Untitled Document
Untitled Document
இந்து பயங்கரவாதமே இஸ்லாமிய பயங்கரவாதமாகின்றது ....ஊடகங்களில் முஸ்லீம்கள் - ச.பாலமுருகன......இலங்கை பிரஜைகள் ஒவ்வொருவரினதும் முதல் எதிரி பயங்கரவாதமே........கருணா அம்மானுடன் அதிரடி இணையம் நேரடிச் செவ்வி முஸ்லிம்களின் படுகொலை புலிகள் திட்டமிட்டு நிறைவேற்றியது, முஸ்லிம்கள் பற்றிய கேள்விக்கு பதில்...

Untitled Document

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பிரச்சாரக் கூற்று

 

நாம் இன்று எங்கும் வன்முறையையே காண்கின்றோம். குறிப்பாக பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள், ஏழைகள், சிறுபான்மையினர், ஊடகவியளாளர்களுக்கெதிராகவும் மற்றும் சூழலுக்கெதிராகவும் கூட வன்முறைகள் இடம்பெறுவதைக் காண்கின்றோம். இலங்கையராகிய நாம் இவ்வகையான கொடூரங்களுக்கு மத்தியில் செயலற்றிருக்கின்றோம். முதலில் செயலில் இறங்கவேண்டிய பொறுப்பு எம்முடையதாக இருக்க, நாம் ஏன் மற்றவர்களை எதிர்பார்கின்றோம்?

இந்நாட்டுப் பிரஜைகளாகிய நாம் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்து வன்முறைக்கெதிராக துணிகரமான நடவடிக்கைகளைத் தைரியமாக எடுப்பதுடன் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள முடியாதவர்களுக்குத்தோள் கொடுத்து உதவி செய்வதற்கு சரியான நேரம் வந்துவிட்டது, மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான சக்தி உங்களிடமுண்டு என நம்புவதன் மூலமும் எங்களுடன் இணைந்து அகிம்சை ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுவதினூடாக இம் மாற்றத்தை உருவாக்கவேண்டுமென வேண்டுகின்றோம்.

நோக்கம், சிந்தனை, செயல் என்பவற்றினூடாக அகிம்சையின் விழுமியங்களை கடைப்பிடிப்பதற்கான நேரிய ஒரு முயற்சியே எமது சமுதாயத்தை மாற்றியமைத்து அமைதியான ஒரு தேசத்தை நிறுவுவதற்கான சக்திமிக்க ஒரு கருவியாகும் என்பதே நாங்கள் இப் பிரசாரத்தின் ஊடாக கொடுக்கவிருக்கும் ஒரு எளிய செய்தியாகும்.
வன்முறையை மறுதலிப்போம், வாழ்வை மதிப்போம்என்ற பிரசாரத்தின் நோக்கமானது சமுதாயத்தில் அகிம்சை ரீதியாக உங்களை அர்ப்பணிக்கும் பொருட்டு, உங்களுக்கு வேண்டிய மனவலிமை, விரிவாற்றல் மற்றும் இரக்க குணத்தை உருவாக்க உங்களை ஈடுபடுத்துவதாகும். இது எவருக்குமெதிராக செயற்படு;ம் குறிக்கோளைக் கொண்டிராது. கருணையின் பண்புகள் எல்லோராரிலும் புதைந்து காணப்படுகின்றது. எங்கள் நோக்கமானது எங்கள் நாட்டு பிரஜைகளிடத்தும் தொலைதேசத்தில் உள்ளவர்களிடத்தும் அகிம்சையுடன் கூடிய பலத்தை உருவாக்க வழிசெய்வதாகும்.

இப்பிரச்சாரமானது அகிம்சை ரீதியான ஓர் உறுதிப்பாட்டை ஒவ்வொருவரும் எடுப்பதற்கு உரிய ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. இது நீதி, சகிப்புத்தன்மை, உயிருக்கான மதிப்பு என்பவற்றுக்கான அர்ப்பணிப்பை தூண்டுகின்றது. வன்முறையால் பாதிப்புற்றவர்களையும் அதனால் துன்பத்தை அனுபவித்த எம் நாட்டவர்களையும் ஒரு கணம் நினைந்து அவர்களை கௌரவிப்போம்.
இது ஒரு கூட்டுமுயற்ச்சியாகும். தொழில் சங்கங்கள், சமய ஸ்தாபனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் வர்த்தக சமூகம் போன்ற அனைத்து அமைப்புகளையும், இது சென்றடைய வேண்டும் என்பதே எமது அவா. விழிப்புணர்வு, கல்வி, சட்ட உதவி மற்றும் பாதுகாப்பு என்னும் நான்கு சாதனங்கள் வழியாக மக்களுக்கு வலுவூட்டவும் அறிவூட்டவும் முயல்வோம்.

மூன்று வருடங்களுக்கு தொடர்ந்து நடாத்தப்பட எதிர்பார்க்கும் இப்பிரசாரமானது நிகழ்வுகள், செயலமர்வுகள், கருத்தரங்குகள், இளையோர் கழக விழிப்புணர்வுகள், மற்றும் குறிப்பிட்ட தொனிப்பொருட்களிலான பல்வேறு நடைமுறைத் தலையீடுகள் என்பவற்றை ஏற்பாடு செய்யும். உதாரணம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான வன்முறை அல்லது பணித்தளத்தில் ஏற்படும் வன்முறை.
ஒன்றித்திருந்தால் மட்டுமே எம்மால் மாற்றத்தைக்கொண்டுவர முடியும். எனவே ஒன்றாக இணைந்து எம் சமுதாயத்தைப்பற்றியும் எம்மைப்பற்றியும் சிந்திப்போம். பிணக்குகளையும் வேறுபாடுகளையும் தீர்த்துக்கொள்ளும் வழிமுறையான உரையாடல் மற்றும் சமரசம் என்பவற்றிற்கு எம்மை அர்ப்பணித்து வன்முறையை கைவிடுவோம். தனது பல்வகைமையை கொண்ட, பல்லினத்துவம் வாய்ந்த, நீதியான ஒரு பல்லினத்துவ சமுதாயத்தை நோக்கியதான எமது அர்ப்பணிப்பை காண்பிப்போமாக.

நீங்கள் எவ்வாறு உதவமுடியும்;: எம்முடன் இணைந்துகொள்வதன் மூலமாகவும் எமது பிரசாரத்திற்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குவதன் மூலமாகவும் அஹிம்சை மட்டில் உங்களது தனிப்பட்ட சொந்த அர்ப்பணிப்பை கொண்டிருப்பதன் மூலமாகவும் நீங்கள் எங்களுக்கு உதவ முடியும். எமது நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்பதன் மூலமாகவும் உங்கள் ஆதரவை எமக்கு வழங்குவதன் மூலமாகவும் உங்கள் சொந்த நிகழ்ச்சிகளை இதன் பொருட்டு அமைத்து கொள்வதன் மூலமாகவும் அல்லது இவ்வார்த்தையை ஒப்புவதன் மூலமாகவும் இதில் ஈடுபடுங்கள்.

எமது நாட்டை மேலும் சிறந்ததொரு இடமாக மாற்ற சாதகமான நடவடிக்கையை எடுப்பதில் நம்முடன் இணையுங்கள். வன்முறையை மறுதலிப்போம், வாழ்வை மதிப்போம்என்ற பிரசாரமானது மாற்றம் ஏற்படும்வரை தொடரும். இம்மாற்றம் உங்களிலிருந்து இப்போதே ஆரம்பிக்கின்றது.
மேலதிக விபரங்களுக்கு

www.notoviolence.lk என்னும் இணையத்தளத்தை நாடுங்கள் அல்லது respectlifesrilanka@gmail.com இற்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

 
Updated 10-10-08   <<Feed Back >>   <<Tell Your Friend >>  
 
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.