மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் திகதி சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. இந்த வரவு செலவுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலப் பிரேரணை அக்டோபர் மாதம் 9 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்படும்.
வரவுசெலவுத்திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நவம்பர் ஆறாம் திகதி வாசிப்பார்.
இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நவம்பர் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இடம் பெறும். இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 15 ஆம் திகதி இடம் பெறும்.
குழு நிலைவிவாதம் டிசம்பர் எட்டாம் திகதி வரை நடைபெற்று எட்டாம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறும் |