தமிழ் பேசும் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லீம் சமூகத்தினருக்கு 1990 ஆண்டு ஆகஸ்ட் என்பது மறக்கமுடியாத ஆண்டாகும். அவர்களின் பாரம்பரிய தாயக பிரதேசங்களான வடகிழக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டுஇ பலபயங்கர படுகொலைகளை முஸ்லீம் மக்களுக்கு எதிராக புலிகள் செய்யப்பட்ட ஆண்டாகும். இந்த ஆண்டோடு பதினெட்டு ஆண்டுகள் பறந்தோடிவிட்டன.
கிழக்கே காத்தான் குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் 140 முஸ்லீம்களை சுட்டுக்கொன்றார்கள். சுமார் எழுபது முஸ்லீம்கள் படுகாயத்துக்குள்ளானார்கள் ஹூசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மஞ்சத்தொடுவாய் மீரா ஐம்மா பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதங்களுடன் சென்ற புலிப்பயங்கரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்களை துடிக்கப்பதைக்க சுட்டுகொன்றது. புலித்தலமையின் நேரடி உத்தரவின்பேரில் இந்தக்கொடூரம் அரங்கேறியது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி இந்தக்கொடூரம் அரங்கேற்றப்பட்டது.
மப்றூக்
நாளை மறுதினம் (16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை) முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவு நாளாகும்! மறக்கவே கூடாத அவரை சற்றே திரும்பிப் பார்க்கிறது இந்தக் கட்டுரை!!
சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களுக்கென்று ஓர் தனித்த அடையாளத்தைப் பெற்றுத் தந்தது முஸ்லிம் காங்கிரஸ் என்பதில் பெருத்த முரண்பாடுகள் இருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு ஒரு சமூகத்தின் முகவரியாக மு.கா.வை உயரங்களுக்கு வளர்த்தெடுத்துச் சென்றவர் அதன் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் என்பதிலும் மாற்றுக் கருத்துகள் இருக்க முடியாது! சாதாரண மனித பலவீனங்களோடு முஸ்லிம் சமூகத்தை தன் தோளில் சுமந்த அசாதாரண மனிதர் அஷ்ரப்! அவரின் கனவுகளில் பெரும்பான்மையானவை முஸ்லிம் சமூகத்தை எல்லாத்துறைகளிலும் அடுத்த படிநிலைக்கு எப்படி உயர்த்துவது என்பதாகவே இருந்தது.
‘விடுதலை’ காஷ்மீர் மக்களின் தற்போதைய தலையாய விருப்பம் இது ஒன்று மட்டுமே. 60 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களது மனதில் கனன்று கொண்டிருந்த அந்த சுடர் இன்று கொளுந்துவிட்டு எரியத் தொடங்கி இருக்கிறது. இந்திய அரசு இனிமேலும் விடுதலையை மறுப்பது நயவஞ்சகம்.
உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் 5,00,000 ஆயுதமேந்திய ராணுவ வீரர்கள் தங்களைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கணமும் ‘வாழ்வா, குண்டடிப்பட்டு சாவா’ என்று கழியும் பயங்கரமாகன வாழ்க்கையை உதறித் தள்ள காஷ்மீரிகள் ஆக்ரோஷமாக கைகளை உயர்த்தத் தொடங்கியுள்ளனர். இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காலத்தில் காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறிய கருத்துக் கணிப்பு நடத்தப்படும் என்று ஐ.நா.வில் நேரு அளித்து, நிறைவேற்றப்படாத வாக்குறுதி இரண்டு தலைமுறைகளாக அந்த மக்களின் நெஞ்சில் ஊசிகளைப் போல குத்திக் கொண்டிருந்தது.
கிழக்கிற்கு விஜயம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்தமையினூடாக தமது விஜயத்தின் பிரதான நோக்கம் நிறைவேறவில்லை என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர் குழு தெரிவித்துள்ளது. தமது குழுவினருக்கு திருகோணமலைக்குச் செல்ல அனுமதி வழங்குவதாக அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்த போதிலும் இறுதி நேரத்தில் அனுமதி மறுத்ததாகப் பாராளுமன்ற உறுப்பினர் குழு குற்றஞ் சாட்டியுள்ளது. இதன் காரணமாக தமது குழு விமான நிலையம்வரை சென்று மீண்டும் திரும்ப வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டதாகக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் இந்தப் பொறுப்பற்ற செயலினால் பல மாதங்களாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை விஜயம் பயனற்றதாக அமைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
யு.என்.பி.அறிக்கை.
கையடக்கத் தொலைபேசி மற்றும் சி.டி.எம்.ஏ. ஆகிய தொலைபேசிகளை பாவனைக்குட்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சட்ட திட்டங்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா இது அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலென்றும் குற்றம் சாட்டியுள்ளார்.பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியடைந்துள்ள இக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு கட்டுப்பாடுகள் ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும். இந்நாட்டு மக்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் கையடக்க மற்றும் சி.டி.எம்.ஏ. தொலைபேசிகளைப் பாவித்து வருகின்றனர்.இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தொலைபேசி பாவனை தொடர்பான சட்ட விதிகள் உலகில் எந்தவொரு நாடுகளிலும் இல்லையென சுட்டிக்காட்டப்பட வேண்டியது அவசியமாகும்.
ஏ.யு.எல்.எம்.உறாரிஸ்
கிழக்கு மாகாணம் கருணா அம்மானாலும் உயர் நீதிமன்றத்தாலும் பிரிக்கப்பட்டதன் ஊடாக கிழக்கில் இடம் பெற்ற தேர்தல்களின் ஊடாக கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களுக்கு ஒரு அரசியல் எதிர்காலம் பிறந்திருக்கின்றது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு யாழ் மேலாதிக்க புலித் தலைமைகளாலும் முஸ்லிம் மக்கள் கொழும்பு சந்தர்ப்பவாத தலைமைகளாலும் ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்டு வந்துள்ளதை வரலாற்றை ஊன்றி அவதானித்தால் புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு வாய்ப்பாக கிழக்கு மண்ணை கிழக்கு மக்களே ஆளும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.இந்த பொன்னான சந்தர்ப்பத்தை கிழக்கு மக்களுடன் இணைந்து கிழக்கு தமிழ் முஸ்லிம் அரசியல் சக்திகளும் பயன்படுத்தி கிழக்கைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.வடக்கு புலி மேலாதிக்கமும் கொழும்பு ; சிங்கள பேரினவாதமும் கிழக்கை மீண்டும் ஆக்கிரமிக்கவும் கிழக்கின் மிகப் பெரிய இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.இந்த மாகாண சபைத் தேர்தலின் போது கிழக்கு மண்ணை அபகரிக்க பச்சை நிற சிங்கள பேரினவாதமும் யாழ் புலி மேலாதிக்கமும் முஸ்லிம் காங்கிரஸை பயன்படுத்த தி;ட்டமிட்டு செயற்பட்டிருந்தன.அதே போன்று அரச சிங்கள பேரினவாதம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை பயன்படுத்தி தனது இலக்கை அடைந்து கொள்ள களத்தில் இறங்கி வெற்றியடைந்துள்ளது.
முன்னுரை
இலங்கையின் ஒன்பது மாகாண நிர்வாக பிரிப்புகளில் ஒன்றே கிழக்கு மாகாணம் ஆகும். இங்கு மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை பிரதேசங்களை மையமாக இருத்தி உருவாகியுள்ள கிளர்ச்சியானது விரிவடைந்து வருகிறது. இது 1948 இல் இருந்து சுதந்திர இலங்கையின் பெயரிலும் கடந்த சுமார் (30)முப்பது வருடகாலமாகதமிழீழத்தின் பெயரிலும் கிழக்கிலங்கை மக்கள் இழந்து வந்திருக்கும் அடிப்படை மானிட உரிமைகளையும், ஜனநாயக சகவாழ்வையும் மீட்டெடுப்பதற்கான ஒரு வலுவான கோரிக்கையை அடிப்படையாக கொண்டது. ஆகவே இன மேலாதிக்க அரசிடமிருந்தும் பிரதேச மேலாதிக்க தமிழ்த் தலைமைகளிடமிருந்தும் ஜனநாயகத்தை மீட்பதற்கான ஒரு போராட்டமான இக்கிளர்ச்சியை நாம் ஒரு முகப்பட்டு வரவேற்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும், பங்களிக்க வேண்டும் ஒவ்வொரு மனிதனும் தனது பிரசவத்திலிருந்தே இவ்வுலகில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரித்துடையவன்.
| February 13, 2011, 12:03 pm |







