| |
Untitled Document
|
|
|
|
|
|
|
|
| |
அஷ்ரப்: நினைத்தலும், மறுத்தலும்
|
| |
மப்றூக்
நாளை மறுதினம் (16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை) முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவு நாளாகும்! மறக்கவே கூடாத அவரை சற்றே திரும்பிப் பார்க்கிறது இந்தக் கட்டுரை!!
சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களுக்கென்று ஓர் தனித்த அடையாளத்தைப் பெற்றுத் தந்தது முஸ்லிம் காங்கிரஸ் என்பதில் பெருத்த முரண்பாடுகள் இருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு ஒரு சமூகத்தின் முகவரியாக மு.கா.வை உயரங்களுக்கு வளர்த்தெடுத்துச் சென்றவர் அதன் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் என்பதிலும் மாற்றுக் கருத்துகள் இருக்க முடியாது! சாதாரண மனித பலவீனங்களோடு முஸ்லிம் சமூகத்தை தன் தோளில் சுமந்த அசாதாரண மனிதர் அஷ்ரப்! அவரின் கனவுகளில் பெரும்பான்மையானவை முஸ்லிம் சமூகத்தை எல்லாத்துறைகளிலும் அடுத்த படிநிலைக்கு எப்படி உயர்த்துவது என்பதாகவே இருந்தது.
அவரின் கட்சிச் சின்னமான மரத்தைப் போலவே அவரது இருத்தலும்இ மறைதலும் இருந்தன! மரம் - இருக்கும் போதெல்லாம் கனியும்இ நிழலும் கொடுக்கும். வீழ்ந்த பின்னரோ கதவாகும்இ கட்டிலாகும்இ கதிரையாகும். ஆகக்குறைந்ததுஇ வீட்டில் அடுப்பெரிக்க விறகாக மாறிப்போகும்! இப்படித்தான் இருந்தது - அஷ்ரப் அவர்களின் வாழ்வும்இ மரணமும்! அவர் உயிரோடிருந்தபோது எத்தனையோ ஆயிரம் பேர் ஏதோவொரு வகையில் அவரால் வாழ்ந்தார்கள்இ இன்னும் வாழ்கிறார்கள். உதாரணமாகஇ இன்று - இலங்கைத் துறைமுக அதிகாரசபையில் கடமையாற்றுகின்ற ஆயிரக்கணக்கான முஸ்லிம்இ இந்து இளைஞர்களின் வீட்டில் பொங்குகின்ற ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் அஷ்ரப் அவர்களின் பெயர் இருக்கிறது. காரணம்இ அவர் பெற்றுக் கொடுத்த தொழிலினால்தான் ஓடுகிறது இவர்கள் வாழ்க்கை! அதேவேளைஇ அஷ்ரப்பின் காலத்தில் அவரின் பெயரை வைத்தே பிழைப்பு நடத்தியோர் பட்டியலும் நீளமானது! இதில் சுவாரஸியம் என்னவென்றால் மேற்படி மனிதர்களில் பலர் அவரை மிகவும் நேசித்தார்கள். சிலரோ நேசிப்பதுபோல் நடித்தார்கள்!
அஷ்ரப்பின் வாழ்வு போலவேஇ அவரின் மரணமும் ஒவ்வொருவருக்கும் ஏதோவொன்றைக் கொடுத்து விட்டே சென்றது. லட்சக்கணக்கான மக்களுக்கு அவரின் மரணம் - தீராத கண்ணீரைக் கொடுத்தது. அதேசமயம்இ ஒரு சிலருக்கு கோடிகளாய் பணத்தைக் கொட்டிக் கொட்டிக் கொடுத்தது. வேறு சிலருக்கோ சில சிம்மாசனங்களைக் கொடுத்து விட்டுச் சென்றது! ஆம்இ அரசியல் மற்றும் அது சார்ந்த பதவிகளில் இன்று உட்கார்ந்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸை மூலாதாரமாய்க் கொண்ட அநேகமானோரின் சிம்மாசனங்கள் - அஷ்ரப் கொடுத்தது அல்லது அவர் மரணம் கொடுத்தது! அஷ்ரப்பின் மரணம்தான் -
- ரவூப் ஹக்கீமை மு.கா.வின் தலைவராக்கியது.
- அதாஉல்லாவை அமைச்சராக்கியுள்ளது.
- வீட்டுப் பெண்ணாக இருந்த அவர் மனைவி பேரியலைஇ நாட்டுக்கு மந்திரியாக மாற்றி விட்டிருக்கிறது.
இப்படி எழுதிக்கொண்டே போனால் இந்தப்பட்டியல் மிக மிக நீண்டுகொண்டே செல்லும்!
ஆக - இவ்வாறுஇ அஷ்ரப் இருந்தபோதும் சரிஇ இறந்தபோதும் சரி அவரால் பலன்களையே பெற்றுக்கொண்ட இந்த அரசியல்வாதிகள்இ ஆகக்குறைந்தது அவரின் மரணத்தின் பின்னராயினும் அவருடைய பெயரில் செய்தவைதான் என்ன?
கூட்டிக்கழித்துப் பார்த்தால்; உருப்படியாக இவர்கள் ஒன்றுமே செய்யவில்லை! தேர்தல் காலங்களில் மட்டும் - தமது படங்களோடு அஷ்ரப்பின் உருவத்தை இணைத்து சுவரொட்டிகளாகவும்இ துண்டுப் பிரசுரங்களாகவும் வெளியிட்டு வாக்கு வேட்டை நடத்துவதோடு அநேகமாய் அஷ்ரப்புக்கும் இந்த அரசியல்வாதிகளுக்குமிடையிலான உறவு முடிந்துபோய் விடுகிறது.
பின்னர் - அவரின் நினைவு தினங்கள் வரும்போதுஇ ஆகக்கூடிப்போனால் ஆயிரம்; பேரைக் கூட்டி சாப்பாடு போடுவார்கள். மறக்காமல் - அந்த விருந்து பற்றிய செய்தியை மறுநாள்இ புகைப்படத்துடன் பத்திரிகைகளில் வெளிவரவும் செய்வார்கள்! இப்படிஇ அஷ்ரப்புக்காக செய்வதாய் இவர்கள் சொல்லிக் கொண்டு ஆற்றுகின்ற அத்தனை விடயங்களும்இ சுய விளம்பரங்களுக்கானவையே தவிரஇ சுத்தமான மனதுடன் செய்கின்றவையல்ல!
முஸ்லிம் அரசியல்வாதிகளேஇ மறைந்த உங்கள் தலைவன்; பெயரில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இவைகளல்ல! ஆகக்குறைந்ததுஇ நமது குழந்தைகளுக்கும் குழந்தைகளின் குழந்தைகளுக்கும் அஷ்ரப் பற்றிய நல்ல சேதிகளைக் கொண்டு சேர்க்கும் முயற்சிகளில் எதையாவதைத்தான் நீங்கள் செய்யவேண்டியிருக்கிறது. அப்படி நீங்கள் செய்தவைதான் என்ன?
அஷ்ரப் மறைவுக்குப் பிறகுஇ அவரின் பாராளுமன்ற உரைகளைத் தொகுத்து அவருடைய பிறந்த தினங்களில் மு.காங்கிரஸார் நூலாக வெளியிட்டு வருகின்றனர். இது பாராட்டுக்குரிய விடயம்தான். ஆனால்இ மு.கா.வும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமும் அஷ்ரப் அவர்களுக்கு ஆற்ற வேண்டியவைகளோ இதைவிடவும் ஆயிரமாயிரம் மடங்குகள் அதிகமானவை! அவருக்காகச் செய்ய வேண்டியவைகளில் மிகக் கடைசியானதாக வேண்டுமென்றால் இந்த முயற்சியினைக் குறிப்பிடலாம்!
ரவூப் ஹக்கீம் இன்று வகித்துக் கொண்டிருக்கும் மு.காங்கிரஸின் தலைமைப் பதவியானது அஷ்ரப் அவர்களின் மரணம் தந்தது. வெறும் கட்டிடங்கள் ஒன்றிரண்டுக்கு அவரின் பெயரை வைப்பதாலோஇ அவரின் பெயரில் சில கவிதைகளை எழுதுவதாலோ மு.கா. தலைவரே உங்கள் கடன்கள் தீர்ந்துவிடப் போவதில்லை! அஷ்ரப்பின் பெயரில் நீங்கள் நிகழ்த்த வேண்டியதெல்லாம் இவைகளல்லஇ வேறேதோ சில இருக்கின்றன! அந்த வேறு என்பவை என்ன என்பதை நீங்களும்இ உங்கள் சகாக்களுமே சிந்திக்க வேண்டும்!
மர்ஹும் அஷ்ரப் அவர்களின் - தீர்க்கவே முடியாத இன்னுமொரு கடனாளி நமது அமைச்சர் அதாஉல்லா! அஷ்ரப்பின் கீழிருந்த அமைச்சொன்றின் மாவட்ட இணைப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருந்த அதாஉல்லாவைஇ தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக்கிப் பார்த்தவர் அஷ்ரப்! பின்னர் 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அஷ்ரப் தன்னோடு இணைத்து அதாஉல்லாவையும் களமிறக்கினார்.
துரதிர்ஷ்டவசமாக இந்தக் காலத்தில்தான் அந்த வானூர்தி வெடிப்பு நிகழ்ந்தது. அஷ்ரப் மரணமானார். அதாஉல்லா பா.உ. ஆனார். திறந்து சொன்னால்இ இதிலிருந்துதான் அதாஉல்லாவின் அரசியல் வாழ்க்கை ஜொலிக்கவே தொடங்கியது. ஆனால்இ அந்த ஜொலிப்புகளைக் கொடுத்த தன் தலைவனை அமைச்சர் அதாஉல்லா கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டார்.
அஷ்ரப் விட்டுச் சென்ற இடத்திலிருந்தே தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கூறும் அதாஉல்லாஇ அஷ்ரப்பின் மறைவின் பின்னர் அவருக்காய் ஆற்றியவைதான் என்ன? ஊரிலுள்ள கட்டிடங்களுக்கெல்லாம் தனது பெயரையும்இ போதாக்குறைக்கு தன் தாயார் பெயரையும்கூட சூட்டி மகிழும் இவரால்இ தன் தலைவனுக்காக எதுவும் செய்ய முடியாமல் போனது ஏன்? அக்கரைப்பற்றில் கம்பீரமாக எழுந்து நிற்கும் கலாசார மண்டபத்துக்கு அதாஉல்லா அரங்கம் என பெயரிட்ட இவருக்கு - அஷ்ரப் அரங்கம் என்றாவது பெயர் வைக்கத் தோணலியே!
இத்தனைக்கும் அந்த மண்டபத்துக்கு அத்திவாரமிட்டவரே அஷ்ரப்தான்! முன்னரெல்லாம் இவர்களின் சுவரொட்டிகளில் அஷ்ரப்பின் படத்தைப் பெரிதாகவும்இ இவர்களின் படங்களைச் சிறிதாகவுமே அச்சிடுவார்கள். இப்போது அஷ்ரப்பை சிறிதாகவும்இ இவர்களைப் பெரிதாகவும் அச்சிட்டு ஒட்டுகிறார்கள். இந்த உளவியலைப் புரிந்து கொள்வது அத்துணை சிரமமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அஷ்ரப் எனும் பெயரை மக்கள் மத்தியில் மறக்கடிக்கச் செய்வதே இவர்களின் விருப்பமாகும். காரணம்இ அஷ்ரப்பின் நினைவுகள் மக்களிடம் இருக்கும் வரை இவர்களால் தேசியத் தலைவர்களாக ஆகிவிட முடியாது என இவர்கள் நம்புகிறார்கள்!
சரிஇ மேலுள்ளவர்களை ஒருபுறம் வைத்துவிடுவோம்! அஷ்ரப்புக்கும் அவர்களுக்குமான உறவு ஒற்றையுறவு! ஆனால்இ அவரின் மறைவினால் ஏற்பட்ட வேட்பாளர் வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகிஇ பின் அவரின் நுஆ கட்சியின் தலைவராகி அதன் பின் இன்று பலமிக்கதொரு மந்திரியாக மாறிப்போயிருக்கும் அவருடைய மனைவியார் திருமதி. பேரியல் கூடஇ அஷ்ரப் தொடர்பில் காத்திரமாக ஏதாவது செய்ய வேண்டுமெனும் சொரணைகள் எதுவுமற்று சும்மா இருக்கின்றார். இன்றைய அரசாங்கத்தில் பேரியலுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்திஇ அவருடைய கணவருக்காய் எதையாவது செய்தேயிருக்கலாம்! ஆனால்இ இதுவரை ஒன்றுமில்லை!
இதுகுறித்து மு.கா.வின் அஷ்ரப் விசுவாசியும்இ முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான நண்பரொருவர் கூறுகையில் மற்றவர்கள் இந்த விடயத்தில் பொடுபோக்காக இருப்பதை விடவும்இ பேரியலின் அலட்சியமே மிகவும் கவலையளிக்கின்றது! தலைவன்இ கணவன் என்று மர்ஹும் அஷ்ரப் அவர்களுக்கு இவர் ஆற்றவேண்டிய கடமைகள் இரட்டிப்பானவை! அவைகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் நிச்சயமாய் பேரியலைச் சுற்றும் பாவங்களின் தன்மைகளும் இரட்டிப்பானவைகளாகவே அமையும் என்று ஆதங்கப்படுகிறார்!
அஷ்ரப்பின் பாராளுமன்ற உரைகளை தொகுத்து மு.கா.வினர் வெளியிடும் ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும் அதிதியாக சென்று அமர்பவர்களில் பேரியலும் ஒருவர்! நூலின் முதற் பிரதிகளையும் அவரே பெற்றும் கொள்வார். அந்த வேளைகளில் ஆகக்குறைந்ததுஇ இதைப்போலாயினும் எதையாவது என் கணவருக்கு நான் செய்யக் கூடாதா என்று ஒருமுறை கூட உங்களுக்கு உறைக்கவில்லையா அன்னையே!?
அஷ்ரப் பிறந்த அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக ஆறு முஸ்லிம் உள்ளூராட்சி மன்றங்கள் இருக்கின்றன. இவைகளில் இப்போது ஐந்து மன்றங்கள் மு.கா.வின் அதிகாரத்தின் கீழுள்ளன! இவைகள் கூடஇ அரைத்தூக்கத்தில்தான் கிடக்கின்றன. அஷ்ரப் அவர்களின் நினைவு வாரமொன்றைப் பிரகடனம் செய்துஇ அதன்போது மக்களுக்கும் சமூகத்துக்கும் ஏதாவது நல்லவைகளை இவர்கள் செய்திருக்கலாம்.
ஆனால் செய்யவேயில்லை. பிரதேசசபைத் தவிசாளர்களே ஆகக்குறைந்தது கொந்தராத்து வேலைகளில் நீங்கள் காட்டுகின்ற அக்கறைகளின் பாதியையாவதுஇ உங்கள் தலைவனின் நினைவு தினத்துக்காக நீங்கள் காட்டவில்லையே! சிலவேளைஇ கத்தை கத்தையாக இதில் காசு உழைக்க முடியாது என்பதால்இ பெரிதாக இதை நீங்கள் எடுக்காமலிருக்கலாம்!
இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு சிலர் சிலவேளைஇ தங்களை அஷ்ரப்பின் ஆழமான விசுவாசியாகக் காண்பிக்க முயலுவீர்கள் என்பதும் நமக்குத் தெரியும். அந்த அவசரத்தில் பத்து நூறு பேரைக் கூட்டிஇ ஒரு நோன்பு துறக்கும் நிகழ்வையோ அல்லது உங்கள் ஆதரவாளர்களில் சிலருக்கு இனாமாக ஒன்றுக்கும் உதவாத சில பொருட்களையோ கொடுத்து விட்டு நீங்கள் கடமை கழித்து விடுவீர்கள் என்பதும் நமக்குத் தெரியும்! நினைவில் வைத்திருங்கள் தலைவர்களே! இவைகளை நீங்கள் எதற்காகச் செய்கின்றீர்கள் என்று மக்களுக்கும் தெரியும்!!
நன்றி-தினக்குரல்.
|
| |
|
| |
|
|
|
|
|
Untitled Document
|
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.
|
|
|
|