Untitled Document
Untitled Document
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமும் எதிர்பார்க்கும் இலக்கும்......வவுனியா நகரசபையில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடுவோரின் விருப்பு இலக்கங்கள்- (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு) அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும் ...தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேசங்களின் தலையீடு ஏன்?..............சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும...சுதந்திரபுரத்தில் அப்பாவி மக்களை இலக்குவைத்த புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு சிறீ ரெலோ வன்மையாகக் கண்டித்துள்ளது...

Untitled Document

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 
13வது திருத்தத்தின்படி மாகாண ஆட்சிமுறை
தொடர் - 4
 

முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள்;;
பத்திரிகையில் வெளிவந்த எனது தொடர்pல், 13ஆவது திருத்தப்படி அமைந்த மாகாண சபைகள் என்பது இலங்கையில் சட்டங்களை ஆக்கும் அதிகாரம் கொண்ட அமைப்புக்களின்; இரண்டாவது படியாக அமைந்திருப்பது பற்றிக் குறிப்பிட்டேன். அதன் தொடர்ச்சியாக மேலும் சில விடயங்கள்:-

1)மாகாண அரசும் அரசாங்கமும் (Provincial State and Government)
2)மாகாண ஆளுநர் (Provincial Governor)
3)முதலமைச்சர் உட்பட மாகாண அமைச்சர்கள் (Provincial Ministers including the Chief Minister)

மாகாண அரசும் அரசாங்கமும்
அரசர்களின் ஆட்சிக்காலத்தில் பேரரசுகள் மற்றும் சிற்றரசுகள் இருந்ததை அறிவோம். ஒவ்வொரு பேரரசும் அதன் அதிகாரத்துக்குள் பல சிற்றரசுகளை உள்ளடக்கியனவாக இருந்தன. அதன் நவீன ஜனநாயகரீதியாக வளர்ச்சியடைந்த சிறந்த அரசமைப்பு முறையையே சமஷ்டி அமைப்பு அல்லது மாநில சுயாட்சி அமைப்பு முறையென அழைக்கிறோம். இங்கு மத்திய அரசும் அதன் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக மாநில (மாகாண) அரசுகளும் அமைகின்றன. இந்தக்கட்டுப்பாடுகள் வரையறைகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டதாக அமைந்திருக்கின்றன.
அரசின் அலகுகள்
ஒவ்வொரு அரசும் பிரதானமாக மூன்று வகையாக இயங்கும் அமைப்புக்களைக் கொண்டிருக்கும். அவை:
1. சட்டவாக்க அமைப்பு
2. நிறைவேற்று அமைப்பு (அச்சட்டவாக்க அமைப்பினால் ஆக்கப்பட்ட சட்டங்கள் திட்டங்களை நடைமுறையில் நிறைவேற்றுவதற்கான அமைப்பு)
3. நீதி பரிபாலன அமைப்பு
அரசர்கள் காலத்தில் இந்த மூன்று அமைப்புக்களினதும் அதிகாரத் தலைமை அரசர்களிடமே இருந்தது. அரசர்களே சட்டங்களை ஆக்கினர். அவர்களே பூரண நிறைவேற்று அதிகாரம் படைத்தவர்களாக இருந்தனர். தமது நாட்டின் எல்லைக்குள் ஆக்குதல், காத்தல்;, அழித்தல் ஆகியவற்றின் தலைவர்களாகவும், அவர்களே நீPதிதேவர்களாகவும் இருந்தனர். அரசர்கள் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகக் கொள்ளப்பட்டார்கள். அவர்கள் குற்றமெதுவம் செய்யமாட்டார்கள் எனக் கருதப்பட்டார்கள். அவர்களே தத்தம் நாட்டின் இறையாண்மை உடையவர்களாகக் கொள்ளப்பட்டார்கள். மொத்தத்தில் சுருக்கமாகக் கூறின் அரசர்களே அவரவரது நாட்டின் அரசியல் இறைவன்களாக இருந்தனர்.
வரலாற்றில் ஏற்பட்ட ஜனநாயகப் புரட்சிகளும் அவற்றின் தொடர்ச்சியான வளர்ச்சிகளும் நாடுகளின் அரசியல் அமைப்பில் பெரும் மாற்றங்களை உண்டாக்கின. இறுதி இறையாண்மை நாட்டின் பொதுமக்களுக்கே உரித்து என ஆகியது. நாட்டை யார் ஆளுவது என்பதை மக்களே தீர்மானிப்பவர்களானார்கள். இந்தவகையிலேயே மக்களாட்சி அமைப்பில் தேர்தல்கள் பிரதானமான இடத்தை வகிக்கி;ன்றன.
மக்களின் பிரதிநிதிகளே சட்டங்களை ஆக்குபவர்களானார்கள். சட்டங்களை ஆக்கும் மன்றங்களே நாடாளுமன்றம் என்றோ, பாராளுமன்றம் என்றோ, மாகாண சபைகள்; என்றோ, மாநில சட்டமன்றங்கள் என்றோ அல்லது பிராந்திய சட்ட சபைகள் என்றோ அழைக்கப்படுகின்றன.
இந்த மன்றங்களால் ஆக்கப்படும் சட்டங்கள், வகுக்கப்படும் ஒழுங்குகள் மற்றும் கட்டுப்பாடுகள், உருவாக்கப்படும் சமூக பொருளாதாரத் திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கென நிரந்தரமான நிர்;வாக அமைப்புக்கள் உருவாயின - நாட்டின் பாதுகாப்பு நிர்;வாகம், மத்திய அரச மற்றும் மாநில அரச நிர்வாகங்கள், பொலிஸ் நிர்வாகம், நிதி நிர்வாகம், வெளிநாட்டு உறவு நிர்வாகம், நகரநிர்வாகங்கள், கிராம நிர்வாகங்கள், நீதிமன்ற ; நிர்வாகம், வீதிகள் மற்றும் போக்குவரத்து நிர்;வாகம், விவசாய நிர்வாகம், தொழில்கள் நிர்வாகம், கல்வி நிர்வாகம், சுகாதார நிர்வாகம் எனப்பல அரச நிர்வாக அமைப்புக்கள் உருவாயின. இந்த அமைப்புக்களும் சட்டங்களின் மூலமே ஆக்கப்படுகின்றன. அவை செயற்படுவதற்கான நெறிமுறைகளும் சட்டவாக்க மன்றங்களாலேயே வகுக்கப்படுகின்றன. மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே அந்த நிறைவேற்று நிர்;வாக அமைப்புக்களின் உயர் அதிகாரிகள் ஆகின்றனர். அவர்களையே அமைச்சர்கள் என்கிறோம். அதனையே அரசாங்கம் என அழைக்கிறோம். மாகாண மட்டத்தில் இதுவே மாகாண அரசாங்கம் ஆக அதிகாரம் செலுத்துகின்றது.
சமஷ்டி அமைப்புச் சட்டங்களால் பேரரசுகள் மத்திய அரசுகளாகின. அதற்குட்பட்ட சிற்றரசுகளென மாகாண (மாநில) ஆட்சிகளைக் கொள்ளலாம்.
இங்கு நீதிபதிகள், நீதி பரிபாலனம் தொடர்பான விடயங்களைத் தவிர்த்துக் கொள்கிறேன்.
மேற்குறிப்பிட்ட வகையில் மாகாண அரசு என்பது,

1)மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண (சட்ட) சபை,
2)மாகாண சபையில் பெரும்பான்மையான பிரதிநிதிகளைக் கொண்ட கட்சியின்; அல்லது கூட்டணியின் உறுப்பினர்களை அமைச்சர்களாகக் கொண்ட மாகாண அரசாங்கம்,
3)மாகாண அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு உட்பட்டுச் செயற்படும் மேலே குறிப்பிட்ட வகையான அரச நிர்வாக அமைப்புக்கள்
என்னும் மூன்று வகையான அலகுகளைக் கொண்டதாகும்.

ஒரு நாட்டின் மொத்த அரச அமைப்பின் தலைவராக ஜனாதிபதி (குடியரசுத் தலைவர்) (பிரிட்டனில் மகாராணி) இருப்பது போலவே மாகாண அளவில் மாகாண அரசின் தலைவராக ஆளுநர் நியமிக்கப்படுகிறார். மேற்குறிப்பிட்ட மாகாண அரசமைப்பின் மூன்று அலகுகளினதும் தலைவர் ஆளுநரே.
இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் மத்திய அரசாங்கத்தின் தலைவராக பிரதம மந்திரியும்;, மாநில அரசாங்கங்;களின் தலைவர்களாக முதலமைச்சர்களும் உள்ளனர். ஆனால் அமெரிக்கா, இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவில் ஜனாதிபதியே மத்திய அரசாங்கத்தி;ன் தலைவராக உள்ளார். அமெரிக்காவில் மாகாண ஆளுநர் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவதனால் அவரே மாகாண அரசாங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். ஆனால் இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவின் அரசியல் யாப்பின்படி மாகாண முதலமைச்சர்களே மாகாண அரசாங்கங்களின் தலைவர்களாவர்.
அரசியலி;ல் ஈடுபடுவோரும், அரசியல் நோக்கர்களும் அரசுக்கும், அரசாங்கத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் தொடர்பான அரசியலறிவை தெளிவாகக் கொண்டிருப்பது அவசியமாகும். அப்போதுதான் இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள மாகாண ஆளுநர் மற்றும் மாகாண முதலமைச்சர்களுக்கிடையே நிலவும், நிலவ வேண்டிய அரச உறவுகளைப் புரிந்து கொள்ள முடியும்.
இலங்கையில் அரசு மற்றும் அரசாங்கம் என்னும் சொற்கள்
இவ்விடயம் தொடர்பாக இலங்கையில் நிலவும் வேடிக்கையானதும் வேதனையானதுமான ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட்டுத் தொடர்வதே அவசியமெனக் கருதுகிறேன். இலங்கையின் சிங்களத் தலைவர்களோ மாகாண ஆட்சியமைப்பை ஓர் அரச அமைப்பு எனக் குறிப்பிட்டழைக்க இதுவரை தயாராக இல்லை என்பதே உண்மை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உட்பட பிரதான சிங்களத் தலைவர்கள் அனைவரும் மாகாண அரசு என்ற பதத்தையும் மாகாண அரசாங்கம் என்ற பதத்தையும் தவிர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து கவனமாக தமது சட்டங்களில் மற்றும் பிரேரணைகளில் தவிர்த்திருக்கிறார்கள்.
1983க்கும் 1987க்கும் இடைப்பட்ட காலங்களில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இந்திய அரசின் மத்தியத்துவத்துடனும், இந்திய அரசுடன் நேரடியாகவும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது பல தடவைகள் மாகாண அரசாங்கம் என்ற பதத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பயன் படுத்திய போதிலும் அரசியல் யாப்பில் 13வது திருத்தத்துக்கான சட்டத்தை வரைகின்ற போது மிக நுட்பமாக மாகாண அரசு மற்றும் மாகாண அரசாங்கம் என்னும் பதங்கள் வராது தவிர்ப்பதில் மிகக் கவனமாகச் செயற்பட்டிருக்கிறார். 13வது திருத்தத்தில் உள்ள பல பகுதிகள் இந்திய அரசியல் யாப்பிலிருந்து கொப்பியடிக்கப் பட்டவையே. எனினும் இந்தப்பதங்கள் மட்டும் தவறுதலாகத்தன்னும் கொப்பியடிக்கப்பட்டு விடாமல் இருக்கும் வகையாக ஜே ஆரும் அவரது சட்ட உதவியாளர்களும் பார்த்துக் கொண்டார்கள் என்றே கூற வேண்டும்.

பிரேமதாசா ஆக்கிய பாரம்பரியம்
அரசியல் யாப்பில் அப்பதங்கள் திட்டவட்டமாகக் குறிப்பிடப்படாவிட்டாலும் பொதுவான அரசியல் அறிவுரீதியாகவம் சர்வதேச ரீதியில் இவ்வாறான கட்டமைப்பில் மரபுரீதியாகப் பயன்படுத்தப்படும்; சொற்கள் என்ற வகையிலும் நாம் வடக்கு-கிழக்கு மாகாண அரசு மற்றும் வடக்கு-கிழக்கு மாகாண அரசாங்கம் என்ற பதங்களைப் பயன்படுத்தினோம். இந்திய-இலங்கை சமாதான உடன்பாட்டின்படி அரசியல் அதிகாரத்தைப் பகிர்தல் என்பதன் தாற்பரி;யமும் அதுதான் ஆனால், அதனைச் சகித்துக் கொள்ள முடியாமல் அன்றைய ஜனாதிபதி பிரேமதாசா அவர்கள் மாகாண அரசு என்றோ மாகாண அரசாங்கம் என்றோ சொற்தொடர்களைப் பயன்படுத்தக் கூடாது என மத்திய மற்றும் மாகாண அரசுகளின் அதிகாரிகளுக்குக் கட்டளைகளைப் பிறப்பித்தார், செய்திப் பத்திரிகைகளுக்கு அறிவுறுத்தல்கள் செய்தார். பிமேதாசாவின் அந்த அறிவுறுத்தலை பத்திரிகைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. சிங்களப் பத்திரிகைகள் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளை விட வீரகேசரி போன்ற தமிழ்ப் பத்திரிகைகள் பிரேமதாசாவின் அந்த அறிவுறுத்தலை மிகவும் வழிபாட்டோடு கடைப்பிடித்தன. மாகாண ஆட்சியினால் பணம் கொடுத்து வழங்கப்பட்ட விளம்பரங்களில் கூட அந்தத் 'தமிழ் ரோசம்' கொண்ட, 'தன்மானத் தமிழ்;' பத்திரிகைகள் மாகாண அரசு என்றோ மாகாண அரசாங்கம் என்றோ குறிப்பிடுவதற்கு மறுத்துவிட்டன. இவ்விடயத்தை தமது அறிவுத் தேடலுக்காக அந்தப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் செய்திகளையும் கருத்துகளையும் நம்பியிருக்கும் தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

தனது நிலைப்பாட்டுக்கு பிரேமதாசா அன்று அளித்த விளக்கம் என்னவென்றால், ஒரு நாட்டில் ஓர் அரசு, ஓர் அரசாங்கம்தான் இருக்க முடியும், அது கொழும்பிலேதான் இருக்கிறது, அரச தலைவரும் தானே, அரசாங்கத்தின் தலைவரும் தானே என்றார். இது தொடர்பாக அன்று வடக்கு-கிழக்கு மாகாண அரசாங்கத்தில் இருந்த நாங்கள் எமது நிலைப்பாட்டை விளக்கி பிரேமதாசாவுக்கு பல கடிதங்களை எழுதினோம்.. இந்திய அரசாங்கத்துக்கும் இந்த விடயத்தை எடுத்துக் கூறினோம். நாடாளுமன்றத்தில் தமிழர் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் எமது கட்சியின் தோழர் யோக சங்கரி போன்றோர் கேள்விகளெழுப்பியும், இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றின் உதாரணங்களைச் சுட்டிக்காட்டி விளக்கமளித்தும் கூட பிரேமதாசாவின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. அன்றைக்கு புலிகள் அளித்த பக்கத் துணையினால் பிரேமதாசாவுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையினால் பிரேமதாசாவை விட்டுக் கொடுக்கும் நிலைக்கு நெருக்க முடியாமற் போனது. பிரேமதாசாவைப் பொறுத்த வரையில் மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் போன்று மற்றுமொரு உள்ளாட்சி சபை அமைப்புத்தான் மாகாண சபையும்.
பிரேமதாசா அன்று தொடக்கி வைத்த அந்த அரசியற் கருத்து ஏற்பாட்டை மாற்றியமைப்பதற்கு இன்றுவரை எந்தச் சிங்களத் தலைவரும் முன்வரவில்லை. சந்திரிகா அவர்களுக்கும் நேரடியாக இந்த விடயம் நன்கு தெரிந்திருக்கும், அவரும் முதலமைச்சராக சிறிதுகாலம் இருந்தவா.; 1997ம் ஆண்டு மற்றும் 2000ஆம்ஆண்டுகளில் அவரினால் முன்வைக்கப்பட்ட அரசியல் யாப்புக்கான சீர்திருத்தப் பிரேரணைகளில் அந்தப் பதங்கள் ஓரிடத்திலும் வராத வகையில் தவிர்க்கப்பட்டு பிராந்திய சபை மற்றும் பிராந்திய நிர்வாகம் என்ற பதங்களே இடம்பெற்றுள்ளன. சமஸ்டி அமைப்பையே இலட்சியமாகக் கொண்டவராகச் சொல்லப்பட்ட சட்டத் துறை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சந்திரிகாவின் பிரேரணைகளை வரையும் போது மாகாண அரசு மற்றும் மாகாண அரசாங்கம் என்ற பதங்களை மிகக் கவனமாகவே தவிர்த்துள்ளார் எனலாம். இப்பதங்கள் தொடர்பாக 1999ம் ஆண்டு நான் நேரடியாக சந்திரிகா அவர்களிடம் எடுத்துக் கூறினேன், எழுத்து மூலமும் அவரது பிரேரணை மீதான எனது மாற்றுக் கருத்துக்களில் இவ்விடயத்தைக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் சந்திரிகா அவர்கள் இவ்விடயத்தைக் கலந்துரையாடுவதற்குக் கூட எடுத்துக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை என்பதையே கண்டு கொண்டேன். 1990ம் ஆண்டுக்குப்பின்னர் எனது கட்சியினரைத் தவிர நாடாளுமன்றத்தில் இருந்த தமிழ்ப்பிரதிநிதிகளோ அல்லது ஏனைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களோ இந்த விடயத்தை ஒரு முக்கியமான தொன்றாகக் கருதி அவர்களுக்குக் கிடைத்த மன்றங்களில் முன்னெடுக்கவில்லை என்பதுவும் உண்மையாகும்.
2004ம் ஆண்டு இறுதியில் இலங்கையின் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த மஹிந்த ராஜபக்ஸ அரசியல் அதிகாரப்பகிர்வு தொடர்பான பிரேரணைகளைத் தயாரிப்பதற்கென அரசியல் யாப்பு நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவையும், பாராளுமன்றத்தில் உள்ள அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட ஓர் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவையும் நியமித்தார். அரசியல் நிபுணர்கள் குழுவின் பெரும்பான்மையினர் குறிப்பிடத்தக்க அளவு சமஸ்டி அமைப்புக்கான மாற்றங்களைப் பிரேரித்த போதி;லும் மாகாண அல்லது பிராந்திய மட்டத்தில் அரசு மற்றும் அரசாங்கம் அமைந்திருப்பதைக் குறிக்கும் பதங்கள் வந்து விடாமல் பார்த்துக் கொண்டார்கள் என்றே கூற வேண்டியுள்ளது. பெரும்பான்மையான அரசியல் யாப்பு நியுணர்களின் பிரேரணைகளிலிருந்தும் 2000ஆம் ஆண்டு சந்திரிகா அவர்கள் நாடாளுமன்றத்தில் முன்வைத்த பிரேரணைகளில் இருந்தும் முற்போக்கான அம்சங்கள் பெரும்பாலானவற்றை உள்ளடக்கிய ஓர் அரசியல் யாப்பு பிரேரணையை பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்கள் அரசியற் கட்சிகளின் விவாதங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் முன்வைத்ததை அனைவரும் அறிவர்;. அவரின் பிரேரணைகளிலும் கூட 'மாகாண அரசு மற்றும் மாகாண அரசாங்கங்கள்' என்ற பதங்கள் வராமல் தவிர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

புலியால் தமிழர்களின் பரிதாப நிலை

மிகவும் முற்போக்கான அம்சங்கள் பலவற்றைக் கொண்ட தமது பிரேரணைகள் சிங்கள இனவாதிகளால் எதிர்க்கப்படுவதைக் குறைப்பதற்காகவே, அல்லது பிற்காலத்தில் திருத்திக் கொள்ளக் கூடிய சிலசில கொள்கைரீதியான விடயங்களை இப்போது பெரிதுபடுத்துவதன் மூலம் மொத்தத்தையும் சீர்குலைக்க முயலும் சிஙகள இனவாதிகளின் கைகளை ஓங்க விடாமற் பண்ணுவதற்காகவே அரசியல் ரீதியில் பிரச்சினை தரக் கூடிய அப்பதங்களை தாம் தவிர்த்துக் கொண்டதாக சந்திரிகா பண்டாரநாயக்காவும், பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும், அரசியல் யாப்பு நிபுணர்களும் விளக்கம் தரக்கூடும். ஆனால்;, மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என அதிக பட்ச சமஸ்டியை எதிர்பார்க்கும் தமிழ் அரசியல் நிபுணர்கள் மற்றும் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஏன் இவ்வாறான அடிப்படை விடயத்தில் தமது கருத்துக்களை 'கோரிக்கைகளை ' நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதில் அக்கறையற்றிருக்கிறார்கள் என்பதே கேள்விக் குறியாகும். அழாத பிள்ளைக்கு ஆத்தை கூட பால் கொடுக்க அக்கறை எடுக்கமாட்டாள் என்பதை பல தடவை மாகாணசபையிலும் எனது எழுத்துக்களிலும் எடுத்துக் கூறியிருக்கிறேன். தன்னைப் பெற்றெடுத்த தாய்க்கும் கூட தான் 'சீறுநீர் கழித்ததால் சில்லெடுப்பதை' குழந்தை அழுது கொட்டித்தான் தெரிவிக்க வேண்டும். தாயின் கடமை என்பதற்காக ஒரு குழந்தை கூட வாழாவெட்டியாக இருப்பதில்லை. அடுத்த வீட்டுக்காரன் அல்லது தூரத்துச் சொந்தக்காரன்; அவனாக அக்கறை எடுத்து தன் வீட்டில் உள்ள பிரச்சினையைத் தீர்த்துத் தருவான் என எதிர்பார்த்து இருப்பவனைப் போல ஏமாளி எவனும் இருக்கமாட்டான். ஏன்! உதவி செய்ய முன்வந்தவர்களைக் கூட ஏளனம் செய்து எட்டியுதைத்து தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டது மட்டுமல்லாமல் இன்னமும் அதைப்பற்றித் திமிர்க்கதை பேசும் கோமாளியும் இலங்கைத் தமிழன் போல் வேறெவனும் இருக்கமாட்டான். புலியிசத்தாலும் புலிப்பாசிசத்தாலும் தற்குறிகளாக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்; சமூகம் அதன் பல அடிப்படை வாழ்வாதார விடயங்களிலேயே கேள்விக்குறிகளோடு பிணவாழ்க்கை நடத்தும்போது அதிகாரப் பகிர்வு பற்றிய விடயத்தில் மட்டும் கேள்விக் குறியோடு வாழ்வதைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை என எம்மை நாமே தற்காலிகமாகத் திருப்திப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
மகிந்த ராஜபக்ஸ மாற்றுவாரா?
13வது திருத்தத்தை ஆரம்பத்திலேயே 'முழுமையாக' நடைமுறைப்படுத்தியிருந்தால் இலங்கையின் இனப்பிரச்சினை இவ்வளவு தூரம் சிக்கலடைந்நிருக்காது என ஒப்புக்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள், தான் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றப் போவதாக மீண்டும் மீண்டும் தொடர்ந்து வாக்குறுதி அளித்து வருகிறார். வெற்றிகரமாக தான் நினைத்தபடி கிழக்கு மாகாணத்துக்கான தேர்தலை நடத்தி; முடித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களை முதலமைச்சராகவும் நியமித்து விட்டார். 13வது திருத்தத்தை 'முழுமையாக நிறைவேற்றுதல்' என்பதில் மாகாண ஆட்சியை அதன் சரியான அர்த்தத்தோடு மாகாண அளவில் உள்ள ஓர் அரசாக, சந்திரகாந்தன் தலைமையி;ல் கிழக்கு மாகாண அரசாங்கம் பதவியேற்றுள்ளதாக நடைமுறைப்படுத்துவாரா அல்லது பிரேமதாசா ஏற்படுத்திய பாரம்பரியத்தி;ல் எந்தவித மாற்றமும் செய்யாமல் மாகாண ஆட்சியமைப்பை மாநகர சபைகளின் தரத்திலேயே நடத்தப் போகின்றாரா என்பதற்கான விடையை நாம் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்

உங்கள் நண்பன் -தோழன்
வரதராஜப் பெருமாள்

 
Updated 03-08-08   <<Feed Back >>   <<Tell Your Friend >>  
 
   
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.