Untitled Document
Untitled Document
புங்குடுதீவு மக்களே! புங்குடுதீவு மக்களே! மீண்டும் மீண்டும் ஏமாறாதீர்கள்!! 'மீண்டும் புறப்பட்டு விட்டான் '(புங்குடுதீவு) சுவிஸ் சுரேஸ்'..!!! ...26.08.2008ம் திகதி தினக்குரல் பத்திரிகையில் த. மனோகரன் எழுதிய அம்பாறை மாவட்டத்தில் இரு தமிழ் கல்வி வலயங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கட்டுரைக்கான துணை விமர்சனம். ........... காத்தான்குடி இரு பள்ளிவாசல்கள் படுகொலை இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு புலிப்பத்திரிகை சுடர் ஒளி செய்தி.....கிழக்கு தமிழ் முஸ்லிம் அரசியல் சக்திகள் ஒன்றிணைவதே எதிர் காலத்தில் கிழக்கு சமஸ்டியை உறுதிப்படுத்தும்.

Untitled Document

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முஸ்லிம் சகோதரர்களுக்கு ஓர் கடிதம்.

அரசியல் அதிகாரம் இல்லாத காலத்திலும்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதித்திருக்கிறது.


 

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட பூமியின் மகனாக இருந்து இக் கடிதத்தை எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.இலங்கை முஸ்லிம் மக்களுக்கு ஓர் முஸ்லிம் கட்சி வேண்டுமென்ற விதை நாட்டப்பட்டு 30 வருடம் நிறைவடைந்து விட்டது.இந்த 30 வருட காலத்தில் இலங்கை முழுவதிலும் உள்ள 60 வீதமான முஸ்லிம் மக்களின் ஆதரவினூடாக ஓர் மக்கள் இயக்கமாக உரிமை அரசியலிலும்,அபிவிருத்தி அரசியலிலும் முஸ்லிம் காங்கிரஸ் பல சாதனைகளை புரிந்திருக்கின்றது.இந்த சாதனைகளை முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களி;த்தவர்கள் என்ற வகையில் நீங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்வீர்கள்.

நானும் நீங்களும் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவாக பல தேர்தல்களில் வாக்களித்துள்ளோம்.பல தடவைகளில் வாக்களிக்காது இருந்துள்ளோம்.எமது ஒற்றுமையினால் நாம் பலவற்றை சாதித்திருகின்றோம்.நாம் ஒற்றுமை இழந்து பிரிந்தபோது பலவற்றை இழந்திருக்கின்றோம்.தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்களின் வழிகாட்டலில் வீறு நடை போட்டோம்.தலைவர் மறைந்ததன் பின்னர் சொந்த இலாபங்களுக்காகவும்,பதவிகளுக்காகவும் பிரிந்து சமூகத்தை நடுத் தெருவில்விட்டு விட்டோம்.தனிப்பட்ட நலன்களுக்காகவும்,தனிப்பட்ட ஊர்களுக்காகவும் பிரிந்து வாக்களித்து நமது தலையில் நாமே மண் அள்ளி வைத்துக்கொண்டோம்.

ஒரு அமைப்பின் தலைமை என்பது தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும்.மர்ஹும் அஸ்ரப் அவர்கள் தலைவராக இருந்தார்கள்.இன்று சகோதரர் ஹக்கீம் இருக்கின்றார்.நாளை வேறு ஒரு சகோதரர் இருப்பார்.ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற எமது அமைப்பு எமது ஒற்றுமையினால் பாதுகாக்கப்பட வேண்டியதாகும்.எமது மக்கள்
அமைப்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்தால்தான் எமது உரிமைகளுக்காக நாம் குரல் கொடுக்க முடியும்.
எமது ஒற்றுமையையும்,தேவைகளையும் சர்வதேசத்திற்கு சொல்ல முடியும்.குறைந்த பட்சமாக முஸ்லிம்கள் என்ற அடையாளத்தோடு வாழ முடியும்.

நமது அமைப்பான முஸ்லிம் காங்கிரஸுக்குள் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை,பதவி ஆசைகளை,நிர்வாக சிக்கல்
களை நாம் கட்சிக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.கட்சியை விட்டு பிரிந்து சென்ற அனைவரும் கட்சிக்குள்
நின்று போராட முடியாத கோழைகளாகவே வெளியேறினார்கள்.ஆனால் மக்களாகிய நாம் ஒற்றுமையாக நின்று ஒரு
தேச மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நிரூபித்துக் காட்டினோம்.ஒரு முஸ்லிம் தேசியத் தலைவர் எங்கு போட்
டியிட்டாலும் வெல்லுவார் என்பதை சகோதரர் ஹக்கீமுக்கு கண்டியிலும்,அம்பாறையிலும்,திருகோணமலையிலும் வாக்களித்து வெற்றி பெற வைத்து மற்றைய சமூகங்களுக்கு நிரூபித்துக் காட்டினோம்.சிங்கள,தமிழ் தலைவர்களால்
தமது தொகுதியை விட்டு வேறு தொகுதிகளில் வெல்ல முடியவில்லை.இந்த வரலாற்றுக்கும் நாமே சொந்தக்காரர்
ஆனோம்;.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அமைப்பினூடாக மட்டுமே இதனை நாம் சாதிக்க முடிந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரையிலும் பல ஜனாதிபதிகளையும்,பிரதமர்களையும் சந்தித்திருக்கின்றது.அரசியல்
அதிகாரத்தோடு பல சாதனைகளை செய்திருக்கின்றது.ஊர் பெயர் தெரியாதவர்களெல்லாம் எம்.பிக்களாகவும்,அமைச்சர்களாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.ஆனால் இவர்கள் எல்லோரும் எமது சமூக அமைப்பான முஸ்லிம்
காங்கிரஸை சிதைத்து விட்டே சென்றிருக்கின்றார்கள்.ஆனால் எமது எதிர்கால சந்ததிகளுக்காக ஒரு பலம் வாய்ந்த
அரசியல் இயக்கம் வேண்டும்.அந்த அரசியல் அமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமாகவே இருக்க முடியும்.
முஸ்லிம் காங்கிரஸ் பாதுகாக்கப்படுவதால் மட்டுமே இலங்கையில் முஸ்லிம் சமூகம் உயிர் வாழும்.நாம் தலைமையு
டனும்,எம்.பிக்களுடனும் இருக்கும் கோபத்திற்காகவும்,கருத்து முரண்பாட்டுக்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை
காட்டிக் கொடுத்து விடக் கூடாது.எமது அமைப்பை சின்னாபின்னமாக்கிவிடக் கூடாது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு மாற்றாக வந்த எந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களின் உரிமைக
ளுக்காக குரல் கொடுத்ததில்லை.அமைச்சுப்பதவிகளைப் பெற்று தனது ஊருக்கு சில அபிவிருத்திகளை செய்திருக்க
லாம்.அவையெல்லாம் முஸ்லிம்களின் உரிமைகளுக்கு ஈடாக மாட்டாது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அதிகாரம் இல்லாமல் எதிர்த் தரப்பில் இருந்த காலங்களிலேயே அதிகமாக சாதித்தது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது அபிவிருத்தி செய்வதற்காக அல்ல.மாறாக எமக்கு ஒரு அரசியல் இயக்கம் வேண்டும்.அந்த இயக்கம் எமதுஉரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்.எமக்கு அநீதி ஏற்படுகின்ற போது சர்வதேச முஸ்லிம் உம்மாவிற்குதெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கங்களுக்காகவே எமது மக்களால் மர்ஹும் அஸ்ரப் அவர்களின் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.இவ்வமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கத்தில் சிலவற்றை நிறைவு செய்திருக்கின்றது.எமது முஸ்லிம் சமூகத்திற்கெதிராக புதிது புதிதாக வருகின்ற அடிமைப்படுத்தலுக்கெதிராக முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே குரல் கொடுத்திருக்கின்றது.முஸ்லிம் சமூகத்தின் இருப்பை காப்பாற்றியிருக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லாத தற்போதய சமயத்தில் முக்கிய இரண்டு விடயங்களில்
சாதித்து முஸ்லிம் சமூகத்தின் இருப்பை இலங்கை முழுவதும் காப்பாற்றியிருக்கின்றது.

01. உள்ளுராட்சி மன்றங்களில் தற்போது இருக்கும் விகிதாசார தேர்தல் முறையை மாற்றி,வட்டார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய பேரினவாத மகிந்த அரசு போட்ட
திட்டத்தை உயர்நீதிமன்றம் சென்று எல்லா மாகாண சபைகளும் தீர்மானம் நிறைவேற்றினாலேயே பாராளுமன்றத்தில்
நிறைவேற்ற முடியும் என்ற தீர்ப்பை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றதுடன் நில்லாமல் கிழக்கு மாகாண சபையில் அந்த
தீர்மானத்தை நிறைவேற்றாமல் தடுத்ததன் ஊடாக, முஸ்லிம்களை காட்டிக் கொடுக்கும் சிங்கள இனவாத கட்சிகளின
முஸ்லிம் முகவர்களும் தெரிவு செய்யப்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்படுத்திக்
கொடுத்திருக்கின்றது.இன்று மகிந்தவிற்கு வால் பிடிக்கும் எந்த அமைச்சர்களும் எம்.பிக்களும் இந்த விடயத்தை
கண்டு கொள்ளவேயில்லை.

02. தமிழர்களுக்கு எதிரான போரில் வென்ற கையோடு முஸ்லிம்களைக் குறிவைத்த பௌத்த சிங்கள பேரினவாத
மகிந்த அரசு முஸ்லிம்கள்,தமிழர்கள் என்ற பெயர்களில் கட்சிகள் இருக்கக்கூடாது என்ற சட்டமூலத்தை பாராளு
மன்றத்தில் கொண்டுவந்த போது முதன் முதல் அதற்கெதிராக நீதிமன்றம் சென்று அச்சட்ட மூலத்தை நிறைவேற்
றாது தூக்கியெறிந்த சாதனையை முஸ்லிம் காங்கிரஸ் நிறைவேற்றியது.

இந்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதித் தேர்தலை நாம் சந்திக்கின்றோம்.எமது சமூகம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஊடாக ஜனாதிபதிகளை உருவாக்கியிருக்கின்றது.2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையொன்றை நிலைநாட்டியது.அந்த வரலாற்று முக்கியம்
வாய்ந்த அந்த விடயம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்திருந்தால் முஸ்லிம் சமூகத்திற்கு நிறைவேறியிருக்
கும்.ஆனால் புலிகளால் ரணில் தோற்கடிக்கப்பட்டதன் ஊடாக அந்த விடயம் கைகூடாமல் போனது.அந்த விடயம்
யாதெனில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களுக்கு
தனியான நிர்வாக ஏற்பாடு செய்யப்படும் என்ற உத்தரவாதமாகும்.

இலங்கையின் வரலாற்றில் அது வரையிலும் எந்த பேரினவாத கட்சியும் முஸ்லிம்களின் விடயத்தில் இந்த உத்தரவா
த்தை வழங்கியது கிடையாது.முஸ்லிம்களுக்கு தனியான ஓர் ஏற்பாடு என்பது வரலாற்றில் பதிவு செய்ய்பட்டுள்ளது
முஸ்லிம் காங்கிரஸின் சாதனையாகும்.இன்ஷா அல்லாஹ் அந்த ஏற்பாட்டை பெற்றுக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்
லிம் காங்கிரஸ் என்ற இந்த அரசியல் இயக்கம் எமது மக்களின் ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடும்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில்,ஓர் சுத்த இனவாத மகிந்த அரசை நீக்குவதன் ஊடாக முஸ்லிம்கள் உரிமையுடன்
வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் ஓர் முயற்சியிலும்,போராட்டத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.முஸ்லிம் காங்கிரஸின் முயற்சி எமது எல்லோரினதும் முயற்சியாகும்.நாம் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் காட்டுகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊடாக முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுக்கும் உரிமைப் போராட்டத்தில் எம்மையும் இணைத்துக் கொள்கின்றோம்.எதிர் காலத்தில்
முஸ்லிம் சமூகம் இலங்கையில் வாழ்வதற்கான வழியை நாம் ஒற்றுமைப்பட்டு நிலை நிறுத்துவோம்.எமது சந்ததி
இலங்கையில் கலிமாவோடு வாழ,பாங்கொலி பள்ளிவாசல்களில் கேட்க நாமே வழி திறந்து கொடுக்க வேண்டும்.
இதுவே எமதும்,முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தினதும் கடமையாகும்.

இந்தக் கடமையை நிறைவேற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற எமது இயக்கத்தில் எம்மை இணைத்துக் கொள்வதே ஒரே வழியாகும்.இந்தக் கடிதத்தின் ஊடாக உங்களுடன் எனது கருத்தை பரிமாறிக் கொள்ள சந்தர்ப்பம்
அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

ஐரோப்பாவில் இருந்து,

உங்கள் சகோதரனான முஸ்லிம் காங்கிரஸ் போராளி.


 
Updated 02.01.2010   <<Feed Back >>   <<Tell Your Friend >>  
 
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.