Untitled Document
Untitled Document
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமும் எதிர்பார்க்கும் இலக்கும்......வவுனியா நகரசபையில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடுவோரின் விருப்பு இலக்கங்கள்- (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு) அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும் ...தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேசங்களின் தலையீடு ஏன்?..............சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும...சுதந்திரபுரத்தில் அப்பாவி மக்களை இலக்குவைத்த புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு சிறீ ரெலோ வன்மையாகக் கண்டித்துள்ளது...

Untitled Document

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 
சுதந்திர கிழக்கு நோக்கி முதல் 41 நாட்கள்
எழுதியவர்-பேராசிரியர் அறுமக்குட்டி போடி
 

எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும்

“தந்தை செல்வா” என்று வடக்கில் மட்டும் அல்ல கிழக்கு மாகாண மக்களாலும் அன்பாகவும் மரியாதை உணர்வுடனும் அழைக்கப்படுபவர் இந்த செல்வநாயகம் ஆவார். இவர் உருவாக்கிய தமிழரசுக் கட்சியின் தோற்றுவாய் பரந்துபட்ட வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சனைகளில் அக்கறைகொண்டிருந்தமையே இதற்கு ஒரு காரணமாகும். மெல்லிய உருவமும், அமைதியான தோற்றமும், வயது முதிர்ந்த காலத்தில அவர் முன்னெடுத்த தீவிர அரசியல் போராட்டமும் அவரை தமிழ் மக்களின் தந்தையாக எல்லோரும் மனதார விழிக்க காரணமாயிற்று.

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் “கொழும்பு” அரசியலை நிராகரித்து வடகிழக்கின் முலை முடுக்கு எங்கும் தமிழ் அரசியலை நுழைத்தவர் எனும் வகையில் 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் அவர் பெரு பெற்றியைப் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கான தலைமையை ஏற்றார்.

ஆனால் 1956 ஆம் ஆண்டு வெற்றிக்குப் பின்னர் இந்த செல்வநாயகம் எனும் தலைமையும் சரி, தமிழரசுக் கட்சியும் சரி நடந்துகொண்ட விதம் கடுமையான விமர்சனத்துக்குரியது. அதாவது 1957 ஆண்டு கொண்டுவரப்பட்ட நெற்காணிச் சட்டத்தினை எதிர்த்தமை, 1957 இல் நிறைவேற்றப்பட்ட பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் மலையக மக்களை காட்டிக்கொடுத்து துரோகம் இழைத்தமை, 1965 ஆம் ஆண்டில் யு.என்.பி. அரசுடன் அமைச்சுப் பதவிகளுக்காக இணைந்து விலைபோனமை போன்ற வரலாற்றின் நிகழ்வுகள் இவர்களின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தப் போதுமானவை. ஆனபோதும் 1956 இன் பின்னர் இலங்கையில் உருவான இனத்தையும், மொழியையும் அடிப்படையாகக் கொண்ட இருதுருவ அரசியலின் போக்குகள் தமிழ் மக்களுக்கு தமது சொந்த தலைவர்களின் இந்தத் துரோகங்கள் குறித்து சிந்திக்கும் வாய்ப்புகளையோ விமர்சனம் செய்யும் சந்தர்ப்பங்களையோ கொடுக்கவில்லை. படிப்படியாக அதிகரித்து வந்த சிங்கள இனவாதப் போக்குகள் தமிழ் மக்களை தமது தலைவர்களை கண்மூடித்தனமாக நம்பவேண்டிய நிலைக்குத் தள்ளியது.

கிழக்கிலங்கை மக்கள் தொடர்ந்தும் தாம் ஏமாற முடியாது என்று கடந்த இரண்டு வருடங்களாக போராடி வருகின்ற இன்றைய நிலையில் இந்த தமிழரசுக் கட்சியினரின் துரோகத் தனங்களை தோண்டியெடுத்து வெளிப்படுத்த வேண்டிய தேவை அவசியமானதாகும். ஏனென்றால் இன்றைய அரசியலுக்குரிய விதையை ஊன்றியவர்களை கிழக்கிலங்கை மக்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது. யாழ்ப்பாணத்து தலைமைகள் இன்று கிழக்கிலங்கை மக்களுக்கு நஞ்சை அறுவடையாகத் தந்துகொண்டிருக்கும் அரசியலையே விட்டுச் சென்றிருக்கின்றார்கள். அந்த நஞ்சுவிதை யாரால் எப்படி ஊன்றப்பட்டது? யாரால் எப்படி தண்ணீர் ஊற்றி வளர்க்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளுதல் ஊடாக மட்டுமே தமது வாயில் நஞ்சைத் திணிக்கும் இன்றைய யாழ்ப்பாணத் தலைமைகளிடம் இருந்து தப்பிக்க கிழக்கிலங்கை மக்களால் இயலும். இன்று இன்னிலை உணரப்பட்டு வருகின்றது.

1957 இல் நெற்காணிச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது தந்தை செல்வா என் அழைக்கப்பட்ட இந்த மனிதர் எப்படி நடந்துகொண்டார்? சுருக்கமாகச் சொன்னால் இந்தச் சட்டமானது நிலமற்ற ஏழை மக்களின் காணிப்பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வினைத் தேடித்தரும் நன்நோக்கத்தினை மட்டுமே கொண்டிருந்தது.

ஆனால் அதையிட்டு மக்களுக்காக அரசியல் நடத்துவதாக சொல்லிக்கொண்டவர்கள் அக்கறைப்படவோ, புரிந்துகொள்ளவோ மறுத்தார்கள். மக்களின் நலனைவிட தமது சொந்த வரவுசெலவு கணக்குப் பார்த்தே அரசியலை நடத்தினர். பெரும் நிலச் சொந்தக்காரராய் இருந்த இந்த யாழ்ப்பாணத் தலைமைகள் தம்முடையதும், தமது செல்வாக்குக்குரிய பெருவியாபாரிகளினதும், நிலவுடமையாளர்களினதும் காணிகளைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே நோக்கோடு நெற்காணிச் சட்டத்தை எதிர்த்தனர். எந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் மக்களின் நலனை அக்கறை கொள்ளாதவர் என்றும், துரோகி என்றும் இந்த செல்வநாயகம் வெளியேறினாரோ அந்த பொன்னம்பலத்துடன் ஒற்றுமையாக நின்று செல்வநாயகமும் அவருடைய தமிழரசுக்கட்சியும் இந்த நெற்காணிச் சட்டத்தை எதிர்த்தனர்.

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைப் பகுதியில் பெருமளவு நிலங்களுக்கு சொந்தக்காரராக மட்டுமல்ல மலையகத்திலும் பெரும் எஸ்டேட்டுகளின் சொந்ததக்காறராகவும் இருந்தார் இந்த செல்வநாயகம். அதேவேளை 1947 ஆம் ஆண்டு ய10ன் மாதம் முதலாம் திகதி இலங்கை தமிழ் காங்கிரஸில் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரன் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளராகவும் இந்த செல்வநாயகமே இருந்தார். இதுபோன்ற இவருடைய நிலச் சுவாந்தர் பாராம்பரியமே தமிழரசுக்கட்சியின் அரசியல் செயற்பாடுகளின் போக்கை நிர்ணயித்தது. இப்போது நெற்காணிச்சட்டம் தமது மடியில் கையை வைத்துவிடும் என்கின்ற ஒரே காரணத்துக்கா “தந்தை செல்வா” தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தார் என்பது புலப்படுகிறது அல்லவா? 1957 இல் நெற்காணிச்சட்டம் கொண்டுவரப்பட்ட போது எந்த சுயநலத்தில் இருந்து அதை எதிர்த்தாரோ அதே சுயநலமே அவர் தமிழ் காங்கிரசில் இருந்து வெளியேறியபோதும் இ;ருந்துள்ளது. மலையக மக்களுக்காக அவர்களது வாக்குகள் பறிக்கப்பட்டபோது அதை எதிர்த்து மலையக மக்களின் ஆதரவாளனாக தன்னைக் காட்டிக்கொண்டு புதிய கட்சியை ஆரம்பித்த செல்வநாயகம் அப்போதும் தனது தனிப்பட்ட நலன்களையே கணித்து செயற்பட்டிருக்கின்றார். மலையகத்தில் பெரிய பெரிய எஸ்டேட்டுக்களை தன்வசம் வைத்திருந்த தொண்டமான் பரம்பரை மலையக மக்களுக்கு அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு குரல் கொடுப்பதன் ஊடாக எப்படி தமது நிலச்சுவாந்தர் அந்தஸ்துகளுக்கு பக்கபலமாக அவர்களைப் பயன்படுத்த முனைகிறார்களோ அதே பாணியில் இந்த செல்வநாயகமும் செயற்பட்டதைக் காணலாம். இதன் காரணமாகவே 1949 இல் மலையக மக்களின் வாக்குகள் பறிக்கப்பட்டதை செல்வநாயகம் எதிர்த்தார். அதுதவிர இன்றுவரை தமிழரசுக்கட்சியின் வாரிசுகள் பீற்றிக் கொள்வதுபோல் “தந்தைசெல்வா” மலையக மக்களின் பிரச்சனைகளில் உண்மையான அனுதாபமோ, அக்கறையோ கொண்டிருக்கவில்லை. அப்படி அவர் மலையக மக்களின் வாக்குரிமை பாதிக்கப்பட்டபோது அவர் கொடுத்த எதிர் குரல் உண்மையானால் அதையிட்டு ஏன் தீவிர கொள்கைகளை வரித்துக்கொள்ளவில்லை. 1952 தேர்தலில் தான் நிலைகொண்டிருந்த யாழ்ப்பாணத்தவர்கள் எங்கோ இருந்த மலையக மக்களின் பிரச்சனையையிட்டு அக்கறை கொள்ளாமையினால் யாழ்ப்பாணத்தில் தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ள அடுத்துவந்த தேர்தலில் மலையக மக்களின் பிரச்சனைகளைக் கைவிட்டார். அதுமட்டுமல்ல 26-ய10லை - 1957 இல் நடைபெற்ற பண்டா - செல்வா பேச்சுவார்தையின்போது அதுவரை மலையகத் தமிழர்களின் குடியுரிமையை கோரிவந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பண்டாரநாயக்காவின் வற்புறுத்தலின் பேரில் அக்கோரிக்கைகளைக் கைவிட்டார். அதன் பின்னரே பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டது.

கீழ்வரும் விடயங்களே பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் குறிப்பிடப்பட்ட முக்கிய சரத்துகள் ஆகும்.

1) பிரதேச சபைகளைக் கொண்ட சுயாட்சிப் பிரதேசங்கள் வரையறுக்கப்படும்.

2)குடியேற்றத்திட்டங்கள் மீதான தமிழ் பகுதிகளின் இறைமை வரையறுக்கப்படும்.

3) பிராந்திய மொழி அந்தஸ்தும் அதற்கான உத்தரவாதங்களும் வரையறுக்கப்படும்.

இதிலிருந்து தமக்கான ஆட்சிப் பிரசேங்களை வடகிழக்கில் வரையறுத்துக் கொண்டு அங்கே தமது தலைமை ஸ்தானங்களைத் தக்கவைப்பதற்;காக (மலையக மக்களின் பிரச்சனைகளில் மையங்கொண்டு முகிழ்த்ததாக சொல்லிக்கொள்ளும்) தமிழரசுக் கட்சி மலையக மக்களை அம்போ எனக் கைவிட்டது. யாழ்ப்பாணத்தின் மேல்தட்டு விருப்புகளுக்காக மேற்படி ஒப்பந்தம் உத்தரவாதத்தை வழங்கியது. இதைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியினரின் தமிழ் பிரதேசம் எங்கும் நடந்த சத்தியாக்கிரகங்கள் முடிவுக்கு வந்தன.

மலையக தோட்டத் தொழிலாளர் பிரசாவுரிமைப் பறிப்பையும், வாக்குரிமைப் பறிப்பையும் நிறைவேற்றிய யு.என்.பி. அரசினது நடவடிக்கைகளை கேவலம் இரண்டு அமைச்சுப் பதவிகளுக்காக ஆதரித்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தினது காட்டிக்கொடுப்புக்கும் இந்த தமிழரசுக்கட்சியின் காட்டிக் கொடுப்புக்கும் இடையில் வேறுபாடு கிடையாது. அப்பட்டமான யாழ்ப்பாணத்து நலன்களுக்கு பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் மூலம் உத்தரவாதம் கிடைத்ததும் மலையக மக்களை நாடற்றவர்களாகவே தொடர்ந்து வைத்திருக்க அவர்களுக்கான தமது கோரிக்கைகளைக் கைவிட்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார் தந்தை செல்வநாயகம்.

இத்தகைய விட்டுக்கொடுப்புகளுடன் கைச்சாத்தான பண்டா-செல்வா ஒப்பந்தம்கூட யு.என்.பி இல் இருந்த சிங்கள இனவாதிகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக நேர்ந்தது. அவர்களுக்கு தலைமை வகித்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தெற்கில் இருந்து இனவெறியர்களுடன் சேர்ந்துகொண்டு இவ்வொப்பந்தத்தை கிழித்தெறியக் கோரி கண்டிக்கு பாதயாத்திரை மேற்கொண்டார். சிங்கள மக்களிடையே ஏற்பட்ட எதிர்;பின் காரணமாக பண்டாரநாயக்கா இவ்வொப்பந்தத்தினை கிழித்தெறிய வேண்டிய நிலைக்கு உள்ளானார். நாட்டு மக்களுக்குhக அவர் ஆற்றிய உரையில் இந்த ஒப்பந்தமானது கிழித்தெறியப் படுவதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பாதகமான விளைவுகளுக்கு தாம் பொறுப்பல்ல. என சுயநிலை விளக்கம் கூறினார்.

இதன் பின்னர் எந்த யு.என்.பி. கட்சி பண்டா - செல்வா ஒப்பந்தத்த கிழிக்க மூலகாரணமாயிற்றோ அதே யு.என்.பி யுடன் 1965 ஆண்டு ஒரு அமைச்சு பதவிக்காக தமிழரசுக்கட்சி கூட்டுச்சேர்ந்தது. இதே யு.என்.பி. இல் 1947 ஆம் ஆண்டில்; அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டு ஆட்சியல் பங்கெடுத்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் முடிவினை கடுமையாக ஆட்சேபித்து அவருடன் முரண்பட்டுத்தான் இந்த தமிழரசுக்கட்சிக்கு வழிகாட்டும் எஸ்..ஜே.வி.செல்வநாயகம் வெளியேறியிருந்தார் என்பதும் அதன் பின்னரே தமிழரசுக்கட்சி தோற்றம் பெற்றது என்பதும் குறிப்படத்தக்க விடயங்களாகும். ஆனால் அதே துரோகத் தனத்தை இந்த செல்வநாயகமும் 1965 ஆம் ஆண்டு அமைச்சுப் பதவிக்காக செய்ததினு}டாக யாழ்ப்பாண அடிப்படைவாதத்திற்கு பலியாவதில் இருந்து அவரும் தப்பவில்லையென்பது உறுதியானது. 1956 ஆம் ஆண்டின் பின்னர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் மக்களிடையே பலம் இழந்து வந்தது. அதேவேளை செல்வநாயகத்தின் தலைமையிலான தமிழரசுக்கட்சியானது படிப்படியாக வளர்ச்சி கண்டு மக்களிடையே செல்வாக்குப்பெற ஆரம்பித்தது. இதன்காரணமாக தமிழ் காங்கிரசுக்கு பேராதரவு கொடுத்துவந்த கொழும்பை அடிப்படையாகக் கொண்ட யாழ்ப்பாணத்து மொத்த வியாபாரிகளும் நடுத்தர வர்க்கமும் தமது ஆதரவினை தமிழரசுக் கட்சியின் பால் மாற்றிக்கொண்டனர். இவர்களது செல்வாக்கு தமிழரசுக்கட்சியில் அதிகரிக்கத்தொடங்கியது. இது போன்று பலவழிகளிலும் ஏகாதிபத்தியத்தினை காப்பாற்றும் யு.என்.பி. உடனான கூட்டு மட்டும் அல்ல ஏகாதிபத்தியத்தினை தக்கவைக்க தமிழரசுக்கட்சியினர் நேரடியாகவும் குரல்கொடுக்க ஆரம்பித்தனர். இவர்களது மொழி அபிமானமும், தேச அபிமானமும் சந்தி சிரிக்கும் வகையில் தொடர்ந்து வந்த காலங்களில் இவர்கள் நடந்துகொண்டார்கள். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் காலணித்துவ ஆட்சியாளர்களின் எச்சசொச்சங்களை தேசவுடமையாக்க முனைந்த பண்டாரநாயக்காவின் செயற்திட்டங்களை தமிழரசுக்கட்சியினர் பகிரங்கமாக எதிர்த்தனர். தமிழரசுக்கட்சியின் தலைவர் செல்வநாயகம் திருகோணமலைத் துறைமுகத்தினை விட்டு ஆங்கிலேயர் வெளியேறவேண்டும் எனும் கோரிக்கையை பகிரங்கமாக எதிர்த்தார். இதுபோன்ற காரணங்களினாலேயே தமிழ் அரசியல்வாதிகளையும் அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்திய தமிழர்களையும் ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகள் என்று சிங்கள மக்கள் கருத ஆரம்பித்தனர். அதுமட்டும் அன்றி சிங்கள மக்களிடையே இருந்த முற்போக்குச் சக்திகளும் கூட தமிழ் தலைமைகள் மீது சந்தேகம் கொள்ள மேற்படி செயற்பாடுகள் வலுச்சேர்த்தன எனலாம். மேலும்........

 
Updated 01-08-08   <<Feed Back >>   <<Tell Your Friend >>  
   
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.