Untitled Document
Untitled Document

சூரிச் நகரில்எமது இயக்க உறுப்பினருக்கு எதிரான கொலை வெறித் தாக்குதலை சிறீ-ரெலோ வன்மையாகக் கண்டிக்கிறது..... நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.,ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் ஏற்பாடு.....முஸ்லிம்களின் பேரம் பேசும் அரசியல் தோல்வி கண்டு வருகிறது.......நவம்பர் 6ல் பட்ஜெட் கவிழுமா மகிந்த அரசு?... கையடக்க தொலைபேசி பாவனை தொடர்பான புதிய ஒழுங்கு விதி மனித உரிமை மீறல்

Untitled Document

 

 

 

 

 

 

 

 

 

 

கையடக்க தொலைபேசி பாவனை தொடர்பான புதிய ஒழுங்கு விதி மனித உரிமை மீறல்
 

யு.என்.பி.அறிக்கை.
கையடக்கத் தொலைபேசி மற்றும் சி.டி.எம்.ஏ. ஆகிய தொலைபேசிகளை பாவனைக்குட்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சட்ட திட்டங்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா இது அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலென்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியடைந்துள்ள இக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு கட்டுப்பாடுகள் ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும்.
இந்நாட்டு மக்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் கையடக்க மற்றும் சி.டி.எம்.ஏ. தொலைபேசிகளைப் பாவித்து வருகின்றனர்.
இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தொலைபேசி பாவனை தொடர்பான சட்ட விதிகள் உலகில் எந்தவொரு நாடுகளிலும் இல்லையென சுட்டிக்காட்டப்பட வேண்டியது அவசியமாகும்.
தொலைபேசி சட்டம் எனும் விலங்கைப் போட்டு அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற வகையில் செயற்படுவது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
இவ்வாறான சட்டதிட்டங்கள் அமுல்ப்படுத்தப்படும் போது எந்தவகையிலும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது. அத்துடன் பாதுகாப்புக் கடமைகளை கிரமமாக மேற்கொள்ள முடியாது.
இவ்வாறான கட்டுப்பாடுகள் மூலம் வேறு குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு அதிகளவு வாய்ப்புள்ளது. இதற்கு தக்க பதிலைக் கூற வேண்டியது அரசின் பொறுப்பும் கடமையுமாகும்.
எனவே, கையடக்க மற்றும் சி.டி.எம்.ஏ. தொலைபேசிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களை நீக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன் இதற்கு உரிய பதிலை அரசு தெரிவிக்க வேண்டும

 
Updated 03-08-08   <<Feed Back >>   <<Tell Your Friend >>  
 
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.