Untitled Document
Untitled Document
இந்து பயங்கரவாதமே இஸ்லாமிய பயங்கரவாதமாகின்றது ....ஊடகங்களில் முஸ்லீம்கள் - ச.பாலமுருகன......இலங்கை பிரஜைகள் ஒவ்வொருவரினதும் முதல் எதிரி பயங்கரவாதமே........கருணா அம்மானுடன் அதிரடி இணையம் நேரடிச் செவ்வி முஸ்லிம்களின் படுகொலை புலிகள் திட்டமிட்டு நிறைவேற்றியது, முஸ்லிம்கள் பற்றிய கேள்விக்கு பதில்...

Untitled Document

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இலங்கை பிரஜைகள் ஒவ்வொருவரினதும் முதல் எதிரி பயங்கரவாதமே.

 

எக்ஸில் சஞ்சிகையின் ஆசிரியரும், கிழக்குமாகாண இனநல்லுறவுப் பணியகத்தின் மாகாண பணிப்பாளருமான எம்.ஆர்.ஸ்ராலின் அவர்களுடன் ஒரு நேர்காணல். நேர் காணல் -எம்.நவாஸ் சௌபி-

01. எக்ஸில் சஞ்சிகை மூலம் தொடர்ச்சியாக நீங்கள் கட்டமைக்க நினைத்த கோட்பாடுகளைச் சாதிக்க முடிந்ததா? அதன் தொடர்ச்சி அற்றுப் போனதன் காரணம்? மன்னிக்க வேண்டும். நாங்கள் எக்ஸில் சஞ்சிகை மூலம் எந்தவொரு கோட்பாட்டையும் கட்டமைக்க முனையவில்லை. மாறாக கட்டமைக்கப்பட்ட அதிகாரங்களுக்கு எதிராக நாம் செயற்பட்டோம். இலக்கிய, அரசியல் சூழலில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதென, பிரசுரிக்கப்படாதென மறைக்கப்பட்டவற்றையும், மறுக்கப்பட்டவற்றையும் தேடித்தேடி பிரசுரித்தோம். எந்தவொரு எழுத்தைக்கூட மாற்றாமலேயே கலகபிரதிகளை மகிழ்ச்சியுடன் பிரசுரித்தோம். தமிழ் குடும்ப மதிப்பீடுகளையும் பாலுறவு ஒழுக்க விதிகளையும் பாரிய கேள்விக்குள்ளாக்கியமை, தமிழ்த்தேசிய வாதத்தின் பாஸிச பக்கங்களை வாசிக்க தந்தமை, தேசிய வாதம் கட்டமைத்த ஏக பிரதிநிதித்துவ கொள்கையை எண்ணி நகையாடியமை. என்று தமிழ் இலக்கிய போக்கு கட்டமைத்த புனிதங்களை குலைத்து போட்டமை, தமிழ் தேசியப் பெருங்கதையாடலுக்குள் தொலைந்து போயிருந்த தலித் மக்களின் உணர்வுகளை வெளிக்கொணர்ந்தமை, தமிழ் தேசிய வாதத்தின் எதிர் வினையாக எழுந்த "முஸ்லிம் தேசம்" எனும் கருத்தாக்கத்தினை உயர்த்திப்பிடித்தமை என்று விரிந்தன எக்ஸிலின் பக்கங்கள்.
நாம் எக்ஸிலின் ஊடாக நிறுவப்பட்ட புனிதங்களை கேள்விக்குள்ளாக்குதல், மற்றையவற்றின் உரிமையை பறைசாற்றுதல், ஒற்றை அடையாளங்களை மறுத்தல் போன்ற பின்னவினத்துவ சிந்தனைகளை கவனத்தில் கொண்டியவர்கள். இவ்வித எமது கலக செயற்பாடுகள் இலக்கிய சூழலில் ஏற்படுத்திய உரையாடல்கள் மட்டுமே எமது சாதனைகள். தமிழ்த்தேசிய துரோகிகள் என்பதே நாம் பெற்றுக்கொண்ட விருதுகள். ஆனால் இன்று ஏகபிரதிநிதித்துவம் ஏதோவொரு பங்கருக்குள் முடங்கிக்கிடக்கும் நிலையும், தமிழ்த்தேசிய பெருங்கதையாடல் தகர்ந்து கிடக்கும் அழகும் அன்றைய எமது கனவுகளாக இருந்தன. அந்த கனவுகளின் சொந்தக்காரர்களாக நாமும் இருந்தோம் என்பதை சாதனை எனக்கொள்ளலாமா? நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
எக்ஸில் தொடர்ச்சி அற்றுப்போனதன் காரணங்களை சுருங்கச் சொன்னால் எட்டுதிக்கும் மதயானைகளாக எங்களை ஏறிமிதித்த யாழ் - மேலாதிக்க மேட்டிமை அரசியல் சக்திகளின் புகலிட இலக்கியம் மீதான ஆக்கிரமிப்பு. ஆனால் எக்ஸில் இல்லாவிட்டாலும் எமது செயற்பாடுகள் ஏதோவொரு வகையில் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

02. கடந்தகால வரலாற்றிலிருந்தும் தற்போதுள்ள நிலமைகளில் இருந்தும் இலங்கையின் அரசியலும் தமிழர் தேசிய போராட்டமும் என்ன வடிவம் பெற்றிருக்கிறது. கடந்தகாலம் என்பதை நாம் காலனித்துவ காலம் என்பதிலிருந்து ஒரு அடையாளமிடலை மேற்கொண்டு பார்க்கலாம். அந்த காலனித்துவ காலத்தில் பூமிபந்தின் மிகப்பெரிய அதிகார மையமாக திகழ்ந்தது ஆங்கில தேசமாகும். அந்த அதிகார மையத்தின் அருவருடிகளாக ஒவ்வொரு தேசத்திலும் ஒரு சிறுகூட்டம் உருவானது அவர்களே காலப்போக்கில் அவ்வவ்தேசங்களின் அதிகார வர்க்கமாக பரிணமித்தனர். இந்த வகையில்தான் இலங்கையில் இரு வேறு அதிகார வர்க்கங்கள் உருக்கொண்டது கண்டி, கொழும்பு மேட்டுக்குடிகள் சிங்களவர் மத்தியிலும், யாழ் - சைவ வேளாள மேட்டுக்குடிகள் தமிழர் மத்தியிலும் அதிகார பீடங்களாக உயர்ந்தனர். இவ்விரு அதிகார பீடங்களிடையே இலங்கை அரசியலில் உருவாகிய அதிகார போட்டியே தூரதிஸ்ட வசமாக தமிழ் - சிங்கள போட்டி ஆகவும், பின்னர் இனவாதமாகவும் மாற்றப்பட்டது.

சிங்கள அதிகார வர்க்கத்திற்கு பேரினவாதம் எனப்பெயரிட்ட யாழ் –அரசியல் அதிகார வர்க்கமானது அதற்கு எதிராக தமிழ்த்தேசிய போராட்டத்தை முன்மொழிந்தது. ஆனால் யாழ் - அதிகார வர்க்கத்தின் பின்புலமாயிருந்த சைவ – வேளாள மேட்டிமை சிந்தனையானது தமிழ் தேசிய போராட்டத்தை அல்ல தமிழ் பாஸிஸ போராட்டத்தையே இன்று எமக்கு பரிசாக தந்திருக்கின்றது. புனிதபள்ளிவாசல்கள் எல்லாம் பலிபீடங்களாக்கப்பட்டன. தொழுகைக்குச் சென்ற முஸ்லீம்கள் பலநூறுபேர் பலிக்கடாக்கப்பட்டார்கள். நல்லூர் கந்தனுக்கே குந்த இடம் கொடுத்த வரலாற்றைக் கொண்ட யாழ்ப்பாண முஸ்லீம்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டார்கள். சிங்களம் படியாதே என்று எமக்கு சொல்லித்தந்த யாழ்ப்பாண வேளாளர்கள் இன்று "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் தமது வாரிசுக்களை பாண்டித்தியம் பெற்றவர்களாக்கி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு கிழக்கு மாகாண தமிழ் இளைஞர்களோ புலிகளின் பாஸிஸ கூடாரங்களில் கூலிப்பட்டாளமாக்கப்பட்டார்கள்.
இப்படியாக கடந்த நூறாண்டுகாலம் முழுக்க வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து தமிழர்களினதும் சிலவேளைகளில் முழு இலங்கையின் தலைவிதியைக்கூட நிர்ணயிக்கக்கூடிய சக்திகளாக கோலோச்சியவர்கள் யாழ் - ஆதிக்க வர்க்கமேயாகும். ஆனால் இன்று இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது வரலாற்றில் முதல் தடவையாக இன்று கிழக்கு மாகாணத்திலிருந்து புதிய தலைமைகளை உருவாக்கியுள்ளது. இது இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் பெரும் திருப்புமுனையாக அமையும் என்பது எனது நம்பிக்கை.
மறுபுறத்தில் வடமாகாணத்தில் சாதிப்படுநிலையில் தாழ்த்தப்பட்ட யாழ்ப்பாணத்து தலித்துக்கள் இன்னும் கூலிகளாகவும் வன்னி யுத்த முனைகளில் கூலியற்ற படைகளாகவும் போராட நிற்பந்திக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பது எமக்கு கவலைதரும் விடையமாகும் அங்கிருந்தும் சைவ வேளாள தலைமைத்துவம் முற்றாக துடைத்தெறியப்பட வேண்டும். தலித்துகளினதும் முஸ்லிம்களினதும் கூட்டுத் தலமைகள் எதிர்காலத்தில் வடமாகாணத்திலும் எழுச்சி பெறவேண்டும்.

03. குறிப்பாக கிழக்கு தமிழர் சமூகம் ஜனநாயக கோட்பாட்டோடு அரசியலையும், அபிவிருத்தியையும் முழுமையாக கருதி நிற்கின்ற இன்றைய நிலையின் உறுதித் தன்மையின் சாத்தியங்கள் எவ்வாறானது. உறுதியானது நிலையானது, மாறாதது என நாம் ஒன்றையும் கற்பிதம் செய்ய முடியாது. எனவே இன்றைய நிலையின் உறுதித்தன்மை பற்றி யாரும் உத்தரவாதப்படுத்த முடியாது. ஆனால் உங்கள் கேள்வியில் தொக்கி நிற்கின்ற அல்லது பொதிந்து கிடக்கின்ற விடயத்தை நான் புரிந்து கொள்கின்றேன். அதாவது மீண்டும் தமிழ் தேசியவாத அலை கிழக்கு மாகாணத்தில் வீசாதா? மீண்டும் புலிகள் கிழக்கு மாகாணத்தை ஆக்கிரமித்துவிட மாட்டார்களா? என்பதே அது. என்னை பொறுத்தவரை குறித்தவொரு கோட்பாடு தொடர்ச்சியாக இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு ஒரே மாதிரியாக ஆதிக்கம் செலுத்த முடியாது. காரணம் குறைந்தது ஒரு 30 வருட இடைவெளியில் ஒரு தலைமுறை மாற்றமே நடந்துவிடும் அந்த தலைமுறைகளின் அசைவியக்கம் புதிய சிந்தனைகளை புதிய உலகங்களை தரிசிக்கும். அந்த வகையில் இன்றைய கிழக்கு மாகாணத்தின் இளம் சமூகம் இந்த அர்த்தமற்ற போராட்டத்தை அடியோடு வெறுக்கிறது. உதாரணமாக பாருங்கள் 1983களில் இருந்த நிலைமைகள் இன்று தலைகீழாக மாறியுள்ளன. அப்போதெல்லாம் இளைஞர் தமிழ்த்தேசியவாத இயக்கங்களில் தன்னெழுச்சியாகவே இணைந்துகொண்டனர். கொரில்லாப் பயிற்சிகளுக்காகவே இந்தியாவிற்கும் பலஸ்தீனத்திற்கும் அணியணியாக வீடுகளைவிட்டு வெளியேறி சென்றார்கள். வீடுகளை உற்றார் உறவினர்களை, தமது பாடசாலைகளை, சிலவேளைகளில் பல்கலைக்கழகங்களைக்கூட உதறித்தள்ளிவிட்டுச் சென்றவர்களும் உண்டு. ஆனால் அந்நிலை இன்று இல்லை. ஆயுத பயிற்சிக்காக புலிகள் கட்டாயப்படுத்தித்தான் இளைஞர்களைச் சேர்க்கவேண்டியுள்ளது. அதைக்கூட மௌனமாக ஏற்றுக்கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால் இப்போது அந்நிலையும் மாறிவிட்டது.
இவையெல்லாம் எதைக்காட்டுகின்றது என்றால் தமிழ்த்தேசியப் போராட்டம் மக்களிடையே குறிப்பாக கிழக்கு மக்களிடையே முற்றாக நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதன் போலித்தன்மை கிழக்கில் அம்பலப்பட்டு நிற்கின்றது. 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்த்ததைத் தொடர்ந்தும் 1990களில் முஸ்லிம்கள் மீதான அழித்தொழிப்புகளைத் தொடர்ந்தும் முஸ்லிம்கள் மத்தியில் இந்த தமிழ் தேசிய அடையாளம் எனும் ஒற்றை அடையாளமே மறுத்துரைக்கப்பட்டது. அதேவேளை அதற்கு மாற்றாக முஸ்லிம் தேசம், முஸ்லீம் தேசியம் போன்ற கருத்தாக்கங்கள் வலுப்பெறத் தொடங்கியது. முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பிரவேசம், முஸ்லிம் தனி அலகு கோரிக்கைகள், ஒலுவில் பிரகடனம் என்பன இவற்றிற்கு குறிப்பான உதாரணங்கள். இவை கிழக்கு தமிழ் - முஸ்லிம் மக்களிடையே பாரிய இடைவெளியினை தோற்றுவிக்க காரணமாய் அமைந்தது.

இதேபோன்றுதான் 2004ம் ஆண்டு புலிகளுக்குள் ஏற்பட்ட கிழக்குப் பிளவும் வன்னிப்புலிகள் நடத்திய வெருகல்படுகொலையும் கிழக்குத் தமிழர்களையும் இந்த தமிழ்த்தேசியப் போராட்டத்தில் இருந்து வேறு திசை நோக்கி நகர்த்தியது. இவற்றினூடாக இடம்பெற்ற அரசியல் மாற்றங்களே கிழக்கில் இருந்து புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கும் ஜனநாயக மீட்சி, அபிவிருத்தி போன்ற கோசங்களின் பால் பொதுமக்களின் கவனம் திசைதிரும்ப காரணமாயிற்று. இந்த மாற்றங்களின் வெளிப்பாடுதான் கிழக்கில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் மீண்டும் "கிழக்கின் ஐக்கியம்" என்கின்ற மையப்புள்ளியில் இணைந்து யாழ் மேலாதிக்கத் தலைமைகளுக்கு எதிரான புதிய பாதையில் பயணிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. மூவினங்களையும் சேர்ந்த ஆட்சிப் பொறிமுறையொன்றை மக்கள் ஆதரித்து தெரிவு செய்திருப்பது கிழக்கில் வாழும் மூவினப் பிரதிநிதிகளும் தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் தமது எதிர்காலம் குறித்தும் ஒன்றாக உட்கார்ந்து பேசித்தீர்க்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. கிழக்கு மாகாண அரசின் விசேடம் என்பதே, அது யாழ்ப்பாணிய சிந்தனையில் இருந்து முளைக்காதது என்பதுதான்; (நன்றி சுகன்). இப்பொழுது உங்கள் கேள்விக்கு வருவோம். இன்றைய நிலையில் இந்த கிழக்கின் பன்மைத்துவ அரசியல் போக்கை நான் பலமாக ஆதரிக்கின்றேன். ஆனால் எவ்வளவு காலம் வாழும் என்பதல்ல எப்படி வாழ்ந்தது என்பதே முக்கியமானது.

04. கிழக்கை ஜனநாயகத்தினூடாக தேசிய அரசியலுக்குள் வரையறுக்கப்பட்ட நிலையில் பல்லினச் சமூகங்களின் இன நல்லுறவை வலுப்படுத்துவதிலுள்ள நம்பிக்கை எவ்வாறானது. வாழ்வு என்பதன் ஆதாரமே நம்பிக்கைதானே. பல்லின சமூகங்களின் இன உறவை வலுப்படுத்தும் நமது முயற்சிகளுக்கும் அடிப்படை அந்த நம்பிக்கை மட்டுமே. இன்றைய நிலையில் கிழக்கின் இன ஐக்கியத்தை கட்டியெழுப்புவது என்பது பெரும் சவால்கள் நிறைந்த போராட்டம் என்பது உண்மைதான். ஆனாலும் அவற்றை கடந்து செல்வதற்கான வரலாற்றுச் சூழல் எம்முன்னே உள்ளது. என்பதிலிருந்தே எனது நம்பிக்கைகளும் கட்டியெழுப்பப்படுகிறது.
இந்த முரண்பாடுகளை எல்லாம் எடுத்துப்பாருங்கள் இவை அனைத்துமே 1983ம் ஆண்டின் பின்னரே ஏற்பட்டது. அதற்கு முன்னர் எந்தவொரு பொழுதிலும் கிழக்கு மண்ணில் முஸ்லிம்களும் தமிழர்களும் மோதிக்கொண்டதாக வரலாறு கிடையாது. கிழக்கு மாகாண சமூகமானது சுமார் 2500 வருட பாரம்பரியம் கொண்ட ஒரு சமூகக் கூட்டங்களின் தொடர்ச்சியாகும். அதில் சுமார் 1000 வருடகால வரலாறு கொண்டவர்கள் முஸ்லிம்கள். இந்த நீண்ட நெடிய வரலாற்றுப் பாதையில் நாம் ஒன்றாக வாழ்ந்த காலங்களே அதிகம். துரதிஸ்டவசமாக கடந்த 25 வருடகாலத்திலிருந்தே இங்கு இன முரண்பாடுகள் தோற்றம் பெற்றது. ஆகவேதான் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களின்றி தமிழர்களோ தமிழர்களின்றி முஸ்லிம்களோ வாழ்ந்திட முடியாது.

பிட்டும் தேங்காய்ப் பூவுமாக கலந்திருந்த எம் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டவர்கள் யார் என்பதை வரலாறு எமக்கு சொல்லித்தந்துவிட்டது. என்று தமிழ்த்தேசியவாதம் முஸ்லிம்களை தமது கோட்பாட்டிற்குள் இருந்து வெளியே தூக்கிப்போட்டதோ அன்றிலிருந்தே முஸ்லிம் தேசியம் எனும் கருத்தாக்கமும் இங்கு துளிர்விடத் தொடங்கி விட்டது. கிழக்கிலும் தமது இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகையில் முஸ்லிம்கள் தமது தனித்துவம் பற்றியும் பிரிவினை பற்றியும் சிந்திப்பது இயல்பானதும் சரியானதுமாகும். இதன்காரணமாகவே முஸ்லிம்களிடத்தில் தனிகட்சி, தனியலகு கோரிக்கைகள் கிழக்கை அடிப்படையாகக் கொண்டு வலுப்பெற்றது. ஆனால் இந்தநிலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதை நீங்கள் அவதானிக்கமுடியும். கிழக்கு மாகாணத்து முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கிய யாழ்மேலாதிக்கத்தின் இராணுவ வடிவமாகிய புலிப்பாஸிசம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. கிழக்குத் தமிழர்களிடையே தமிழ்த் தேசியவாதம் என்பது கூட வெறுக்கத்தக்க ஒரு காலாவதியாகிக் போன கோப்பாடாகிவிட்டது. "கிழக்கு மக்கள்" என்கின்ற சிந்தனையும் பிரதேச உணர்வுமே இன உணர்வைவிட கிழக்கில் இன்று மேலோங்கிக் காணப்படுகின்றது.
எனவேதான் கடந்த பல தேர்தல்களிலும் முஸ்லிம் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வந்த தனிஅலகு, தென்கிழக்கு மாகாணம், சுயாட்சி அலகு, தென்மாகாணம், தென்கிழக்கிஸ்தான் என்றவாறான கோசங்கள் எல்லாம் அண்மையில் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் கைவிடப்பட்டிருக்கின்றன. முஸ்லிம்களுக்கும் இம்மாகாணம் சொந்தம் என்று உணருகின்ற நிலையேற்பட்டுள்ளது. கிழக்கின் முதலமைச்சராக ஒரு முஸ்லிமும் வருவதற்கான வாய்ப்புகள் மிக சாதாரணமானவை. வடக்கில் இருந்து வீசப்பட்ட தமிழ் தேசியவாத சுருக்குக் கயிறுகளை அறுத்தெறிந்து தனித்தியங்க ஆரம்பித்துள்ள கிழக்கு மாகாணத்தில் இது பல்லினங்களின் தேசம் என்கின்ற தன்மைகள் பகிரங்கமாக அங்கீகரிக்கப்பட்டு பரஸ்பர புரிதல்கள் ஏற்பட்டுள்ளது.
தமிழ் தேசியவாதம் இல்லாத ஒரு நிலையில் முஸ்லிம் தேசியத்திற்கான அவசியமும் இல்லாது போவது இயல்பே. இந்தப்புள்ளியில் இருந்துதான் இங்கு வாழும் பல்லினங்களும் "கிழக்கு" எனும் பிரதேச உணர்வில் ஒன்றிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த பன்மைத்துவப் போக்கின் வளர்ச்சியே நாம் இழந்துபோன இனநல்லுறவுகளை மீளச் சீரமைக்கும் தொடக்கமாக அமையும் என்பது எனது பலமான நம்பிக்கையாகும்.

5 கிழக்கு மாகாணசபையில் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலுமாக முஸ்லிம் உறுப்பினர்களே அதிகமாக இருக்கிறார்கள். இதனூடாக கிழக்கு மாகாணத்தின் அரசியல் அதிகாரம் பற்றி எவ்வாறான பார்வையினைக் கொள்ளலாம் ? இது மிகமுக்கியமான விடயம். கடந்த 25 வருட காலமாக துப்பாக்கி தாங்கிய தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் கிழக்குமாகாணத்தில் பல பாகங்களிலும் தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. குறிப்பாகப் புலிகள் முஸ்லிம்கள் மீது மிக மோசமான மேலாதிக்கமான நிலையில் தமது அதிகாரத்தை பிரயோகித்து வந்தனர். முஸ்லிம்களின் தனித்துவம் பற்றியும் முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் முஸ்லிம் தலைமைகள் புலிகளிடம் தவம் கிடக்க வேண்டி இருந்தது. மத்திய அரசாங்கத்தில் தமது பிரதிநிதிகளை போதியளவுகொண்டிருந்த போதிலும் கிழக்கு மாகாணத்தில் அவர்கள் சுதந்திரமாக இயங்கமுடியாத அளவிற்குப் புலிகளது இராணுவவாத வலைப்பின்னல் பலமாக இருந்தது. இதேபோன்று முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 65000 ஏக்கர் நெல் விளை நிலங்கள் ( கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும்) புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முடக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. கிழக்கு மாகாணத்தின் மாகாணசபையின் செயற்பாடுகள் இயங்க ஆரம்பித்ததிலிருந்து குறைந்த பட்ச ஜனநாயக சூழ்நிலை ஒன்று முஸ்லிம்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இரண்டிலுமாகச் சேர்த்து சபையின் 50 சதவீத ஆசனங்களை முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் கொண்டிருப்பதன் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு தீர்மானங்களையம் அநீதிகளையும் தடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கிழக்கு மாகாணத்தின் சமூகப் பொருளாதார வேலைத்திட்டங்கள் அனைத்திலும் தீர்மானிக்கும் சக்திகளாக முஸ்லிம்களும் இருக்கின்றார்கள். வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில்; தாங்கள் இரண்டாம் தரப்பிரஜைகளாக மாற்றப்பட்டு வருகின்றோம்; என்கின்ற உணர்வு நிலையிலிருந்து முஸ்லிம்களுக்கான தனி அலகுக் கோரிக்கை எழுந்தது. ஆனால் இன்று கிழக்கு மாகாணம் தனித்து இயங்க ஆரம்பித்த நிலையில் அதற்கான அவசியம் இல்லாது போய்விட்டது. கிழக்குமாகாணம் முஸ்லிம்களதும் மாகாணம் என்கின்ற சமூகமனோநிலை உருவாகியுள்ளது.

6 இனநல்லுறவில் குறிப்பாக முஸ்லிம்கள் எவ்வாறான பங்களிப்பினைச் செய்பவர்களாக எதிர்;பார்க்கப்படுகிறது ?
கடந்த காலங்களில் இன நல்லுறவில் ஏற்பட்ட பாரிய விரிசல்களுக்குக் காரணம்; என்னவென்பது பற்றி நாம் கூடிய கவனம் கொள்ள வேண்டும். பல நூற்றாண்டு காலம் ஒன்றாக வாழ்ந்த தமிழர்களும் முஸ்லிம்களும் எப்படி எதிரிகளாக கட்டமைக்கப்பட்டார்கள் என்பதனை அடையாளங்;கண்டு கொண்டால்மட்டுமே எதிர்காலத்தில் அவற்றினை நிவர்த்தி செய்து முன்னேற முடியும். யாழ்ப்பாணத்து சைவ வேளாளர் மன நிலையில் கட்டியமைக்கப்பட்ட தமிழ்த்தேசியம் இலங்கைத்தமிழர்களிடையே ஏற்படுத்திய தாக்கமே முஸ்லிம் மீது ஏற்படுத்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்குக் காரணமாக அமைந்தது. யாழ்ப்பாணத்து ஆதிக்க மனோநிலையில் உருவாகிய தலைமைகளின் வழிநடத்தல்களே கிழக்குமாகாண தமிழ் முஸ்லிம் விரிசல்களை ஏற்படுத்தியது. கிழக்கிலிருந்து புலிகள் துரத்தியடிக்கப்பட்டபின்பு இந்த நிலை மாற்றம்கண்டுவருகிறது. கிழக்கிலிருந்து உருவாகிய தலைமைகள் கிழக்கின் பல்லினத்தன்மையைப் புரிந்துகொண்டு செயற்பட ஆரம்பித்திருக்கின்றார்கள் முதலில் முஸ்லிம்கள் இந்த மாற்றங்களை விளங்கிக் கொள்ளவேண்டும்.
அதேவேளை, இன்று கிழக்கில் வலுப்பெற்றுவரும் நல்லுறவினை மீண்டும் சீர்குலைக்கும் சக்திகளையிட்டு நாம் கூடிய கவனம் கொள்ள வேண்டும்;. குறிப்பாக முஸ்லிம்கள் இந்த விடயத்தில் மிக அவதானமாக இருப்பது மிக அவசியமானதாகும். கிழக்கில் மீண்டும் முஸ்லிம் - தமிழ் கலவரங்களை ஏற்படுத்துவதும் அதனூடாக தமிழர்களை மீண்டும் தங்களை நோக்கி வரவழைப்பதும் புலிகளது முக்கிய வேலைத்திட்டங்களில் ஒரு பகுதியாக உள்ளது. இதைத்தமிழர்கள் மட்டுமல்ல முஸ்லிம்களும் புரிந்து கொள்;ளவேண்டும்.
மறுபுறத்தில் சிறிலங்கா அரசு கொண்டுள்ள காணிஅதிகாரங்கள் மீதான இறுக்கமான பிடிகள். நாம் புதுவித அணுகுமுறைகளினூடாக வென்றெடுக்கப்படவேண்டியவை ஆனால் அவற்றை இன்று பெருப்பித்துக்காட்டி தமிழ்த்தேசியவாதிகளும் புலிகளும் தமது மரபுவழித்தாயகம் , வடக்கு, கிழக்குஇணைப்பு என்கின்ற காலாவதியாகிப் போன கொள்கைகளைப் புதுப்பிக்க வழிதேடுகின்றனர்.
இம்முயற்சிகள் மீண்டும் தமிழ் பாஸிஸ்டுகள் கிழக்கில் கால்பதிக்கவே வழிவகுக்கும். இதற்கு வாய்ப்பாக ஒருசில முஸ்லிம் தலைமைகளும் பேசிவருகின்ற நிலைமைகள் மிக ஆபத்தானவை. சிறிலங்கா அரசின் மேற்படி நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக நாம் மீண்டும் பாஸிஸப்புலிகளின் வலைகளில் விழமுடியாது. அது சட்டியிலிருந்து நெருப்புக்குள் வீழ்ந்த கதையாகிவிடு;ம். இன்று இலங்கைப்பிரஜைகள் ஒவ்வொருவரினதும் முதலாவது எதிரி புலிப்பாஸிஸமே ஆகும். அது சிங்களவரையும் கொலைசெய்யும், முஸ்லிம்களையும் கொலைசெய்யும், தமிழரையும்கொலைசெய்யும். ஏன் தங்களுக்குள்ளேயும் கொலை செய்யும். ஆகவே நம் ஒவ்வொருவரதும் முதல்கடமை புலிப்பாஸிஸத்தை தோற்கடிப்பதற்காக போராடுவதேயாகும். ஆகவேதான் அந்த புலிப்பாஸிஸத்தைக் காப்பாற்றும் தமிழ்தேசியவாதமும், மரபுவழித்தாயகக் கோட்பாடும், வட-கிழக்கு இணைப்பு கோரிக்கையும்நம் எல்லோரினதும் எதிரிகள் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.

7 இனநல்லுறவு என்பது சமூகங்களுக்கான தேசியவாத கோட்பாடுகளை முற்றாக அவசியமற்றதாக்கிவிடுமா?
குறிப்பாக கிழக்கு சமூகங்களை எடுத்துக் கொண்டால் தமிழ்தேசியவாதம் இங்கு காலூன்றும் வரை எதுவித இன முரண்பாடுகளையும் கிழக்குமண் வெளிக்காட்டவில்லை. அதேபோன்று, தமிழ்த் தேசியவாதத்தின் வரவின் பின்னரே (1980களில் இருந்தே) முஸ்லிம் தேசியவாதம் என்பதுவும் கருக்கொண்டது. இருவேறு துருவங்களாக இத்தேசியவாதக்கோட்பாடுகள் இயங்கிக் கொண்டிருக்கும்வரை அங்கே ஒற்றுமைக்கான சாத்தியங்கள் அரிது. இத்தேசியவாதக் கோட்பாடுகளில் இதுவரை ஆதிக்கம் செலுத்திய தமிழ்த்தேசிய கோட்பாடு கிழக்கில் வலு இழந்துள்ளது. இதன்காரணமாக சகோதர இனமான முஸ்லிம்களது தனித்துவங்கள் பற்றியபுரிதல்கள் கவனம் கொள்ளப்பட்டு வருகின்றன. கிழக்கின் பன்மைத்துவம் அங்கீகரிக்கப்பட்டு இனநல்லுறவு வலுப்பெறுகின்ற போது எல்லாவித சமூகங்களுக்கான தேசியவாதக் கோட்பாடுகளும் வலுவிழந்;து போய்விடும். என்பதே எனது கருத்த

8 மாகாணசபை ஆட்சியில் 13ஆவது சரத்தின்படி அதிகாரங்களைப் பெறுவது சாத்தியமா?முதலில் பிரபாகரனுடைய ஆட்சியில் நாம் அவற்றைப் பெற்றுக்கொண்டோமா? முப்பதாயிரம் இளைஞர்களையும் ஒருலட்சம் மக்களையும் பலிகொடுத்து ஆயுதப்போராட்டத்தின் மூலம் ஒருபஞ்சாயத்து ஆட்சிமுறையைக்கூட பெற்றுக்கொள்ளமுடியாதபோது வழிமுறைகளில் மாற்றம் தேவைப்படுகிறது. அந்தமாற்றங்களில் ஒன்றை இன்றைய மாகாணசபை ஏற்றுக் கொள்ளவேண்டியநிலை. அதில் 13 ஆவது சரத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தங்களை ஜனநாயகவழிமுறைகளினூடாகவே மேற்கொள்ளவேண்டும். மக்களது ஒருமித்த ஜனநாயகப்போராட்டங்கள் மன்னராட்சியையே ஒழித்துக்கட்டும் சம்பவங்கள் நேற்றுவரை உலகில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது ஆனால் ஜனநாயக சக்திகள் வலுப்பெறவும் மக்களினது அரசியல் ஈடுபாடு அதிகரிக்கவும் முன்நிபந்தனை புலிப்பாஸிசம் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதேயாகும்.

நன்றி-”மீள்பார்வை,விழிப்பு இணையத்தளம்.

 

 
Updated 21-10-08   <<Feed Back >>   <<Tell Your Friend >>  
 
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.