவகிப்பானது சிங்களப் பெரும்பான்மை இனம்மீது ஒரு அச்ச உணர்வை தமிழ் பேசும் மக்கள் எனும் வகையில் கிழக்கு மாகாணத்தமிழர்களிடமும் ஏற்படுத்தியதில் வியப்பு ஏதும் இல்லை.
இதற்கு வசதியாக வடகிழக்குப் பிராந்தியத்துக்கு வெளியே அரச உத்தியோகத்தர்களாய் இருந்த பல யாழ்ப்;பாணத்தவர்கள் இடைநிறுத்தப்பட்டமை அமைந்தது. கிழக்கு மாகாணத்தில் இருந்து வெகுசிலரே இச்சட்டத்தினால் (தென்னிலங்கைப் பகுதியில்) வேலைவாய்ப்பினை இழந்தனர். இது எப்படியிருந்தபோதும் ஆங்கிலம் தெரியாத சிங்கள பாமர மக்களிடையே பணிபுரிகின்ற அரச உத்தியோகஸ்தர்கள் அம்மக்களுக்குப் புரியக்கூடிய சிங்கள மொழியில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும் என கேட்கப்படுவதில் எவ்வித தவறும் இருக்கமுடியாது. இதையே தமிழ் பகுதியில் பணிபுரிந்தவர்களிடமும் சிங்களத்தைக் கற்கக் நிர்ப்பந்தித்திருந்தால் அதுவே இனவாதமாக இருக்கமுடியும். அதைவிடுத்து பொத்தாம் பொதுவாக “சிங்களம் தெரியாவிட்டால் அரசபணி புரியமுடியாது” என்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டதாக திரிபுபடுத்தல் பிரச்சாரங்களை தமிழரசுக்கட்சி மேற்கொண்டது. இப்படியான ஒரு மாயையை தமிழ் மக்களிடையே பரப்பும் விதமான ஒருபிரச்சாரம் அதிக கல்விபெறாது தமது கிராமிய பொருளாதார வாழ்வினில் நிம்மதியுடன் வாழ்ந்து வந்த கிழக்கிலங்கை மக்களிடத்தில் “கலவர” மனநிலையை உருவாக்கியது. தமிழ் மொழியின் எதிர்காலப் பாதுகாப்புச் சம்பந்தமாக பாரிய ஆபத்தொன்;றை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகள் மேற்கொண்ட பிரச்சார யுத்தி கிழக்கிலங்கை மக்களை வெகுவாக அச்சமடையச் செய்தது. சிங்களக் கிராமங்களைக் கொண்ட நீண்ட எல்லைப்புறங்களை மிக அண்மித்ததாக உடைய கிழக்கிலங்கை மக்களுக்கு தமது எதிர்காலப் பாதுகாப்பு என்ன என்கின்ற கேள்விகள் எழுந்தது. இதன்காரணமாக தமது பாதுகாப்பு உணர்வினைக் கருத்தில் கொண்டு செயற்படும் பெரும்பான்மை தமிழர்களைக் கொண்ட வடமாகாணத்து அரசியலுடன் இணைந்து கலப்பதே ஒரே வழியென கிழக்கிலங்கை எங்கும் பொதுசன மனநிலையொன்றை தோற்றுவிப்பதில் யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகள் வெற்றி கண்டனர்.
இந்த குறுகிய நோக்கிலான மொழி வெறிப்பிரச்சாரமே சின்னத்தனமான சிங்கள எதிர்ப்பாகவும் சிறி எதிர்ப்பாகவும் மாறியது. இதனு}டாக தமிழரசுக் கட்சியினர் வடகிழக்கு எங்கும் பெரும் கலவர சூழ்நிலையொன்றை தோற்றுவித்தனர். இந்தக் குழப்பங்களின் பின்னணியில் தமிழ்மொழி தேசியமொழியாக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை மறைந்து சிங்கள மொழிக்கு எதிரான ஒரு மனநிலையையே வடகிழக்கு எங்கும் தோற்றுவித்திருந்தது. ஆங்கிலம் அரசகரும அந்தஸ்தில் இருந்து அகற்றப்பட்டுவிடக் கூடாது என்கின்ற அக்கறையே தமிழ் அரசியல்வாதிகளின் உள்நோக்கமாக இருந்தது இதற்குக் காரணமாகும். ஆங்கிலம் அகற்றப்பட்டால் பெரும் சட்ட வல்லுணர்களாகவும் ஆங்கிலப் புலமையாளர்களாகவும் பிழைப்பு நடத்திவந்த தமிழரசுக்கட்சித் தலைமைகள் தமதும் தமது சகாக்களினதும் உத்தியோகங்கள் அர்த்தமற்றதாகிவிடும் என உணர்ந்தனர். இதுதான் இவர்களது சிங்கள எதிர்ப்புணர்வின் முக்கிய பின்னணியாகும். மட்டக்களப்பு பிரதேச எம்பிகளாக இருந்த நல்லையா, கனகரெத்தினம் போன்றோருக்கு தமிழ் மொழியையும் சிங்களத்தோடு சேர்த்து தேசியமொழியாக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்திருந்தாலும் அதனை நிறைவேற்ற யாழப்பாணத்து பெரும் தலைமைகள் தடையாக இருந்தன. இன்னிலையில் மட்டக்களப்பு எம்பிகளும் மௌனமாகி தமது பெருந்தலைமைகளின் பின்னால் இழுபட நேர்ந்தது. சிறி எதிர்ப்பு போராட்டம், சத்தியாக்கிரகப் போராட்டம் போன்றவற்றின் பின்னால் கிழக்கிலங்கை மக்களும் கவரப்பட்டனர். இந்தப்போராட்டங்களில் காணப்பட்ட அர்த்தமற்ற சிங்கள எதிர்ப்பும், சிறி எழுத்தை தார்ப10சி அழிக்கும் வெறியும், சிங்கள மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களின் மனவுணர்வுகளை தீண்டிவிட்டது. ஏற்கனவே சிங்களப் பகுதிகளில் தீவிர மொழி உணர்வாளர்களாக இருந்த கே.எம்.பி.ராஜரத்தினா போன்றவர்கள் சிங்கள எதிர்ப்புக் கோசத்தினால் தீண்டப்பட்டிருந்த சிங்களமக்களின் மனவுணர்வுகளை தமிழர்கள் மீதான வெறியாக மாற்றி இனக்கலவரங்களை ஏற்படுத்தினர்.
இந்தச் சிங்கள மொழிச்சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறப்பட்டதைத் தொடர்ந்து 05-06-1956 இல் காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட எதிர்ப்பு சத்தியாக்கிரகம் தமிழர் வரலாற்றில் மிக முக்கிய பங்கெடுத்து வந்திருக்கின்றது.
இந்த “சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்களின் மீது சிங்களக் காடையர்கள் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தினார்கள்” என்றும் இது போன்ற அகிம்சைப் போராட்டங்கள் மறுக்கப்பட்டதினாலேயே தமிழர்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதென்றும் தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் இதுவரை கற்பித்து வந்திருக்கின்றனர். ஆனால் இந்தச் சத்தியாக்கிரகங்களின் பின்னணியில் தமிழர்களுக்கான பொதுநலன்கள் இருக்கவில்லையென்பதை இந்த சத்தியாக்கிரகிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நடந்தவிதங்கள் எமக்கு இன்றும் உணர்த்துகின்றன. அதாவது தாக்குதலின்போது காடையர்கள் எனச் சொல்லப்பட்டவர்கள் எழுப்பிய கோசம் ஒன்றே இதுபற்றிய மர்மங்களைத் துலக்க போதுமானதாய் உள்ளது. “அன்னியர்களே வெளியேறு”, “ஏகாதிபத்திய தாசர்கள் ஒழிக” என்று சிங்களவர்கள் போட்ட கோசம் எதை உணர்த்துகிறது என்பதை நுணுகி ஆராய்கின்ற போது இந்த சத்தியாக்கிரகிகள் தமிழர்களின் நலன்களுக்காக போராடவில்லை என்பதையும் அவர்கள் தமிழர்களின் பிரதிநிதிகளாகவோ ஏன் தமிழர்களாகவோ கூட சிங்களவர்களால் நோக்கப்படவில்லை என்பதையும் அவதானிக்க முடியும். அதாவது ஆங்கிலத்தை காப்பாற்ற அன்னியர்களின் ஆட்சியை வேறுவடிவில் தொடர வழிதேடுகின்ற ஏகாதிபத்தியத்தின் அருவருடிகளாகவே சிங்களவர்கள் அவர்களை நோக்கினர்.
அது ஆங்கில காலனித்துவத்தின் புதிய பிரதிநிதிகளான (யாழ்ப்பாணத்) தலைமைகளுக்கு எதிராக சுதேச மொழியுணர்வு கொண்ட (சிங்கள) மக்களால் நடத்தப்பட்ட தாக்குதல் என்பதே இந்த சத்தியாக்கிரகிகள் மீதான தாக்குதலின் சூட்சுமம் ஆகும். ஆனால் இவற்றை தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதலாகவும், தமிழ் மொழிக்கெதிரான தாக்குதலாகவும் யாழ்ப்பாணத்தின் அதிகார வர்க்கம் பிரச்சாரத்தை வெற்றிகரமாகச் செய்தனர் இதன்காரணமாக தமிழ்மொழி பேசுகின்ற கிழக்குமாகாண தமிழர்கள், முஸ்லிம்கள் போன்றோர் ஏமாறுவது இயல்பே.
இதன்பின்னர் 1958 இல் நடந்த இலங்கையின் முதலாவது இனக்கலவரம் என்று சொல்லப்பட்ட கலவரம் கூட சாராம்சத்தில் இனரீதியான ஒடுக்குமுறை உணர்வோடு இயங்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 1956 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சுதேச மொழிச்சட்டத்தை நேர்மையான முறையில் தமிழ் மக்களின் நலனிலிருந்து அணுக திராணியற்ற தமிழரசுக்கட்சி தலைமை ‘சிங்களம் படியாதே’ எனும் கோஷத்தைக் கிளப்பியது. அதேபோன்று 1957 ல் சிறி எதிர்ப்பு என்று தொடங்கி சிங்கள “சிறீ” எழுத்தின் மீது தார் ப10சும் கொச்சைத்தனமான அரசியல் நடவடிக்கைகளில் தமிழர்களை ஈடுபடுத்தியதன் மூலம் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சனைகளை சிங்கள மக்களிடையே புரிந்துகொள்ள வைப்பதில் தவறிழைத்தனர். அதுமட்டுமின்றி தமிழ் மக்கள் தமக்கு எதிரானவர்கள் எனும் உணர்வினை சிங்களவர்களிடையே பரப்பும் பணியையே இச்செயற்பாடுகளினு}டு தமிழரசுக்கட்சித் தலைமைகள் செய்தனர். இவ்வகையில் தமிழ் மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சிகளை சிங்களவரிடத்தில் ஏற்படுத்தியதில் கணிசமான பங்கு யாழ்ப்பாணத் தலைமைகளையே சாரும். இன்னிலையில் சிங்;கள மக்கள் மத்தியிலும் இருந்த சுயநலமான மூன்றாம் தர அரசியல்வாதிகள் இன் நிலமைகளை தமிழ் விரோத நடவடிக்கைகளைத் து}ண்ட பயன்படுத்தியதில் ஆச்சரியமில்லை. அப்படிப்பட்ட அரசியல்வாதிகளில் ஒருவரான கே.எம்.பி.ராஜரெட்ணா என்பவரின் து}ண்டுதலினாலேயே 1958 ஆம் ஆண்டு சிங்கள மக்களிடத்தில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் ஒன்றைத் தொடுக்கவேண்டும் என்கின்ற வெறியுணர்ச்சி ஏற்படுத்தப்பட்டது. இதுவே இலங்கையில் ஏற்பட்ட முதலாவது தமிழ் சிங்கள கலவரமாகும். மேலும்........ |