Untitled Document
Untitled Document
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமும் எதிர்பார்க்கும் இலக்கும்......வவுனியா நகரசபையில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடுவோரின் விருப்பு இலக்கங்கள்- (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு) அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும் ...தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேசங்களின் தலையீடு ஏன்?..............சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும...சுதந்திரபுரத்தில் அப்பாவி மக்களை இலக்குவைத்த புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு சிறீ ரெலோ வன்மையாகக் கண்டித்துள்ளது...

Untitled Document

 

 

 
அம்பாறை மாவட்டத்தில் இரு தமிழ்க்கல்வி வலயங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
 

த.மனோகரன்
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களை உள்ளடக்கிய கல்முனைஇ சம்மாந்துறைஇ பொத்துவில் ஆகிய தேர்தல் தொகுதிகளுக்குட்பட்டதாக இருநூற்று பத்தொன்பது பாடசாலைகள் இயங்குகின்றன. இவற்றுள் தமிழ்ப் பாடசாலைகள் எழுபத்தேழும் முஸ்லிம் பாடசாலைகள் நூற்று முப்பத்தி ரெண்டும்இ சிங்களப் பாடசாலைகள் ஐந்தும் இடம் பெறுகின்றன.
இப்பாடசாலைகள் கல்முனைஇ அக்கரைப்பற்றுஇ சம்மாந்துறை ஆகிய மூன்று கல்வி வலயங்களிலடங்குகின்றன.
கல்முனை கல்விவலயத்தில் காரைதீவுஇ நிந்தவூர்இ சாய்ந்தமருதுஇ கல்முனை தமிழ்ப் பிரிவுஇ கல்முனை முஸ்லிம் பிரிவு ஆகிய கல்விக் கோட்டங்களும் அக்கரைப்பற்று கல்விவலயத்தில் திருக்கோவில்இ ஆலையடிவேம்புஇ பொத்துவில்இ அட்டாளைச்சேனைஇ அக்கரைப்பற்று ஆகிய கல்விக் கோட்டங்களும்இ சம்மாந்துறை கல்வி வலயத்தில் நாவிதன்வெளிஇ சம்மாந்துறைஇ இறக்காமம் ஆகிய மூன்று கல்விக்கோட்டங்களும் அடங்குகின்றன.
கல்முனை கல்விவலயத்தில் முப்பத்தாறு முஸ்லிம் பாடசாலைகளும்இ இருபத்திரெண்டு தமிழ்ப் பாடசாலைகளும்இ ஒரு சிங்களப் பாடசாலையுமாக ஐம்பத்தொன்பது பாடசாலைகள் இயங்குகின்றன.
அக்கறைப்பற்று கல்விவலயத்திலுள்ள பாடசாலைகள் தொண்ணூஈற்று நான்கில் மூன்று சிங்களப்பாடசாலைகளும்இ முப்பத்தாறு தமிழ்ப் பாடசாலைகளும் ஐம்பத்தைந்து முஸ்லிம் பாடசாலைகளும் அடங்குகின்றன. அதேவேளை பத்தொன்பது தமிழ்ப்பாடசாலைகளையும்இ நாற்பத்தொரு முஸ்லிம் பாடசாலைகளையும் ஒரு சிங்களப் பாடசாலையுமாக மொத்தம் அறுபத்தொரு பாடசாலைகளைக் கொண்டதாக சம்மாந்துறை கல்வி வலயம் உள்ளது.
இந்நிலையிலே இப்பிரதேசத்திலுள்ள எழுபத்தேழு தமிழ்ப் பாடசாலைகள் பல்வேறு குறைபாடுகளை எதிர் நோக்கியுள்ளமையைக் குறிப்பிடுவது அவசியமாகும். தென் கிழக்குப் பிரதேசமான இப்பகுதியில் தமிழ் மக்கள் கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர். சொந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட குடும்பங்கள் அநேகமாகும். இன்றும் யுத்தத்தின் தாக்கத்தால் அகதிவாழ்வு வாழ்வோரும் உள்ளனர். பல தமிழ் மாணவர்கள் பல்வேறு ரதுக்களால் பாடசாலைக் கல்வியைக் கைவிட்ட அவலமுமுள்ளது.
பல்வேறு தரப்பினரது பாராமுகமும்இ புறக்கணிப்பும் தமிழ்ப் பாடசாலைகளை வளமற்றதாக்கியுள்ளன என்பது யதார்த்தமாகும். கடந்த காலத்தில் நவோதய திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் ஒரு தமிழ்ப்பாடசாலையும் இடம்பெறாமை சுட்டிக்காட்ட வேண்டியதாகும். மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகத் தமிழ்ப் பாடசாலைகளிருந்தும் அன்று நவோதய திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட எட்டுப் பாடசாலைகளில் ஒரு தமிழ்ப்பாடசாலையாவது இடம்பெறாதது திட்டமிட்ட புறக்கணிப்பா அல்லது பாரபட்சமான செயற்பாடா அதுவுமில்லாவிட்டால் கவனயீனமா என்பது புரியாத புதிராகவேயுள்ளது.
காலஞ்சென்ற அமைச்சர் அஷ்ரப் முஸ்லிம்இ தமிழ் சமூக நலனுக்காகவும்இ கல்வி நலனுக்காகவும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். அதில் கல்முனைஇ சம்மாந்துறை கல்விவலயங்களின் பணிப்பாளர்களாக முஸ்லிம்கள் இடம்பெறும் அதேவேளை அக்கல்வி வலயங்களின் பிரதிப் பணிப்பாளர்களாக தமிழர்களும்இ அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பணிப்பாளராக தமிழரும் பிரதிப்பணிப்பாளராக முஸ்லிமும் இடம் பெற வேண்டும் என்பது அமரர் அஷ்ரப்பின் விருப்பமாக இருந்தது மட்டுமன்றி அதை அவர் நடைமுறையிலும் ஏற்படுத்தினார்.
அஷ்ரப் அவர்களுடன் அவரது திட்டங்களும் நோக்கங்களும் மறைந்துவிட்ட அவலத்தையே இன்று காணமுடிகின்றது. அஷ்ரப்பின் நோக்கத்தை இனி நிறைவேற்றுவதற்கு எவரும் இல்லை.
எல்லோருக்கும் கல்வியில் சமசந்தர்ப்பம் வழங்க வேண்டும். அரசாங்கம் எல்லாப் பாடசாலைகளுக்கும் பொதுவாகவே நிதியையும்இ ஏனைய வளங்களையும் வழங்குகின்றது. அவை சரியான முறையில் உரியபடி பகிரப்படாது அதிகாரிகளதும்இ பிரதேச அரசியல்வாதிகளதும் விருப்புஇ வெறுப்புகளுக்கமையவும்இ இனஇ மத நோக்கிலும் பகிரப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அதுவே நாகரிகமுமாகும்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருக்கோயிலை மையப்படுத்தி ஒரு கல்வி வலயம் ஏற்படுத்தவும் அதில் சகல தமிழ்ப்பாடசாலைகளையும் உள்ளடக்கவும் முயற்சிகள் மேற்கொண்டபோதும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில் தடைகள் ஏற்பட்டமையையும் சுட்டிக்காட்டவேண்டும்.
அமரர் அஷ்ரப் அவர்களது திட்டமும்இ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது நோக்கமும் கைவிடப்பட்டுள்ள இன்றைய நிலையில் தமிழ்ப் பாடசாலைகள் தொடர்பாகப் புதிய அமைப்புரீதியான நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்படுவது காலத்தின் தேவையாகும்.
நூற்று முப்பத்தி இரண்டு முஸ்லிம் பாடசாலைகளையும் தற்போதுள்ள மூன்று கல்விவலயங்களுக்குட்பட்டதாக இயங்கச் செய்வதுடன் எழுபத்தேழு தமிழ்ப் பாடசாலைகளையும் ஐந்து சிங்களப் பாடசாலைகளையும் உள்ளடக்கிய எண்பத்திரண்டு பாடசாலைகளையும் காரைதீவுஇ திருக்கோயில் ஆகிய இரு கல்விவலயங்களையும் உருவாக்கி அவற்றுள் உள்ளடக்கி இயங்கச் செய்வது காலத்திற்குப் பொருத்தமாக அமையும். தமிழ்இ சிங்களப் பாடசாலைகளின் விடுமுறை தினங்கள் உட்பட பலவற்றிற்கு மாற்றமான நிலையில் முஸ்லிம் பாடசாலைகள் இயங்குவதால் இவ்வாறு தமிழ்இ முஸ்லிம் பாடசாலைகளின் நிர்வாகம் பிரிக்கப்படுவது நிர்வாகத்திற்கு வசதியாகவும் அமையும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்ப் பாடசாலைகளுடன் இயங்கிய முஸ்லிம் பாடசாலைகள் தனியாகப் பிரிக்கப்பட்டு மட்டக்களப்பு மத்தி என்ற கல்விவலயம் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அதை எடுத்துக்காட்டாகக் கொண்டு அம்பாறை மாவட்டத்தில் இரு தமிழ்க் கல்வி வலயங்கள் உருவாக்கப்படுவது பொருத்தமானது.
இன உறவைப்பாதிப்பதாக அமையும் என்று எவரும் இதனைக் கூறமுடியாது. ஏனெனில் மட்டக்களப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட கல்விவலயம் முன்னுதாரணமாகவுள்ளமை சுட்டிக்காட்ட வேண்டியதாகும். எனவேஇ தமிழ்ப்பாடசாலைகளின் நலன் கருதி அம்பாறையில் இரு புதிய தமிழ்க்கல்வி வலயங்கள் உருவாக பொறுப்புடன் செயற்பட சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்.

நன்றி-தினக்குரல்.

 

 
Updated 28-08-08   <<Feed Back >>   <<Tell Your Friend >>  
 
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.