எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும்….2
1965 ஆம் ஆண்டு தேர்தல் வரை தமிழரசுக்கட்சியின் “ஸ்ரண்ட்” அரசியல் வடகிழக்குப் பகுதிகளில் அதிகமாகவே களைகட்டியது. சத்தியாக்கிரகப் போராட்டம் (1961), தமிழரசு தபால் சேவைப் போராட்டம் (1961), 1964 இல் சிறிமா சாஸ்திரி ஒப்பந்த எதிர்ப்புப் போராட்டம் என்று பெரும் கலக சூழல் ஒன்றை வடகிழக்குப் பகுதிகளில் இவர்கள் ஏற்படுத்தினர். ஆனால் இவை அனைத்துமே இந்த போராட்டங்களில் மையங்கொண்டிருந்த அரசியல் கோரிக்கைகளைவிட தேர்தலை ஒட்டிய வாக்கு சேகரிப்பு நாடகங்களாகவே உண்மையில் இருந்தன. ஒவ்வொரு தேர்தலின் பின்னரும் இப்போராட்டங்கள் எல்லாம் மூட்டை கட்டப்பட்டு ஒரு மூலைக்குள் போடப்படும். அதைத்தொடர்ந்து அமைச்சு பதிவிகளுக்காகவும், தாம் சார்ந்த வர்க்கத்தினரின் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் யு.என்.பி. அரசுடன் கொஞ்சுக் குலாவி வந்ததன் மூலம் இதனை அறிந்துகொள்ள முடியும்.
1965 இல் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியை வைத்து யு.என்.பி. இன் சார்பில் அரசமைக்கவிருந்த டட்லி சேனநாயக்காவுடன் தமது சலுகைகளை உறுதித் படுத்திக்கொள்வதற்காக இரவிரவாக ரகசியப் பேச்சுக்களில் தமிழ் தலைவர்கள் ஈடுபட்டனர். இதன்பலனாக கொழும்பில் செனட்டராக வாழ்ந்து வந்த திருச்செல்வம் என்பவரை அமைச்சராக்குவதற்காக டட்லி சேனநாயக்காவிடம் இருந்து உறுதி வாங்கிக் கொண்டனர். அதற்கு கைமாறாக யு.என்.பி. அரசு அமைவதற்கு தமிழரசுக் கட்சி எம.பிக்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு உறுதி கொடுத்தனர்.
கேவலம் தமது ஆதரவு சக்திகாளாய் இருந்த கொழும்பு கனவான் ஒருவரை அமைச்சராக்குவதற்காக தமிழ் மக்களை உணர்ச்சி பீறிட வைத்து தெருவில் இறக்கி சத்தியாக்கிரகம் செய்தவர்கள் அனைத்தையும் கைவிட்டனர். தமிழரசும் அதனது தபால் முத்திரைகளும் குப்பைக் கூடைக்குள் போனது. தமக்குத் தேவையானபோது வடகிழக்கில் வந்து மக்களைத் தெருவில் இறக்குவதும் அந்த ஆதரவுத் தளத்தினை காட்டி தமக்கான அரசியல் பேதங்களை சிங்கள அரசுகளுடன் விலைபேசிக்கொள்வதும் அதன் பின்னர் தெருவில் இறங்கிய மக்களை அம்போவென்று மறந்து விடுவதும் தமிழரசுக் கட்சியினரின் வழக்கமாய்ப்போனது.
1965 இன் பின்னர் தமது கண்துடைப்புக்காக டட்லி - செல்வா எனும் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டனர். ஆனால் இந்த ஒப்பந்தமானது பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் இருந்து எவ்விதத்திலும் மேம்பட்டதொன்றல்ல. அதன் பின்னர் 1965 - 1970 வரை யு.என்.பி., தமிழரசுக்கட்சி, கூட்டணியாக அரசு அமைத்து தேனிலவு கழித்தனர். இக்காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் சார்பில் எந்தவொரு போராட்டத்திலும் தமிழரசுக்கட்சியினர் தலைகாட்டவில்லை. ஆகவே அவர்களுக்கு அந்தக் காலம் கொழும்பில் தேனிலவாகத்தான் கழிந்திருக்கும். ஆனால் டட்லி - செல்வா ஒப்பந்தம் செய்துகொண்டோம் என்று வரலாற்றை தமிழரசுக்கட்சி ஏமாற்றினாலும் அந்த ஒப்பந்தமானது கிடப்பிலே போடப்பட்டிருந்தது என்பதுதான் உண்மை.
யாராலும் கிழித்தெறியப்படாத அந்த ஒப்பந்தம் எப்போதுமே அமூல்படுத்தப்படாத காரணத்தினால் அது கிடப்பில்தான் போடப்பட்டிருக்க வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட 5 வருட காலத்திலும் அந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்தக் கோரி தமிழரசுக்கட்சியினரிடமிருந்து ஒரு குரல்கூட எழுப்பப்படவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 1957 இல் பண்டா - செல்வா ஒப்பந்தத்தை கிழிக்கக் காரணமான யு.என்.பி. உடன் இணைந்து அமைச்சுப் பதவிக்காக நடாத்திய அந்தக் கூட்டாட்சியை உண்மையிலேயே வடகிழக்கு மக்கள் வெறுத்தார்கள். அரசியல் தெளிவின்றி இனவுணர்ச்சி அலைகளிலேயே உருவாக்கப்பட்டு தக்கவைக்கப்பட்டிருந்த தமிழரசுக்கட்சியின் வாக்கு வங்கிகள் மேற்படி 5 வருட காலத்திலும் (இப்போராட்டங்கள் சோபை இழந்து போனதால்) தமிழரசுக் கட்சியை விட்டு கைமாறத் தொடங்கியது.
இதே காலப்பகுதியிலேயே யாழ்ப்பாணத்தின் கோலோட்சிய சாதிப்பிரச்சனைகளுக்கு தீர்வு கோரிய போராட்டங்களை இடதுசாரி அணியைச் சேர்ந்த முற்போக்காளர்கள் முன்னெடுத்து தாழ்த்தப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டனர். இதன்காரணமாக பெருமளவிலான தாழ்த்தப்பட்ட மக்கள் இடதுசாரி அரசியல்வாதிகளை ஆதரிக்கத் தொடங்கினர். இதுபோன்ற இன்னபிற காரணங்களினாலும் 1970 ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி நடாத்தப்பட்ட தேர்தலில் படுதோல்வியை தமிழரசுக்கட்சி சந்திக்க நேர்ந்தது. தமிழரசுக் கட்சியின் இரண்டாம் தலைமைகளான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றோர் முறையே வட்டுக்கோட்டைத் தொகுதியிலும், உடுப்பிட்டித் தொகுதியிலும் படுதோல்வி அடைந்தனர்.
இத்தேர்தல் தோல்வியின் பின்னர்தான் தமிழ் உணர்ச்சிகளை கிண்டிவிடுகின்ற பிரச்சாரங்களை தீவிரவாதத் தன்மைக்குள் விசமத்தனமாக இறக்கிவிடுகின்ற அளவிற்கு தமிழ் தலைமைகள் களமிறங்க ஆரம்பித்தனர். அகிம்சைப் போராட்டங்களில் களைத்துப்போயிருந்த தமிழரசுக் கட்சியினர் இனரீதியான வன்முறைகளைத் து}ண்டிவிடுவதன் ஊடாக தமிழ் மக்களிடையே ஒரு உணர்ச்சிரீதியான அணிதிரட்டலை ஏற்படுத்தி அதனைத் தனது வாக்கு வங்கியாக மாற்றிவிடும் முயற்சியில் ஈடுபட்டனர். மீண்டும் தாம் இழந்திருந்த தமிழ் மக்களுக்கான தலைமைப் பொறுப்புகளை பெற்றுக்கொள்வதற்காக இத்தகைய வழியொன்றே அவர்களுக்கு கைகொடுக்கும் என்பதில் அவர்கள் உறுதியாகச் செயற்பட்டனர். அத்தோடு சேர்த்து தமிழ் இனத்தின் பெயரால் அரசியல் நடத்திவந்த போதிலும் தனித்தனியே இயங்கிவந்த எல்லாக் கட்சிகளும் ஒன்றிணைவதே தமிழ் மக்களிடையே உருவாகிவந்த மாற்று இடதுசாரித் தலைமைகளைத் தோற்கடிக்க சிறந்த வழியென அவர்கள் கண்டுபிடித்தனர். அதற்கு அப்பால் உண்மையான மக்களின் பிரச்சனைகளில் அக்கறை கொண்டு அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தமிழரசுக்கட்சியினர் விரும்பியிருக்கவில்லை.
அதுவரைகாலமும் இவர்கள் சொல்லிவந்த கிழக்குமாகாண விவசாயிகளது குடியேற்றப் பிரச்சனையும் கிடப்பிலே போட்டனர். இதற்கு அப்பால் கிழக்கில் வாழ்ந்த லட்சக்கணக்கான விவசாயிகளின் நீர்ப்பாசனப் பிரச்சனைகளையோ, நீண்ட கடல்பரப்பினைக் கொண்ட கிழக்கு மாகாண கடல் தொழிலாளிகளின் மீன்பிடித்துறைசார்ந்த பிரச்சனைகளையோ பின்தங்கிய நிலையில் இருந்த கிழக்கு மகாண தமிழ் முஸ்லிம் மக்களின் கல்விநிலை குறித்த அக்கறைகளையோ இவர்கள் தமது அரசியல் கட்சியின் கொள்கைகளுக்கான அடிப்படை விசயங்களாகக் கொள்ளவில்லை. மக்களின் தேவைகளை முன்னிறுத்தி அதற்காகப் போராடுவதினு}டாக தலைமை வகிக்கும் வாய்ப்பினை பெற்றுக்கொள்வதைவிட ஹர்த்தால், வன்முறை, கிளர்ச்சி போன்ற குறுக்கு வழியினு}டு தலைவர்கள் ஆவதிலேயே தமிழரசுக்கட்சியினர் முனைப்புக் காட்டினர்.
1965 - 1970 ஆம் ஆண்டுவரை எவ்வித சலனமும் இன்றி அமைதியாக யு.என்.பி. ஆட்சியில் பங்கெடுத்துவந்த தமிழரசுக்கட்சியினர் 1970 ஆண்டில் கிடைத்த தோல்வியைத் தொடர்ந்தே இந்த வன்முறை வழிகளைத் திட்டமிட்ட ரீதியில் அதிகரித்து வந்திருப்பதனைக் காணலாம்.
1970 - 1977 வரையான காலகட்டத்தில் எண்ணில் அடங்காத கிளர்ச்சி நடவடிக்கைகளில் இவர்கள் இறங்கினர். தமிழ் இளைஞர்களிடையே வன்முறையைத் து}ண்டிவிட்டு தம்மையும் மக்களையும் அரசுக்கு எதிரான புரட்சியாளர்களாகக் காட்ட முற்பட்டனர். ஆனால் அவ்வேளை இவையனைத்து செயற்பாடுகளும் தேர்தலை எதிர்கொள்ளும் வாக்கு சேகரிப்புக்காகவே முடுக்கி விடப்பட்டதனை கிழக்கிலங்கை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. 1965 - 1970 ஆண்டுவரை தமிழரசுக்கட்சி காத்துவந்த அமைதியானது 1970 தோல்வியின் பின்னர் எப்படித் திடீரென மாற்றம் எடுத்து வன்முறைச்; சூழலை படிப்படியாக அதிகரித்து வந்தனர் என்பதினை கீழ்வரும் சில குறிப்புகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
ழூ 1970 -07-13 அன்று தேர்தல் முடிந்த கையோடு பிரதியமைச்சர் சந்திரசிறியின் காருக்குள் உரும்பிராய் பொன்.சிவகுமாரன் மூலம் குண்டு வைத்து தமிழ் தலைவர்கள் வன்முறையை ஆரம்பித்து வைத்தனர். இந்த சிவகுமாரனால் நடாத்தப்பட்ட குண்டுவெடிப்புத்தான் இனப்போராட்டம் எனும் பெயரில் வடகிழக்கில் தொடங்கி வைக்கப்பட்ட முதலாவது வன்முறையாகும்.
ழூ 1971 இல் யாழ்ப்பாண மேயராக இருந்த (சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பில்) அல்பேட் துரையப்பாவின் காருக்குள் அதே சிவகுமாரன் குண்டு வைத்தார்.
ழூ 1972 திருகோணமலையில் நடத்தப்பட்ட மகாநாட்டில் தமிழர் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது.
ழூ 1972 இல் நிறைவேற்றப்பட்ட குடியரசு யாப்பை எதிர்த்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமது பதவிதுறப்பு நாடகத்தை நிறைவேற்றினார்.
ழூ 1973 இல் தமிழ் இளைஞர் பேரவை ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பேரவையில் பெயரில் கூட்டணியினர் இலங்கை குடியரசு தின முதலாவது ஆண்டை பகிஸ்கரிக்கக் கோரி வடகிழக்கு எங்கும் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
ழூ 1973 இல் வடமாகாணத்துக்கு வந்த அமைச்சர்களை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டும் போராட்டங்களில் கூட்டணியினர் ஈடுபட்டனர்.
ழூ 1974 இல் தமிழாராட்சி மாநாட்டில் இனவெறி பித்து தலைக்கேறிய சிவகுமாரன் தலைமையிலான இளைஞர் குழாமினால் திட்டமிடப்பட்டபடியே 9உயிர்களை மின்சாரத்துக்கு பலிகொடுத்தனர்.
ழூ 1975 இல் பிரபாகரன் யாழ்மேயர் அல்பிரட் துரையப்பாவை சுட்டுக்கொண்றார்.
ழூ 1976 இல் தமிழர்விடுதலைக் கூட்டணி நிறைவேற்றிய வட்டுக்கோட்டைத் தீர்மானம் எனும் பிரிவினைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ழூ 1977 இல் கருணாநிதி எனும் பொலிசார் மாவட்டபுரத்தில் வைத்து தமிழ் தீவிரவாத இளைஞர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ழூ 1977 ய10லை 21 இல் பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டது.
மேற்படி எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஊடாக 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்வரை அரச பிரதிநிதிகளையும் அரசபடைகளையும் எதிர்ப்பது தான் தமிழ்மக்களின் கடமை எனும் புதிய மரபொன்றினை தமிழர் விடுதலைக் கூட்டணி தோற்றுவித்தது. அதுமட்டுமன்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த தமிழ் பிரதிநிதிகளை தமிழ்மக்களின் துரோகி என பட்டம் சூட்டிவிடுவது என்பதினையும் வழக்கமாகக் கொண்டனர். இதனு}டாக தமது அரசியல் எதிரிகளை எதிர்கொண்டு வெல்லுவது என்பதைவிட அழித்து வெல்லும் குறுக்கு வழியை நோக்கி தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமது கவனத்தைத் திருப்பினர். அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி காட்டுதல், குடியரசுத் தினத்தை பகிஸ்கரித்தல் என்பதெல்லாம் தனி ஈழம் ஒன்றை அமைப்பதற்கான முன்னோடி நிகழ்வுகளாக மக்கள் உணரவைக்கப்பட்டனர்.
ஆனால் தமிழரசுக்கட்சியினர் யு.என்.பி. ஆட்சியில் இருந்த 1965 - 1970 காலப்பகுதியில் தாமும் அந்த அரசில் பங்கெடுத்திருந்தனர். இந்தவேளைகளில் இத்தகைய அரசஎதிர்ப்பு நடவடிக்கைகள் ஒன்றில் கூட ஈடுபடாதிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினம் அனுஸ்டிக்கப்பட்டது ஏன் அதை பகிஸ்கரிக்கக் கோரவில்லை? தாம் அமைச்சர்களாய் இருந்த 5ஆண்டுகளிலும் சிங்களஅரச பொலிசாரின் பாதுகாப்புடன் தானே வலம் வந்தனர்? அந்த 5 ஆண்டுகளிலும் தாங்கள் அமைச்சராக இருக்கலாம் என்றால் சி.சு.கட்சி ஆட்சியின் போது ஏன் அல்பிறட் துரையப்பா மேயராக இருக்க முடியாது? இப்போது மட்டும் ஏன் பிரதி அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி காட்டப்பட வேண்டும் என்கின்ற கேள்விகள் எல்லாம் அப்போது கேட்கப்படவில்லை.
தமிழரசுக் கட்சியினதும் செல்வநாயகம் அமிர்தலிங்கம் போன்றோரதும் மக்களை ஏமாற்றுகின்ற இந்த அரசியல் நாடகங்கள் அவ்வேளை அம்பலப்படவில்லை. இத்தகைய நாடகங்கள் அனைத்தும் தமது தேர்தல் தோல்வியை சகித்துக்கொள்ள முடியாத மனநிலையில் பழிவாங்கும் உணர்வுடனும் பதவி மோகத்திலும் பக்குவம் இழந்து வெறிபிடித்து அலைந்த தமிழர் தலைவர்கள் என சொல்லப்பட்ட சுயநலவாதக் கும்பல்களின் அடாவடித்தனங்களாகவே உண்மையில் இருந்தன.
ஆனால் இவற்றின் ஊடாக பரப்பட்ட தமிழ் உணர்வில் கிழக்கிலங்கை மக்களும் ஆட்கொள்ளப்படுவது அவ்வேளையில் தவிர்க்க முடியாமல் போனது. தேவையானபோது அமைச்சு பதவிகளைப் பெற்றுக் கொண்டதற்கு “மக்களின் அபிவிருத்தி குறித்த அக்கறை” என சாக்குப் போக்குச் சொல்லும் திறமை இந்த அப்புக்காத்து அரசியல்வாதிகளுக்கு இருந்தது.
அப்படியானால் ஏன் ஒரு சந்தர்ப்பத்தில் கூட கிழக்கிலங்கையில் தமிழரசுக்கட்சிக்காக உழைத்த தலைவர்களுக்கு அமைச்சுப்பதவி பெறும் அந்த வாய்ப்புகள் வழங்கப்படவில்லை? 1952ஆம் ஆண்டுத் தேர்தலில் வடமாகாணத்தில் ஒருவரைத் தவிர பெரும்தலைவர்கள் எல்லோரும் படுதோல்வி அடைந்த நிலையில் திருகோணமலையில் தமிழரசுக்கட்சிக்கு பெரு வெற்றியீட்டிக் கொடுத்த இராஜவரோதயம் அவர்களுக்கு என் அந்த வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை? செனட்சபை உறுப்பினர்களான மட்டக்களப்பு கல்விமான் கனகரெட்னம் அவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை? கொழும்புச் சீமான் திருச்செல்வத்திற்கு பெற்றுக் கொடுக்கப்ட்ட உள்ளுராட்சி பதவி 1956ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களின் தனிப்பெரும் தலைவனாக தொடர்ந்து வெற்றியீட்டி வந்த சொல்லின் செல்வர் இராஜதுரைக்கு ஏன் வழங்கப்பட்டிருக்கக் கூடாது? தமிழரசுக்கட்சியின் தலைமை கதிரையைக்கூட அலங்கரித்த பெருந்தலைவரும் தனித்தமிழ் தொகுதியான பட்டிருப்பின் பிரதிநிதியுமான மு.இராசமாணிக்கம் அவர்கள் அமைச்சுப் பதவிக்கு தகுதி அற்றவரா? என்கின்ற கேள்விகள் அன்று இல்லாவிடினும் இன்று கிழக்கிலங்கை மக்களிடையே கிளறப்படத் தொடங்கியுள்ளன.
தமிழ் தமிழ் என்று கிழக்கிலங்கை மக்களை ஏமாற்றிக்கொண்டு அவர்களின் ஆதரவினால் வருகின்ற எல்லாவித அரசியல் இலாபங்களையும் வடக்குக்குள் மட்டுமே சுருட்டிக்கொள்ளும் தமிழரசுக்கட்சியினரின் கபடத்தனங்களை இன்று கிழக்கிலங்கை மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளார்கள்.
அடுத்துவரும் தேர்தலை வெல்ல எந்தத் தலைமையை பிழை என்றும் துரோகம் என்றும் சொல்லி செல்வநாயகம் வெளியேறி புதியகட்சியை ஆரம்பித்தாரோ அதே தமிழ் காங்கிரசுடன் சந்தர்ப்பவாத கூட்டுச் சேர்ந்தனர். 1972இல் திருமலையில் கூடிய தமிழரசுக்கட்சி தமிழ் காங்கிரஸ் இலங்கை தோட்டத்தொழிலாளர் காங்கிரஸ் போன்றவை ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாக மலர்ந்தது. 1970 தேர்தலில் படுதோல்வி கண்ட தமிழரசுக்கட்சியும் ஒருநபர் கட்சியாக குறுகிப்போய் இருந்த தமிழ் காங்கிரசும் தமது எதிர்கால தேர்தல் நலனை ஒட்டியே கைகோர்த்துக் கொண்டனர். ஆனால் இது மறுதலையாகவே புரிந்துகொள்ளப்பட்டது. தமிழ் இளைஞர்களிடையே பெரும் உற்சாகத்தை இது கொடுத்தது. எல்லா அப்புக்காத்துமாரும் ஒன்றாக இருக்கையில் நாம் எதற்கு பயப்பிட வேண்டும் எனும் தோரணையில் தமிழ் இளைஞர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் துணிந்து இறங்கினர். வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன. இதன் காரணமாக அரச இயந்திரத்தின் கெடுபிடிகளும் அதிகரித்தது இயல்பே.
1971 இல் கொண்டுவரப்பட்ட கல்விதரப்படுத்தலையும் தமிழ் தலைமைகள் தமது பிரச்சாரத்துக்கு நல்ல ஆயுதமாக பயன்படுத்தின. ஆரம்பத்தில் ஒரு தேசிய இயக்கமாக உருவான சிங்கள மகாசபாவின் வழிவந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது பரந்துபட்ட இலங்கை மக்களின் நலனில் கடும் அக்கறை செலுத்தி வந்தது. சுயபாசைகளைக் கொண்டுவருவதில் அக்கட்சியினர் காட்டிய அக்கறையும் அதன்பாற்பட்டதே. அதேபோன்றே யாழ்ப்பாணத்துக்குள் மட்டும் தக்கவைத்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக வாய்ப்புகளை இட்டு அவ்வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்த சிங்கள மக்கள் விசனப்பட்டபோது அவர்களுக்கான சில திட்டங்களை அரசு முன்மொழிந்தது. 22 மாவட்டங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் அவ்வேளையில் 1ஃ4 மடங்கு பல்கலைக்கழக வாய்ப்புகளை தனக்குள் சுருட்டிக்கொண்டிருந்தது. அதுவே சிலவேளைகளில் இன்னும் அதிகமாகவும் பெற்றுவந்தனர்.
அமெரிக்க மிசனறிகளினதும் பிரித்தானிய காலனி ஆதிக்கவாதிகளினதும் தரகுகளாகி அவர்களை வரவேற்று இலங்கை மக்களை காட்டிக் கொடுத்து ஒட்டுக்குழுக்களாக இருந்து பெற்றுக் கொண்ட கல்விச்சாலைகளே யாழ்ப்பாணம் இப்படியான அபரித பல்கலைகழக வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள அத்திவாரம் இட்டது. ஆனால் இலங்கையில் கடைசிவரை அன்னியருக்கெதிராகப் போராடி தேசத்தின் மானத்தைக் காத்தவர்கள் கண்டிராட்சிய மக்கள் என்ற வகையில் கிழக்கிலங்கை மக்களும் இந்தப் பெருமைக்குரியவர்கள். இலங்கையின் கடைசி இராட்சியமாகவே கண்டி ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. காலனித்துவத்தின் கல்விமுறை கிழக்கிலங்கை மக்களுக்கு சோறுபோடும் என்று அன்று அவர்கள் காத்திருக்கவில்லை. ஆனால் வக்கற்ற யாழ்ப்பாணம் காலனித்துவ கல்வியை வரவேற்று பெற்றுக் கொண்டது. அதையே தனது பொருளாதாரத்தின் பெரும் முதலீடாகவும் மாற்றிக் கொண்டது. இப்படி பெற்றுக் கொண்ட வாய்ப்பு வசதிகளே இன்று பல்கலைக்கழக அனுமதிகளில் அங்கீகரிக்கப்படுவதற்கான அளவுகோலான “திறமையை” யாழ்ப்பாணத்துக்கு வழங்கியது.
எனவே 1970 இல் பதவிக்கு வந்த இடதுசாரிகளை கூட்டாகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசு இந்த யாழ்ப்பாணத்துக்கான கல்விவாய்ப்புகளை மட்டுப்படுத்த எடுத்த முயற்சியில் கொண்டுவரப்பட்டதே கல்விதரப்படுத்தல் சட்டமாகும். யாழ்ப்பாணத்தை தமிழர்களாகப் பார்த்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசு இனஅடிப்படையில் ஆரம்பத்தில் தரப்படுத்தலைக் கொண்டு வந்தது. பின்பு தமிழ் பகுதிகள் அன்றி இந்த பல்கலைகழக வாய்ப்புகளை யாழ் மாவட்டம் மட்டுமே அபரிதமாக பெற்று வருவதை அவதானித்தனர். இதேபோன்று சிங்களப் பகுதிகளில் கொழும்பு போன்ற மாவட்டங்களும் இப்படி அதிகவாய்ப்புகளை பெற்று வருவதையும் புரிந்து கொண்டு இனத்தின் அடிப்படையில் இருந்த தரப்படுத்தலுக்கான அளவுகோலை மாவட்ட அடிப்படையில் மாற்றியது. இதனு}டாக யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்த மத்தியதர வர்க்கம் அதுவரை காலமும் பல்கலைக்கழக வாய்ப்புகளில் அபகரித்து வந்த இடங்கள் மட்டுப்படுத்தப்பட்டது. இந்த மட்டுப்படுத்தபட்ட வாய்ப்புகள் ஊடாக பெறப்பட்ட இடங்கள் கல்விபெறும் வசதிகளில் பின்தங்கியிருந்த தென் மாகாணம், கிழக்கு மாகாணம் போன்ற பகுதிகளுக்கு வழங்கப்பட்டது. வடமாகாணத்திலும் கூட யாழ்ப்பாணத்துக்கு வெளியே இருந்த முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற மாவட்ட ஏழை மாணவர்கள் ஓரளவேயாயினும் பட்டதாரிகள் ஆகும் வாய்ப்பை இந்த தரப்படுத்தல் சட்டமே வழங்கியது. இந்த தரப்படுத்தல் இலங்கையில் நிறைவேற்றப்பட்டதின் பின்னர் கொழும்பு, கண்டி மாவட்டங்களில் வாழ்ந்துவந்த மத்தியதரவர்க்க சிங்கள மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். அதேபோன்று யாழ்ப்;பாணத்தின் மத்தியதரவர்க்க மாணவர்களும் பாதிக்கப்பட்டனர் என்பதுதான் உண்மை.
இதே வேளை யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஆசிரியர்களாக கடமை புரிந்துவந்த யாழ் மத்தியதர வர்க்க உத்தியோகத்தர்கள் தமது பரம்பரையினரை மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு போன்ற பகுதிககளில் உள்ள பாடசாலைகளில் பதியச் செய்து அங்கே பரீட்சை எடுக்க வைத்து தாம் இழந்து போன வாய்ப்புகளை மீண்டும் பெற்றுக் கொண்டனர். ஏழ்மையான மாவட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய ஒதுக்கீடுகளின் ஊடாக கிடைக்கப் பெற்ற பல்கலைக்கழக இடங்கள் யாழ்ப்பாண ஆசிரியர்களினால் களவாடப்பட்ட உண்மைகள் வெட்கத்துக்குரியன.
எது எப்படி இருந்த போதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மோசமான முறையில் இந்த தரப்படுத்தலைப் பற்றிய பிரச்சாரங்களை துரிதப்படுத்தினர். யாழ்ப்பாணம் தான் அடைந்த பாதிப்புகளை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என கூக்குரலிட்டது. அதேவேளை இந்தத் தரப்படுத்தல் காலம் வரை யாழ்பாணம் தவிர்ந்த மற்றைய தமிழ் மாவட்டங்களில் ஆரம்பக்கல்வி வசதியற்றும், பல்கலைக்கழக வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள போதிய தராதரங்களைப் பெறமுடியாத நிலையிலும் ஏழ்மை காரணமாக பின்தங்கியிருந்த மாணவர்களை இட்டு ஒருபோதும் தமிழ் அரசியல்வாதிகள் கவலைப்பட்டது இல்லை. அவர்களுக்கான கல்விபெறும் வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் என இவர்கள் ஒருபோதும் கோரியதில்லை. ஏனைய தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை இன்றி கவனம் கொள்ள மறுத்த யாழ்ப்பாணம் தனக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து மட்டுமே அழுதுபுலம்பியது. தனது நலன்களை காக்க கிழக்கு மாவட்டங்களின் மாணவர்களுக்குரிய உயர்கல்வி வாய்ப்புகளை தொடர்ந்தும் யாழ்ப்பாணத்துக்கு தாரைவார்க்கக் கோரியதாகவே இந்தத் தரப்படுத்தலுக்கான கூக்குரல் இருந்தது. இதையே தமிழீழம் கேட்பதற்கான பிரதான காரணம் என தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பிரச்சாரப்படுத்தினர் என்னும் போது இவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவா அல்லது யாழ்ப்பாணத்தின் பிரதிநிதிகளாகவா இருந்தனர் என்பதை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
யாழ்ப்பாண மத்தியதரவர்க்கங்கள் தொடாந்து கிழக்குமாகாண மாணவர்களின் பல்கலைக்கழக வாய்ப்புகளை தன்னிடம் மட்டுமே தக்கவைப்பதற்காக அர்தமற்ற கோரிக்கையை முன்வைத்து தரப்படுத்தலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த சட்டத்தினாலேயே தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால் விளக்கமற்றுக் கிடந்த கிழக்கு மாகாண மக்களும், தமிழர்விடுதலைக் கூட்டணி பித்தர்களும் அன்று தமிழீழத்தை ஆதரித்தனர். தமது பரம்பரையினர் முதன்முதலாக பட்டம் பெறும் வாய்ப்புகளை வழங்கிய சிங்கள அரசுக்கு எதிராக யாழ்ப்பாணத்துடன் இணைந்து போராட்டக்களத்தில் குதித்தனர். அன்றைய கிழக்கு மாகாணத்தின் அறியாமையை என்னவென்று சொல்வது. அது ஒரு அற்புதமான மடத்தனம் (Non -sense but fantastic). ஆனால் இன்றைய கிழக்கின் நிலை வேறு. மேலும்....... |