Untitled Document
Untitled Document
இந்து பயங்கரவாதமே இஸ்லாமிய பயங்கரவாதமாகின்றது ....ஊடகங்களில் முஸ்லீம்கள் - ச.பாலமுருகன......இலங்கை பிரஜைகள் ஒவ்வொருவரினதும் முதல் எதிரி பயங்கரவாதமே........கருணா அம்மானுடன் அதிரடி இணையம் நேரடிச் செவ்வி முஸ்லிம்களின் படுகொலை புலிகள் திட்டமிட்டு நிறைவேற்றியது, முஸ்லிம்கள் பற்றிய கேள்விக்கு பதில்...

Untitled Document

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

யாரும் நீதிக்கு மேலானவர்கள் அல்லர்'
உயர்நீதிமன்றத்தின் முடிவு புதிய சட்டத்திருப்புமுனை!!
உதயன்(ஆசிரியர் தலையங்கம்

 

இலங்கையின் சட்டத்துறை வரலாற்றில் மிக முக்கியமான தீர்மானம் ஒன்றை இலங்கையின் உயர்நீதிமன்றம் நேற்றுமுன்தினம் எடுத்திருக்கின்றது.நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு எதிரான முக்கிய வழக்கு ஒன்றை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதன் மூலம் புதிய சட்டவாதஇ விவாதத்துக்கான அத்தியாயத்தை உயர்நீதிமன்றம் திறந்து விட்டிருக்கின்றது.இலங்கை அரசமைப்பின்படிஇ ஜனாதிபதிப் பதவியை வகிக்கின்ற ஒருவர் அந்தப் பதவி முறையில் அல்லது தனிப்பட்ட முறையில் செய்த அல்லது செய்யாமல் விட்ட கருமம் தொடர்பாக அவர்மீது வழக்குத் தொடுத்தலோஇ தொடர்ந்து வழக்கு நடத்தலோ ஆகாது. அரசமைப்பின் 35(1) பிரிவு இதனைத் தெளிவாகவும் சந்தேகத்துக்கு அப்பாற் படவும் தெரிவித்துள்ளது.ஆக ஜனாதிபதி தன்வசம் வைத்திருக்கும் ஓர் அமைச்சின் அமைச்சர் என்ற முறையில் அந்த அமைச்சருக்கு எதிராகவோ ஜனாதிபதி உடற் சுகவீனம்இ மனச்சுகவீனம் ஆகியவை காரணமாகப் பணியாற்ற இயலாமல் இருக்கிறார்இ அரசமைப்பை வேண்டுமென்றே மீறியுள்ளார்இ தேசத் துரோகம் புரிந்துள்ளார்இ பதவித் துஷ்பிரயோகம் உள்ளடங்கிய துர்நடத்தை மற்றும் ஊழலில் ஈடுபுடு;டுர்ரு;ஒழுக்கக் கேட்டுக்கு வழி செய்யும் தவறிழைத்தார் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நாடாளுமன்றத் தீர்மானம் மூலம் அது குறித்து விசாரிக்குமாறு கேட்கப்பட்டாலோ அவரது ஜனாதிபதி தெரிவு தொடர்பான தேர்தல் ஆட்சேபனை வழக்கு ஒன்றின்போதோ மட்டுமே ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறமுடியும்என இலங்கை அரசமைப்பு விளக்குகின்றது. ஆனால் அரசமைப்பின் 17 ஆவது திருத்தத்தின் கீழ் அர சமைப்புக் கவுன்ஸிலை ஸ்தாபிக்க ஜனாதிபதி தவறி விட்டார் என்று தெரிவித்துஇ நேரடியாக அவரை எதிர் மனுதாரராகக் குறிப்பிட்டுத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இரண்டை நேற்று முன்தினம் பரிசீலித்த உயர்நீதிமன்றம் அந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றதன் மூலம் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு ஒன்றை விசாரிக்கும் தீர்மானத்தை எடுத்துப் புதிய சட்ட வரலாற்றை ஆரம்பித்து வைத்திருக்கின்றது. இந்த வழக்கைப் பரிசீலித்த பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா இலங்கைத் தேசத்தில் 'யாரும் நீதிக்கு மேலானவர்கள் அல்லர்' என்று நீதிமன்றத்தில் பகிரங்கமாகக் கருத்தும் வெளியிட்டிருக்கின்றார்.நாட்டின் உயர் சட்டம் அரசமைப்புத்தான். அந்த அரசமைப்பு வழங்கிய கட்டுமட்டில்லாத அதிகாரம் மூலமே இலங்கை ஜனாதிபதிஇ நாட்டில் நிறைவேற்று அதிகாரம் மிக்க முதல் பிரஜையாகக் கணிக்கப்படும் சிறப்பைப் பெற்றிருக்கின்றார்.

அப்படி நாட்டின் உயர் சட்டமான அரசமைப்பு மூலம் அதிகாரத்தைப் பெற்றுஇ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடாது என்ற சிறப்புச் சலுகையை சட்ட விலக்களிப்பை சுவீகரித்திருக்கும் ஜனாதிபதிஇ அதே அரசமைப்பின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தாமல் உதாசீனம் செய்வாராயின்இ அந்த அரசமைப்பின் கீழ் தமக்குள்ள விசேட சிறப்பு சலுகையையும் பயன்படுத்தத் தகுதியற்றவராகவே ஆகின்றார்.இத்தகைய காரணத்தை மனதில் கொண்டுதான்இ ஜனாதிபதிக்கு எதிரான மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றதோ என்னவோ தெரியவில்லை.ஆனாலும் எதுஇ எப்படியென்றாலும் நாட்டின் சட்டத்துக்கு மேற்பட்டவராக யாரும் கருதப்பட மாட்டார்கள் என்று பிரதம நீதியரசர் பகிரங்கமாக உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட கருத்துஇ முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படுமானால் செயலுருப்பெற வைக்கப்படுமானால் பல அநியாயங்களும்இ அநீதிகளும் தொடராமல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது நிச்சயம். அரசமைப்பின் 17 ஆவது திருத்தப்படி அரசமைப்புக் கவுன்ஸில் ஒன்று நிறுவப்படவேண்டும். இந்த அரசமைப்புக் கவுன்ஸில் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுஇ சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுஇ சுயாதீன நீதிச்சேவை ஆணைக்குழுஇ சுயாதீன பொதுச்சேவை ஆணைக்குழு போன்றவற்றை நியமிக்கும்.இந்த சுயாதீன ஆணைக்குழுக்களே முறையே தேர்தல் ஆணையாளர்இ பொலிஸ்மா அதிபர்இ உயர் நீதித்துறை அதிகாரிகள் நீதியரசர்கள்இ நாடாளுமன்ற செயலாளர் நாயகம் உட்படப் பொதுச் சேவை உயரதிகாரிகள் போன்றோரின் நியமனங்கள்இ தேர்தல் பொலிஸ் நீதி பொதுச் சேவை தொடர்பான நியாயமான செயற்பாடுகள் போன்றவற்றைக் கவனிக்கும்.இவ்விடயங்களில் அரசினதும் ஜனாதிபதியினதும் நேரடித் தலையீடும்இ அதிகாரச் செல்வாக்கும்இ அரசியலாதிக்கமும் ஒழிக்கப்படுவதற்கும் நல்லாட்சிக்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தவுமே இந்த அரசமைப்பு ஒழுங்கு விதிகள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அரசமைப்பின் 17 ஆவது திருத்தத்தின் கீழான அரசமைப்புக் கவுன்ஸிலைக் கடந்த மூன்று வருடங்களாக அமைக்காமல் அரசமைப்பின் கீழ் தமக்கு ஒதுக்கப்பட்ட அக்கடமையை நிறைவு செய்யாமல் இழுத்தடிப்பதன் மூலம்இ மேற்படி நீதிஇ தேர்தல்இ பொலிஸ்இ பொதுச்சேவை போன்ற துறைகளின் உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமித்து மற்றும் அத்துறைகளைத் தனது இஷ்டப்படி வழிநடத்தும் அதிகாரத்தைத் தமது கைகளுக்குள் வைத்துக் கொண்டுள்ளார் ஜனாதிபதி.இத்தகைய அரசமைப்புப் பொறுப்பை நிறைவேற்றத்தவறியமைக்காக ஜனாதிபதியை எதிர்மனுதாரராகக் குறிப்பிட்டுத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஜனாதிபதிக்கு 'நோட்டீஸ்' பிறப்பிக்க முடிவு செய்துஇ உயர்நீதிமன்றம் எடுத்திருக்கும் இத்தீர்மானம்இ இந்த வரிசையில் வெள்ளம் எனப் பெருக்கெடுக்கக்காத்திருக்கும் பல வழக்குகளுக்கான மடைவாசலைத் திறந்து விட்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கதாகும்.

 

 

 
Updated 01-08-08   <<Feed Back >>   <<Tell Your Friend >>  
 
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.