Untitled Document
Untitled Document

சூரிச் நகரில்எமது இயக்க உறுப்பினருக்கு எதிரான கொலை வெறித் தாக்குதலை சிறீ-ரெலோ வன்மையாகக் கண்டிக்கிறது..... நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.,ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் ஏற்பாடு.....முஸ்லிம்களின் பேரம் பேசும் அரசியல் தோல்வி கண்டு வருகிறது.......நவம்பர் 6ல் பட்ஜெட் கவிழுமா மகிந்த அரசு?... கையடக்க தொலைபேசி பாவனை தொடர்பான புதிய ஒழுங்கு விதி மனித உரிமை மீறல்

Untitled Document

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முஸ்லிம்களின் பேரம் பேசும் அரசியல் தோல்வி கண்டு வருகிறது.
 

பஸீர் சேகுதாவுத்.

நாக்கை அறுத்துக் கொடுத்து சீனியை வாங்கும் அரசியல் செய்தவரல்ல மர்ஹும் அஷ்ரஃப் சமுதாயத்திற்கு எது தேவை என்பதை துல்லியமாக அறிந்து தெரிந்து அதற்கேற்ற வகையில் முஸ்லிம்களுக்கான அரசியல் நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்துச் சென்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் இவ்வாறு தெரிவித்தார்.
பெரும் தலைவரின் மறைவின் பின்னர் அரசியல் முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசும் சக்தி தோல்வி கண்டுள்ளதா? எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
மேற்படி கருத்தரங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஸ்ரஃபின் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் ஏறாவூர் ஜாமிஉல் அக்பர் ஜும் ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
பஷீர் சேகுதாவூர் தனதுரையில் மேலும் குறிப்பிடுகையில்இ முஸ்லிம்களிடையே இன்று பல்வேறு கட்சிகள் தோற்றம் பெற்றுள்ளதால் பேரம் பேசி தமது சமுதாயத்தின் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை தோன்றி இருக்கிறது. இதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசுதல் சக்தியும் தோல்வி கண்டிருக்கின்றது.
முஸ்லிம் அரசியல் வாதிகளும் கட்சிகளும் ஒன்றாக இணையவில்லையானால் முஸ்லிம் சமுதாயத்திற்கான எவ்வித முன்னேற்றத்தையும் எதிர்காலத்தில் கண்டுகொள்ள முடியாமல் போய்விடும்.
சிங்கள பேரினவாதம் மாறிமாறி முஸ்லிம்களை தமது கைக்குள் போட்டுக் கொண்டு வருகிறது. சிறுசிறு இலாபங்களுக்காக முஸ்லிம் அரசியல் வாதிகள் அதற்குள் அகப்படும்போது முஸ்லிம்களின் அரசியல் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்பதை இக் கட்டத்தில் நான் பிரகடனம் செய்கிறேன்.
இலங்கையில் பேரம் பேசும் அரசியலை முதன் முதலில் முன்னெடுத்தது இடதுசாரிக் கட்சிகளே ஆகும். தொழிலாளர்களின் நன்மை கருதி அதனை அக் கட்சிகள் செய்தன. தமிழர்களின் அரசியலில் நீலன் திருச்செல்வமோஇ குமார் பொன்னம்பலமோ தமிழர் விடுதலைக் கூட்டணியோ தற்போதிருக்கும் தமிழ்க் கூட்டமைப்போ பேரம் பேசும் அரசியலை செய்தது கிடையாது.
ஜே.வி.பி. யும் தொண்டமானின் அரசியல் கட்சியும் பேரம் பேசும் அரசியலை நடத்தி இருக்கின்றன. முஸ்லிம்கள் எதிர்காலத்திலும் பேரம் பேசும் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அது எந்த இனத்திற்கும் எதிரானது அல்ல என்பதையும் அனைத்து இன மக்களும் புரிந்து கொள்ளுதல் வேண்டும் என்றார்.

 

 
Updated 26-09-08   <<Feed Back >>   <<Tell Your Friend >>  
 
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.