கேள்வி:- காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலை உங்களின் தலைமையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறதே இது உண்மையா? இது குறித்து??
கருணாஅம்மான்:- இது அபத்தமான குற்றச்சாட்டு சகோதர இனமக்களுக்கெதிரான எத்தாக்குதலும் நாம் என்றுமே மேற்கொண்டதில்லை. இதனை என்னால் உறுதியாகக் கூற முடியும். 1990 ஆம் ஆண்டு பிரேமதாச அரசுடனான தேனிலவுக் காலம் முடிவுக்கு வந்த பின் மோதல்கள் ஆரம்பமான சமயம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதற்காக பாரிய இராணுவ நடவடிக்கையொன்றிற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. இதனால் அரசாங்கத்தின் கவனத்தை திசைதிருப்ப கிழக்கில் பாரிய சகோதரப் படுகொலைக்கு பிரபாகரன் உத்தரவிட பொட்டனின் நேரடிக் கண்காணிப்பிலேயே காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலையும்இ ஏறாவூர் படுகொலையும் எல்லைப்புற சிங்கள மக்கள் மீதான படுகொலைகளும் இடம் பெற்றன. படுகொலைகள் இடம்பெற்ற பின் பொட்டன் இதனை நேரடியாகவே என்னிடம் கூறினார். ஆனால் அக்கொடூரங்கள் இடம்பெற்ற சமயம் நானும்
அவ்வியக்கத்தில் இருந்தேன் என்பதற்காக வேதனையடைகிறேன்.
கேள்வி:- வடகிழக்கு முஸ்லிம் மக்கள் குறித்து உங்கள் கருத்து?? கருணாஅம்மான்:- முஸ்லிம் சகோதரர்கள் தொடர்பான எமது நிலைப்பாடு தெளிவானதும்இ உறுதியானதும் ஆகும். முஸ்லிம் மக்கள் எம் சகோதர மக்கள் அவர்கள் தமது தாயக பூமியில் அச்சமற்றஇ நிம்மதியான அனைத்து அடிப்படை உரிமைகளுடன் வாழ வேண்டும். ஒரு இனத்தின் தனித்துவங்களும்இ அரசியல் அபிலாசைகளிலும் இன்னொரு இனம் குறுக்கீடு செய்யக் கூடாது. முஸ்லிம் மக்களின் சுயநிர்ணய உரிமைகளையும்இ அரசியல் அபிலாசைகளையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். முஸ்லிம்கள் மட்டுமன்றி கிழக்கில் வாழ்கின்ற சிங்கள மக்களுக்கான அரசியல் அபிலாசைகளையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். கிழக்கில் சிங்களஇ தமிழ்இ முஸ்லிம் மக்களாகிய மூவின மக்களும் வாழ்கின்றனர். இம்மக்கள் புரிந்துணர்வுடனும்இ நிம்மதியாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும். இனப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் போது அது அனைத்தின மக்களினதும் அரசியல் அபிலாசைகளைப் உறுதி செய்யக் கூடியதாகவும் அனைவரையும் திருப்திப்படுத்துவதாயும் இருக்க வேண்டும். பேச்சுவார்த்தை மேசையில் முஸ்லிம்களின் தனித்தரப்பு பிரசன்னத்திற்கு நாம் ஆதரவு தெரிவிக்கிறோம். எம்மக்களுக்குண்டான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு. |