Untitled Document
Untitled Document

சூரிச் நகரில்எமது இயக்க உறுப்பினருக்கு எதிரான கொலை வெறித் தாக்குதலை சிறீ-ரெலோ வன்மையாகக் கண்டிக்கிறது..... நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.,ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் ஏற்பாடு.....முஸ்லிம்களின் பேரம் பேசும் அரசியல் தோல்வி கண்டு வருகிறது.......நவம்பர் 6ல் பட்ஜெட் கவிழுமா மகிந்த அரசு?... கையடக்க தொலைபேசி பாவனை தொடர்பான புதிய ஒழுங்கு விதி மனித உரிமை மீறல்

Untitled Document

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிழக்கிற்குச் செல்ல அரசாங்கம் அனுமதி மறுத்தமை நியாயமற்றது – ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றக் குழு
 

கிழக்கிற்கு விஜயம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்தமையினூடாக தமது விஜயத்தின் பிரதான நோக்கம் நிறைவேறவில்லை என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர் குழு தெரிவித்துள்ளது.
தமது குழுவினருக்கு திருகோணமலைக்குச் செல்ல அனுமதி வழங்குவதாக அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்த போதிலும் இறுதி நேரத்தில் அனுமதி மறுத்ததாகப் பாராளுமன்ற உறுப்பினர் குழு குற்றஞ் சாட்டியுள்ளது. இதன் காரணமாக தமது குழு விமான நிலையம்வரை சென்று மீண்டும் திரும்ப வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டதாகக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் இந்தப் பொறுப்பற்ற செயலினால் பல மாதங்களாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை விஜயம் பயனற்றதாக அமைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 
குண்டசாலையில் கட்டிடங்கள் உடைக்கப்படுகின்றன- ரவூவ் ஹக்கீம்
- சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் விக்டோரியா கொல்ப் நிலையத்திற்கு விஜயம் செய்யவுள்ளமையால் அதிகாரிகள் கண்டி குண்டசாலையிலுள்ள கட்டிடங்களையும், வீடுகளையும் உடைக்க ஆரம்பித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூவ் ஹக்கீம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஆறு மாதமாக சம்பளப் பாக்கி
 
சமீபத்தில் ஆசியக் கோப்பையில் வெற்றிவாகை சூடிய, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களின் முந்தைய ஒப்பந்தம் பிப்ரவரிமாதத்தில் முடிவுக்கு வந்தது. கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் பொறுப்பேற்றதாலும், அணி வீரர்கள் வெளிநாடுகளுக்கு விளையாட சென்றிருந்ததாலும் இந்த காலதாமதம் ஏற்பட்டதாக கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.
 
Updated 03-08-08   <<Feed Back >>   <<Tell Your Friend >>  
 
 
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.