தமிழ் பேசும் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லீம் சமூகத்தினருக்கு 1990 ஆண்டு ஆகஸ்ட் என்பது மறக்கமுடியாத ஆண்டாகும். அவர்களின் பாரம்பரிய தாயக பிரதேசங்களான வடகிழக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டுஇ பலபயங்கர படுகொலைகளை முஸ்லீம் மக்களுக்கு எதிராக புலிகள் செய்யப்பட்ட ஆண்டாகும். இந்த ஆண்டோடு பதினெட்டு ஆண்டுகள் பறந்தோடிவிட்டன.
கிழக்கே காத்தான் குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் 140 முஸ்லீம்களை சுட்டுக்கொன்றார்கள். சுமார் எழுபது முஸ்லீம்கள் படுகாயத்துக்குள்ளானார்கள் ஹூசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மஞ்சத்தொடுவாய் மீரா ஐம்மா பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதங்களுடன் சென்ற புலிப்பயங்கரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்களை துடிக்கப்பதைக்க சுட்டுகொன்றது. புலித்தலமையின் நேரடி உத்தரவின்பேரில் இந்தக்கொடூரம் அரங்கேறியது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி இந்தக்கொடூரம் அரங்கேற்றப்பட்டது.
சரியாக ஒருகிழமைக்கு பின்னர்இ அதாவது அதே வருடம் ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் திகதி ஏறாவூர் பிச்சிநகர் என்ற முஸ்லீம் கிராமத்துக்குள் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் 118 முஸ்லீம்களை சுட்டும்வெட்டியும் கொன்றனர். இருபதுபேர் காயமுற்றனர். ஏறாவூர்இ மட்டக்கிழப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் உள்ளது. மட்டகிழப்பு – பொலநறுவை வீதியில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்குள் ரி-56 ரக துப்பாக்கிகள்இ கத்திகள்இ வாள் சகிதம் சென்ற புலிகள் நடத்திய ஈனத்தனமான இனச்சுத்திகரிப்பில் 45 ஆண்கள்இ 28பெண்கள்இ 31 பிள்ளைகள் பலி எடுக்கப்பட்டார்கள். நகைகள் கொள்ளையிடப்பட்டன. முஸ்லீம் மக்களை மிரட்டுவதற்காகச் சிலரின் கழுத்துக்கள் வாள்களாள் துண்டிக்கப்பட்டன.
இச்சம்பவம் நடைபெற்று மூன்று நாட்களுக்குப் பின்னர் கிழக்கில் அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லீம் கிராமம் ஒன்றுக்குள் புகுந்த புலிகள் நடத்திய தாக்குதலில் ஒன்பது முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் ஆகஸ்ட் 13திகதி நடைபெற்றது. அம்பாறை முள்ளியன் காடு என்ற கிராமத்தில் ஆகஸ்ட் ஐந்தாம் திகதி வயலில் வேலைசெய்துகொண்டிருந்து பதிழே முஸ்லிம்களை புலிகள் சுட்டுக்கொன்றனர். மறுநாள் ஆறாந்திகதியும் அம்பாறை வயல்வெளியொன்றில் வைத்து 33 முஸ்லீம் விவசாயிகள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேவருடம் ஐ_லை மாதம் முப்பதாந்திகதி புலிகளால் அக்கரைப்பற்று நகரத்தில் 14 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1990 ஆம் ஆண்டு மட்டும் சும்மார் ஐந்நூற்றுக்கு மேட்பட்ட முஸ்லீம்கள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது கிழக்கில் மட்டும் புலிகளால் மேற்கொள்ளப்பட்டவையாகும்.
அதேவருடம் வடமாகாணத்தின் யாழப்பாணம்இ முல்லைதீவுஇ வவுனியாஇ மன்னார்இ கிழிநொச்சிஇ ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சும்மார் ஒரு இலச்சம் முஸ்லீம்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள். அக்டோபர் மாதம் 22ஆம்திகதி இச்சம்பவம் இடம்பெற்றது. உடமைகள் எல்லாம் அபகரிகப்பட்டு தமது தாய் மண்ணை விட்டு இந்த மக்கள் வெறும்கையோடு விரட்டப்பட்டனர். யாழ்பாண முஸ்லீம் மக்ளுக்கு வெறும் இரண்டு மணித்தியால அவகாசமே வழங்கப்படது. ஏனைய மாவட்ட முஸ்லீம்களுக்கு 48மணித்தியால் அவகாசம் வழங்கப்பட்டது.
முஸ்லீம் மக்களை விரட்டி வெளியேற்றும் நோக்கோடு 35 முஸ்லீம் வர்தகர்களை புலிப்பயங்கரவாதிகள் கடத்திசென்றனர். இவர்களில் புலிகளுக்கு இலச்சக்கணக்கில் கப்பம் வழங்கிய 18 முஸ்லீம் வர்தகர்கள் சிலமாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனையோர் பற்றிய தகவல்கள் இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை. வடமாகாண அன்றைய மொத்த சனத்தொகையில் ஐந்து சதவீதமாக இருந்த முஸ்லீம் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழைத்தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. மதத்தாலும் சிலகாலாச்சார பழக்கவழக்கங்களாலும் மட்டும் வேறுபட்ட இந்தமக்கள் விரட்டப்பட்டமை ஓர் அப்பட்டமான இனச்சுத்திகரிப்பாகும்.
புலிப்பயங்கரவாதிகள் என்னென்னஇ எந்தவகையான பயங்கரவாத செயல்களை செய்தாலும் அவைகள் எல்லாம் தமிழீழ போராட்டமாகும். அதனால்தான் தமிழீழ போராட்டத்தை உலகம் ஒரு பயங்கரவாத போராட்டமாக அங்கீகரித்துள்ளது.
ஒருபாரிய கொடுரத்துக்கு வடக்கு-கிழக்கு வாழ் முஸ்லீம் மக்கள் முகம்கொடுத்து பதினெட்டு வருடங்கள் ஓடிவிட்டன. வடக்கை விட்டு விரட்டப்பட்ட முஸ்லீம் மக்கள் இன்னமும் பதினேழு பாரிய அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மன்னாரிலிருந்து விரட்டப்பட்டு புத்தளம் அகதி முகாமில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம் அகதிகளின் அவலங்கள் சொல்லமுடியாதவைகள். கிழக்கு முஸ்லீம்கங்கள் பறிகொடுத்து விவசாயக்காணிகள்இ வாழ்நிலங்கள்இ மாட்டுப்பட்டிகள்இ அதிகாரத்தை கையில் எடுத்து கொண்டவர்களின் கைகளிலேயே இன்னமும் இருக்கின்றன.
வடகிழக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லீகளில் எண்பது சதவீதமானவர்கள் இன்னமும் தமது தாய் மண்ணுக்கு திரும்பவில்லை. கிழக்கு முஸ்லீம்கள் இன்றும் பயத்துடன்தான் வாழ்கை நடத்துகிறார்கள். இதற்கு எல்லாம் காரணம் பிரபாகர பயங்கரவாத சங்காரம் தான் காரணம். பிரபாகர பயங்கரவாதி நடத்துவது தமிழீழப்போரட்டமல்ல தமிழினத்தை அழிக்கின்ற போராட்டமாகும்.
தமிழனை அழிப்பதற்காக தமிழனுக்கு எதிராக பல்வேறு எதிரிகளை உருவாக்கி பல்வேறு பயங்கரவாத செயல்களை தோற்றுவிப்பதன் மூலம் தமிழனையழித்து தமிழனை தமிழீழ பிரதேசத்திலிருந்து விடுவிப்பதாகும். இதூதன் தமிழீழ போராட்டம் என்ற பிரபாகரனின் கொள்கையாகும.
நன்றி-இலக்கியா இன்போ
|