Untitled Document
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமும் எதிர்பார்க்கும் இலக்கும்.....இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பினர் ஆயதங்களை அரச தரப்பினரிடம் ஒப்படைப்பதானது, தங்களை தாங்களாகவே அழித்து கொள்ளுவதும், தங்களின் சுயாதிபத்தை மகிந்த அரசிடம் அடைவு வைப்பதற்குரியதுமான ஒரு செயலாகும். ....சுதந்திரபுரத்தில் அப்பாவி மக்களை இலக்குவைத்த புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு சிறீ ரெலோ வன்மையாகக் கண்டித்துள்ளது...........யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு :
National Reconciliation in peril…..
Dr M Neethirajan
Please watch these videos. Speeches made by MR no doubt will instil racial hatred among the communities.

http://www.adaderana.lk/( Please watch 2010-01-22 8.00PM News)
http://www.youtube.com/watch?v=6rZ5u3h0C44
http://www.youtube.com/watch?v=xbNAt_9Ty1w&feature=related

MR claims the existence of a secret document signed between SF and Sampathan in order to divide the country. No intelligent human being will believe this claim unless he is racially motivated. More>>
 

முஸ்லிம் சகோதரர்களுக்கு ஓர் கடிதம்.

அரசியல் அதிகாரம் இல்லாத காலத்திலும்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதித்திருக்கிறது.

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட பூமியின் மகனாக இருந்து இக் கடிதத்தை எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.இலங்கை முஸ்லிம் மக்களுக்கு ஓர் முஸ்லிம் கட்சி வேண்டுமென்ற விதை நாட்டப்பட்டு 30 வருடம் நிறைவடைந்து விட்டது.இந்த 30 வருட காலத்தில் இலங்கை முழுவதிலும் உள்ள 60 வீதமான முஸ்லிம் மக்களின் ஆதரவினூடாக ஓர் மக்கள் இயக்கமாக உரிமை அரசியலிலும்,அபிவிருத்தி அரசியலிலும் முஸ்லிம் காங்கிரஸ் பல சாதனைகளை புரிந்திருக்கின்றது.இந்த சாதனைகளை முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களி;த்தவர்கள் என்ற வகையில் நீங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்வீர்கள்.

நானும் நீங்களும் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவாக பல தேர்தல்களில் வாக்களித்துள்ளோம்.பல தடவைகளில் வாக்களிக்காது இருந்துள்ளோம்.எமது ஒற்றுமையினால் நாம் பலவற்றை சாதித்திருகின்றோம்.நாம் ஒற்றுமை இழந்து பிரிந்தபோது பலவற்றை இழந்திருக்கின்றோம்.தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்களின் வழிகாட்டலில் வீறு நடை போட்டோம்.தலைவர் மறைந்ததன் பின்னர் சொந்த இலாபங்களுக்காகவும்,பதவிகளுக்காகவும் பிரிந்து சமூகத்தை நடுத் தெருவில்விட்டு விட்டோம்.தனிப்பட்ட நலன்களுக்காகவும்,தனிப்பட்ட ஊர்களுக்காகவும் பிரிந்து வாக்களித்து நமது தலையில் நாமே மண் அள்ளி வைத்துக்கொண்டோம்..மேலும்........

 

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமும் எதிர்பார்க்கும் இலக்கும்

நமது நாட்டில் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் வந்த 4 வருட கால நிகழ்வுகள் மறக்க முடியாதவை. இனவாதம், மதவாதம் இக்காலகட்டத்தில் என்று மில்லாதவாறு நாட்டில் பரவலாக அதிகரித்தன. இவற்றால் சிறுபான்மையினர் சகல வழிகளிலும் சிறுமைப்படுத்தப்பட்டனர். நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்து வீழ்ச்சியை நோக்கி வேகமாக இறங்கியதால் பெரும்பாலான தனி மனிதர்கள் வறுமையில் வாடி வதங்க வேண்டி ஏற்பட்டது.
யுத்தத்தின் காரணமாக மரணங்களும், இடப்பெயர்வுகளும் அதிகரித்து உறவுகளின் பிரிவும் ஓலங்களும் அவலங்களும் அழுகையும் அக்காலகட்டத்தில் மனித வாழ்வின் நிரந்தர அம்சங்களாகவே விளங்கின. இவற்றின் காரணமாக "மரணம் மட்டும்தான் தனி மனித வாழ்வின் ஒரே உறுதியான எதிர்காலம்' எனக் குறிப்பிடப்படும் அளவுக்கு பொது இலட்சியம் பொது வாழ்வும் சக மேம்பாடுகளும் சிதைக்கப்பட்டுக் கொண்டே வந்தன.

*மத்திய ஆட்சியில் ஜனநாயகம் துளியளவு கூட இல்லாத நிலை.

*இலங்கை முழுவதையும் தமது சொத்தாகக் கருதிச் செயற்பட்ட ஒரு குடும்பத்தின் செயற்பாடுகளை மக்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டிய நிர்ப்பந்தம். .மேலும்........

 
 
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சரத் பொன்சேகாவா?

சுவிஸில் இருந்து ஏ.யூ.எல்.எம்.உறாரிஸ்.

இலங்கையில் புலிகளுடனான யுத்தத்தை வெற்றி கொண்ட இரண்டு உறீரோக்கள் உள்ளனர். ஒருவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.இன்று இலங்கையின் 70 வீதமான சிங்கள மக்களின் கதாநாயகர்களாக இவர்கள் இருவருமே காணப்படுகின்றனர். ஆனால் இவர்களில் ஜனாதிபதியே யுத்தத்தின் வெற்றிக்கு 100 வீத காரணம் என்பதாக சிங்கள தேசத்தில் கதைகள் புனையப்படுகின்றன.அரச ஊடகங்கள் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன.யுத்தத்தை வெற்றி கொண்ட ஜனாதிபதி மீண்டும் தேர்தல் இன்றி தெரிவு செய்யப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.மகிந்த சிங்கள தேசத்து மன்னர் போலவும் அவரது சகோதரர்கள் இளவரசர்கள் போலவும் கட்டமைக்கப்படுகின்றனர். .மேலும்........

Updated 20--07--09

அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும்
எத்தனையோ மக்களை அனாதையாகக் கொன்றவர்கள் புலிகள். ஆனால் தன் தலைவரை அதே மாதிரி கொன்று போட்டுள்ள போது எதுவும் நடவாத மாதிரி நடிக்கின்றனர். பிரபாகரனின் உடலை தங்கள் தலைவரின் உடலல்ல என்று கூறி, மீண்டும் அவரை அனாதையாகவே தூக்கியெறிந்தனர். இப்படி அனாதையாக மடிந்த பிரபாகரனுக்கு, இன்று யாரும் அஞ்சலி கூட செலுத்த முன்வரவில்லை.

ஆனால் இதைக் கச்சிதமாக செய்து முடித்தவர்கள், தாங்கள் செய்த துரோகத்தை மூடிமறைக்க நாடு கடந்த தமிழீழம் என்கின்றனர். மறுபக்கத்தில் பினாமிச் சொத்தைக் கைப்பற்ற, இந்த நாடு கடந்த தமிழீழம் உதவும் என்றும் நம்புகின்றனர். இதற்கமைய ஒரு துரோகத் தலைமை ஒன்றை, புலம்பெயர் மண்ணில் கட்டியெழுப்பும் அறிக்கைகள், விளக்கங்கள். மேலும்........
Updated 07--07--09
இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பினர் ஆயதங்களை அரச தரப்பினரிடம் ஒப்படைப்பதானது, தங்களை தாங்களாகவே அழித்து கொள்ளுவதும், தங்களின் சுயாதிபத்தை மகிந்த அரசிடம் அடைவு வைப்பதற்குரியதுமான ஒரு செயலாகும்.
-கி.பாஸ்கரன்-
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பு தமது இராணுவ பிரிவை கலைத்து நேற்று (07.03.2009) அரச தரப்பினரிடம் ஆயுதங்களை ஒப்படைப்பதாக செய்திகளும், படங்களும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் அமைப்பினர் முழுமையாக தாங்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைத்தர்களா அல்லது இல்லையா என்பதை அரச தரப்பினர்தான் உறுதிப்படுத்தவேண்டும்.எது எப்படியானாலும் எனிவரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பில் கொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் வாங்குதல் போன்றசெயல்கள் முற்றாக ஓழிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் சுதந்திர புருசர்களாக வாழவேண்டும் என்பதே கிழக்கு மாகாண மக்களின் அபிலாசைகளாகும் மேலும்........
Updated 24-11-08
ஊடகக் கிரிமினல்கள்
பி.இரயாகரன்.

மனித அவலத்தை திரித்தும் புரட்டியும் பிழைக்கும் தம் நக்குத்தனத்தைத்தான், ஊடகக் கிரிமினல்கள் தமது 'ஊடாக சுதந்திரம்" என்கின்றனர். இதையே அவர்கள் 'ஊடக ஜனநாயகம்" என்கின்றனர். நிலவும் எல்லா பாசிசத்தையும் மிதமிஞ்சிய வக்கிரத்துடன், அதை தம் பங்குக்கு மக்களின் மேல் அள்ளிக்கொட்டிக் கொண்டு, தம்மைத் தாம் தம்பட்டம் அடிக்கின்ற பிழைப்புவாதக் கூட்டம் தான் இந்தக் கிரிமினல்கள்.. மேலும்........
Updated 24-11-08
 
 
ஊடகங்களில் முஸ்லீம்கள்
ச.பாலமுருகன்
இவ்வருட சுதந்திர தினத்தின்போது, இந்நாட்டின் தேசிய கொடியை மரியாதை செய்ய பாபுலர் பிரண்ட் என்ற அமைப்பினர் முஸ்லீம்கள் சுதந்திர தின விழா கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். முஸ்லிம்களின் இச்சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது. இறுதியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்றே சுதந்திர தினத்தை முஸ்லிம்கள் கொண்டாட முடிந்தது.
மதத்தின் பெயரால் வேறுபாடு காட்டுவது அரசுக்கு நியாயமானதல்ல. ஆனால் நமது சமூகத்தில் உருவாகியுள்ள பகைமை உணர்வு முஸ்லிம்களின் சுதந்திர தின விழாவைக் கூட தடுக்கும் வகையில் வளர்ந்துள்ளது. மேலும்........
Updated 26-10-08
 
 
பிரச்சாரக் கூற்று
நாம் இன்று எங்கும் வன்முறையையே காண்கின்றோம். குறிப்பாக பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள், ஏழைகள், சிறுபான்மையினர், ஊடகவியளாளர்களுக்கெதிராகவும் மற்றும் சூழலுக்கெதிராகவும் கூட வன்முறைகள் இடம்பெறுவதைக் காண்கின்றோம். இலங்கையராகிய நாம் இவ்வகையான கொடூரங்களுக்கு மத்தியில் செயலற்றிருக்கின்றோம். முதலில் செயலில் இறங்கவேண்டிய பொறுப்பு எம்முடையதாக இருக்க, நாம் ஏன் மற்றவர்களை எதிர்பார்கின்றோம்? மேலும்........
Updated 10-10-08
7 September 2010
இன்றைய பதிவுகள்
 
விமர்சன தலைப்புக்கள்

 

 

 

 

 

 

 
இந்து பயங்கரவாதமே இஸ்லாமிய பயங்கரவாதமாகின்றது

பம்பாய் தாக்குதலை வைத்து ஒப்பாரி வைக்கின்றனர். மனிதத் தன்மை பற்றி பேசுகின்றனர். ஆளும் வர்க்கங்கள் தம் அடக்கமுறை கருவிகளை எப்படி பலப்படுத்துவது என்று, கூச்சல் போடுகின்றனர். உலக கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் எல்லாம் 'பயங்கரவாதம் பற்றி" வழமையான ஒப்பாரி வைக்கின்றனர். 'சுதந்திர" செய்தி ஊடகங்கள் இஸ்லாமிய 'பயங்கரவாதம்" என்று மூளைச்சலவை செய்கின்றன.
அறிவு, நேர்மை என எதும் கிடையாத கும்பல்கள் எல்லாம் கொக்கரிக்கின்றது. ஐயோ என்று ஓப்பாரிவைக்கின்றது.
ஒரு மருத்துவர் நோய் வரக் காரணம் என்னவென்று ஆராய்ந்து, அதற்கு தான் மருந்து கொடுத்து அந்த நோயைக் சுகப்படுத்துகின்றனர். இன்று 'பயங்கரவாதம்" என்ற சமூக நோயைக் குணப்படுத்த வேண்டும் என்றால், இதற்கான காரணத்தை கண்டறிந்து அதை குணப்படுத்த வேண்டும். மேலும்........

Updated 21-10-08
 
   
     
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.