04.08.2008 அன்று வெளியான சுடர் ஒளி இணையப்பதிப்பில் கீழுள்ள செய்தியை சுடர் ஒளி வெளியிட்டுள்ளது
காத்தான்குடியில்
நேற்று ஹர்த்தால;
மட்டக்களப்புஇ காத்தான்குடி பிரதேசத்தில்கடந்த 1990ஆம் ஆண்டில் இரு பள்ளிவாசல்களில் புகுந்து இனந்தெரியாத ஆயுததாரிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 103 பொதுமக்கள் கொல்லப்பட்டஇ 18ஆம் ஆண்டு நினைவு தினமான நேற்று அங்கு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 03081990ஆம் ஆண்டு காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல்இ ஹுஸைனியா பள்ளிவாசல் ஆகியவற்றில் ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 103 அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன்இ 255 முஸ்லிம்கள் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தின் 18ஆவது வருட ஞாபகார்த்த தினம் நேற்றாகும். இதனையொட்டியே தேசிய சுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. ஹர்த்தால்இ துக்கதினம் காரணமாக வர்த்தக நிலையங்கள் யாவும் ளூநற்று முற்றாக மூடப்பட்டிருந்தன. கல்வி நிலையங்கள்இ பொதுச்சந்தைகள் இயங்கவில்லை. போக்குவரத்தும் இடம்பெறவில்லை. வழமையான அலுவல்கள் பாதிக்கப்பட்டிருந்தன. ஷûஹதாக்களின் ஞாபகார்த்தமாக பள்ளிவாசல்களில் விசேட சமய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. (த 211)
03.08.1990ம் ஆண்டு இடம் பெற்ற இப்படுகொலையை பயங்கரவாதத்திற்கெதிரான உலகச்சக்திகள் அனைத்துமே கண்டித்திருந்தன.இப்படுகொலையை புரிந்தவர்கள் பயங்கரவாத அமைப்பான புலிகளே என்று காத்தான்குடி மக்கள் உலகிற்கு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்திருந்தனர்.இப்படுகொலையை நேரடியாக தலைமை தாங்கி நடாத்தியவர் புலிப்பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரான மஞ்சந்தொடுவாயை சேர்ந்த பொட்டக்கண் ரங்கன் என்று படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்கள் அடையாளம் காட்டினர்.இப்பொது அப்பயங்கரவாதி முல்லைத்தீவில் தங்கி வாழ்ந்து வருகின்றான்.இப்படுகொலை நிகழ்ந்த காலத்தி;லும் கிழக்கு தளபதியாக கருணா அம்மான்தான் இருந்தார் என்பதும்,பள்ளிவாயல் படுகொலையை புலிகள் புரிந்ததை புலியைவிட்டு பிரிந்த பின் அவரே ஒப்புக்கொண்டிருப்பதும் உலகறிந்த விடயமாகும்.
இவ்வாறு உலகமே தெளிவாக சந்தேகத்திற்கிடமின்றி தெரிந்து வைத்துள்ள ஒரு விடயத்தை 18 ஆண்டுகளுக்கு பின் இனந்தெரியாத ஆயுததாரிகள் புரிந்ததாக கூறும் சுடர்ஒளிக்கு எவ்வளவு ஊடக வக்கிர உணர்வு இருக்க வேண்டும்.இந்த ஊடகப் பயங்கரவாதத்தை எந்த ஊடக ஒன்றியத்திடம் முறையிடுவது?
ராஜிவ் காந்தி படுகொலையை 'துன்பியல் நிகழ்வு' என உலகப் பயங்கரவாத அமைப்பின் தலைவன் தாம் செய்ததாக ஏற்றுக்கொண்ட பின்பும்,இந்திய அமைப்பும்,சிறப்பு நீதிமன்றமும் நிரூபித்த பின்பும் புலிகளின் ஊடகப் பயங்கரவாதிகள் இன்றும் அதை மறுத்து செய்தி வெளியிட்டுக்கொண்டே இருக் கிறார்கள்.இவ்வாறான மூடி மறைத்தல்கள் எல்லாம் முழு உலகத்தையும் புலிப்பயங்கரவாதத்திற்குள் மூடி மறைக்கும் நடவடிக்கையே அன்றி வேறு ஒன்றும் இல்லை.சுடர் ஒளி உட்பட ஊடகப்பயங்கரவாதிகள் அனைவரும் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை பற்றிய உண்மையை மீண்டுமொரு முறை உலகிற்கு கொண்டுவருவதற்கான உடனடி விசாரணை ஆணைக்குழு
ஒன்றை நியமிக்க வேண்டிய பொறுப்பு, புலிகளின் அப்போதய உறுப்பினர் தற்போதய கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ சிவனேசத்துரை சந்திர காந்தனுடையதும்,கிழக்கில் தற்போது ஆட்சியமைக்க உதவியிருக்கின்ற முஸ்லிம் உறுப்பினர்களினதும் கடமையாகும்.அத்துடன் முஸ்லிம்களின் அரசியல் சக்தி என்று நிரூபித்திருக்கின்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கடமையும் பொறுப்புமாகும்.இக் கடமையை கிழக்கு மாகாண சபையில் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதன் மூலம் நிறைவேற்றுவார்களா?அல்லது மக்கள் இன்னும் 18 வருடங்களுக்கு ஏமாற்றப்படுவார்களா?
காத்தான்குடி சுலைமான் அபு. |