Untitled Document
Untitled Document

சூரிச் நகரில்எமது இயக்க உறுப்பினருக்கு எதிரான கொலை வெறித் தாக்குதலை சிறீ-ரெலோ வன்மையாகக் கண்டிக்கிறது..... நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.,ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் ஏற்பாடு.....முஸ்லிம்களின் பேரம் பேசும் அரசியல் தோல்வி கண்டு வருகிறது.......நவம்பர் 6ல் பட்ஜெட் கவிழுமா மகிந்த அரசு?... கையடக்க தொலைபேசி பாவனை தொடர்பான புதிய ஒழுங்கு விதி மனித உரிமை மீறல்

Untitled Document

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சூரிச் நகரில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.
ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் ஏற்பாடு.
 

இவ் வருட நோன்புப் பெருநாள் தினம் சுவிஸில் வாழும் இலங்கையைச் சேர்ந்த 100 க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

30.09.2008ம் திகதி காலை 9.30 மணிக்கு பெருநாள் தொழுகையுடன் ஆரம்பமான நிகழ்வுகள் பெருநாள் குத்பாவுடன் 11.00 மணிக்கு நிறைவு பெற்றது. பெருநாள் தொழுகையும், குத்பாவும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஸல்மான் பாரிஸ் (நளீமி) அவர்களால் நடாத்தப்பட்டது.

பெருநாள் தொழுகைக்கு முன்பாக குடும்பங்களிடையை சேகரிக்கப்பட்ட சுமார் 3 லட்சம் ரூபா ஸக்காதுல் பித்ர் நிதி இலங்கையில் பொல்காஉறவல்ல பிரதேசத்தில் வாழும் 270 ஏழைக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

அடுத்த நிகழ்வாக ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் செயலமர்வு இடம் பெற்றது. இதில் இந்த வருடம் தகவல் நிலையம் இலங்கையிலும்,சுவிஸிலும் செய்த நலன்புரி வேலைத் திட்டங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் எதிர்கால செயல் திட்டங்களும் ஆராயப்பட்டது. இதில் சூரிச் நகரில் இலங்கை முஸ்லிம்களுக்கான பள்ளிவாசல் ஒன்றை அமைக்கும் விடயம் முக்கிய வேலைத் திட்டமாக அடுத்த வருடம் நடைபெற வேண்டும் என ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அடுத்த நிகழ்வாக இலங்கை உணவு வகைகளைக் கொண்ட பகல் போசணத்துடன் சிறுவர்க ளுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்று பெருநாள் பரிசுப் பொருட்களும் வழங்கப் பட்டன.இந் நிகழ்வுகள் அனைத்தும் ஐரோப்பிய இஸ்லாமிய நிலையத்தின் தலைவர் உறனீப் முஉறம்மத் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாட்டுக்குழுவினால் கனகச்சிதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தகவல் - நிஸாத் கரீம் அலிஉதுமாலெப்பை அறோ மாநிலம்.

 
 
 
 
Updated 30-09-08   <<Feed Back >>   <<Tell Your Friend >>  
 
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.